தமிழ்நாட்டிற்கு உள்ளே வரப்போகும்.. மிகப்பெரிய எக்ஸ்பிரஸ்வே.. நாடாளுமன்றத்திலேயே அரசு சொன்ன தகவல்!
சென்னை: சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல்கள் இருக்கும் என மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இரு முக்கிய மேம்பாட்டுப் பணிகள் நிலுவையில் உள்ளதே இதற்குக் காரணம் என்று தெரிவித்து உள்ளது.
298 கி.மீ. ஜி.எஸ்.டி. சாலையில் பெரும்பகுதி அகலப்படுத்தப்பட்டபோதிலும், கிளாம்பாக்கம் - மஹிந்திரா சிட்டி இடையேயான 19 கி.மீ. உயர்மட்டச் சாலை இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. மெட்ரோ பில்லர் இங்கே அமைப்பது குறித்த மாநில - சி.எம்.ஆர்.எல். முடிவை பொறுத்தே இந்த சாலை பணிகள் நடக்கும். இதனால்தான் இங்கே விரிவாக்கம் தாமதம் ஆகி உள்ளது என்று மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை திருச்சி சாலை பணிகள்
பரனூர் - திண்டிவனம் சாலைப் பகுதி வீராணம் பைப்லைன் மற்றும் முன்மொழியப்பட்ட செங்கல்பட்டு புறவழிச்சாலை காரணமாக மறுவடிவமைப்பு செய்யப்படுகிறது. இதனால், தினமும் 53,000 வாகனங்கள் பயன்படுத்தும் வழித்தடத்தில் விரிவாக்கம் தாமதம் ஆகி வருகிறது. அடுத்த சில மாதங்களில் முழுமையான திட்ட பணிகள் தெரிந்ததும் சாலை விரிவாக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் (NH-45) மதுராந்தகம், படலம் மற்றும் புக்கத்துறை ஆகிய இடங்களில் விபத்துகள் ஏற்படும் பகுதிகளை சரி செய்யும் வகையில் மூன்று இடங்களில் வாகன சுரங்கப்பாதைகள் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
89.26 கோடி மதிப்பிலான இந்த திட்டத்தில் கிருஷ்ணகிரி சாலை சந்திப்பில் 1,175 மீட்டர் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. சுரங்கப்பாதைகள், பைக்குகள், சைக்கிள்கள் மற்றும் கார்களுக்கு இடமளிக்கும் தனி பாதைகள் அமைக்கப்பட உள்ளது.
மிகப்பெரிய சாலை
தமிழ்நாட்டில் அமைக்கப்பட உள்ள மிகப் பெரிய எக்ஸ்பிரஸ் வேவிற்கான முதல் கட்ட பணிகள் தொடங்கி உள்ளன. இதற்கான அலைன்மெண்ட் பணிகள் தொடங்கி உள்ளன. இதுதான் ஒரு சாலையை அமைப்பதற்கான அதிகாரபூர்வ முதல்கட்ட பணிகள் ஆகும்.
இந்த பணிகளின்படி, வடக்கில் உள்ள சென்னை மற்றும் தெற்கில் உள்ள மதுரை இரண்டையும் இணைக்கும் வகையில் மிகப்பெரிய எக்ஸ்பிரஸ்வே அமைக்கப்படுகிறது. இந்த சாலை மதுரையில் தொடங்கி திருச்சி வழியாக சென்னை வரை அமைய உள்ளது. திருச்சி உள்ளிட்ட 5-6 நகரங்களில் மட்டுமே சாலை எக்சிட் ஆகும் வகையில் இந்த புதிய எக்ஸ்பிரஸ்வே அமைக்கப்பட உள்ளது.
