போச்சு.. போச்சு.. இவி வாகனங்கள் வாங்க போறீங்களா? வைக்கப்பட்ட செக்! நிதின் கட்கரி இப்படி சொல்லிட்டாரே
சென்னை: இந்தியாவில் மக்கள் இவி வாகனங்களை கொஞ்சம் கொஞ்சமாக பயன்படுத்த தொடங்கி வரும் நிலையில், இவி வாகனங்களை வாங்க விரும்புபவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தி ஒன்றை மத்திய போக்குவரத்து நெடுஞ்சாலைதுறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மத்திய போக்குவரத்து நெடுஞ்சாலைதுறை அமைச்சர் நிதின் கட்கரி இது தொடர்பாக அளித்துள்ள பேட்டியில், மக்கள் இவி வாகனங்களை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கி உள்ளனர். மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இவி வாகனங்களை ஏற்றுக்கொள்ள தொடங்கி உள்ளனர். அதனால், இந்தியாவுக்கு இனி EV வாகனங்களில் மானியம் தேவையில்லை.

பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி 28 சதவீதமும், மின் வாகனங்களுக்கு 5 சதவீதமும் ஊக்கத்தொகையாக உள்ளது. இதுவே போதும். இதற்கு மேல் இவி வாகனங்கள் வாங்க சலுகைகள் வழங்க முடியாது.
எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்போது, வாகனங்களின் விலை குறையும். லித்தியம்-அயன் பேட்டரிகளின் விலை குறையும். லித்தியம்-அயன் பேட்டரிகள் குறையும் போது, பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் விலை உயரும். இதனால் இதில் சலுகைகள் அளிக்க வேண்டியது இல்லை.
EV துறை வளர்ந்து வருகிறது, இந்தியா விரைவில் சிறந்த EV சார்ஜிங் பாயிண்ட் உள்கட்டமைப்பைக் கொண்டிருக்கும். நெடுஞ்சாலைகளில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் விரைவில் மின்சார சார்ஜிங் பாயின்ட்கள் அமைக்கப்படும். இதனால் நீண்ட தூரம் செல்லும் இ-பஸ்கள் எந்த சிரமத்தையும் சந்திக்காது, என்று கட்கரி கூறினார்.
தமிழ்நாடு இவி வாகனங்கள்: இன்னொரு பாக்ஜகாம் தமிழ்நாட்டில் இ வாகனங்களுக்கான பாஸ்ட் சார்ஜிங் போர்டுகளை அதிகரிக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் வரும் நாட்களில் நடக்க உள்ளன. உலகம் முழுக்க இ மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இ மின்சார வாகனங்களை பயன்படுத்த மக்கள் அதிக அளவில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
இந்தியாவில் மின்சார வாகனங்களின் உற்பத்தியில் தமிழ்நாடுதான் முன்னிலை வகித்து வருகிறது. ஏற்கனவே ஆட்டோமொபைல் சாதனங்களின் உற்பத்தியில் சென்னைதான் இந்தியாவின் டெட்ராய்டு என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாட்டில் 100 இடங்களில் இ-வாகனங்களுக்கு சார்ஜிங் பாயிண்ட் அமைக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. வாகனங்களை நிறுத்தி சார்ஜ் செய்யும் விதமாக இந்த பாயிண்ட் அமைக்கப்பட உள்ளது.
சாலை ஓரம் அரசு நிலத்தில் தமிழ்நாடு முழுக்க 100 இடங்களில் சார்ஜிங