இந்த சாலைக்கான ஆய்வு பணிகள் இந்த மாதம் தொடங்கப்பட உள்ளது. அடுத்த மாதம் இறுதியில் இதற்கான டிபிஆர் அமைக்கப்படலாம் என்கிறார்கள். தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நெரிசலைக் குறைக்கும் முயற்சியில், சென்னை, திருச்சி மற்றும் மதுரை இடையே கிரீன்ஃபீல்ட் விரைவுச் சாலையை ₹26,500 கோடி மதிப்பீட்டில் NHAI அமைக்க உள்ளது.
சென்னை டூ திருச்சி இடையிலான 6 வழி சாலை அமைப்பதற்கான பணிகள் இன்னும் தொடங்க வில்லை. இதற்கான டிபிஆர தயாரிப்பதற்கான டெண்டர் விரைவில் விடப்பட உள்ளதாம். அதோடு சேர்த்து இந்த பணிகள் மதுரை வரை நீட்டிக்கப்பட உள்ளன. சென்னை-திருச்சி வழித்தடத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, தாம்பரத்தில் இருந்து திருச்சி அல்லது தாம்பரத்தில் இருந்து 17 கிமீ தொலைவில் உள்ள சிங்கபெருமாள் கோயிலில் இருந்து கிரீன்ஃபீல்டு விரைவுச் சாலை அமைக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) முடிவு செய்துள்ளது.
விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந்த சாலை வந்தால் சென்னை டூ மதுரை 6 மணி நேரத்தில் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை திருச்சி இடையிலான பயணத்தை 5-6 மணி நேரத்தில் இருந்து 2.30-3 மணி நேரமாக குறைக்கும். அதிகபட்சம் 4 மணி நேரத்தில் சென்று விடலாம். இதில்தன மதுரை கூடுதலாக இணைக்கப்பட உள்ளது. மொத்தமாக தாம்பரத்தில் இருந்து 17 கி.மீ., தொலைவில் உள்ள சிங்கபெருமாள் கோவிலில் துவங்கி, மதுரை வரை விரைவுச்சாலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 470 கிமீ தூரத்திற்கு இந்த சாலை அமைக்கப்பட உள்ளது.
எக்ஸ்பிரஸ் வே ஏன் முக்கியம்?
தமிழ்நாட்டில் போதிய அளவில் எக்ஸ்பிரஸ் வே கட்டுமானங்கள் தொடங்கப்படாமல் இருப்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வடமாநிலங்களில் அதிக அளவில் எக்ஸ்பிரஸ் வே. கட்டப்படுவதால் தமிழ்நாடு பின்தங்கும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. இதை சரிக்கட்ட இந்த சாலை திட்டம் தொடங்கப்பட உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாட்டில் பெரிய அளவில் எக்ஸ்பிரஸ்வே இல்லை என்று புகார்கள் வைக்கப்படும் நிலையில் புதிய எக்ஸ்பிரஸ்வே தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மதுரை - சென்னை இடையே புதிய எக்ஸ்பிரஸ்வே அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜூலை 2024 நிலவரப்படி, 5,173 கிமீ (3,214.4 மைல்) நீளம் கொண்ட 48 எக்ஸ்பிரஸ்வேக்கள் இந்தியாவில் செயல்படுகின்றன, மேலும் 8,772 கிமீ கட்டுமானத்தில் உள்ளன. 2014 ஆம் ஆண்டில், நாட்டில் சுமார் 1,021 கிமீ அதிவேக நெடுஞ்சாலைகள் மட்டுமே இருந்தன. பெரிய மாநிலங்களில் தமிழ்நாட்டில்தான் இருப்பதிலேயே குறைந்த அளவில் எக்ஸ்பிரஸ்வே சாலைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் இன்னும் எக்ஸ்பிரஸ் வே கட்டுமானம் தொடங்கவில்லை. ஜூலை 2024 நிலவரப்படி, தமிழ்நாட்டில் வெறும் 94.8 கிமீ தூரத்திற்கு சென்னை - குமரி இடையே சில ஸ்ட்ரெட்ச் 6 வழி சாலையாக அமைக்கப்பட்டு உள்ளன.
-
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம்












Click it and Unblock the Notifications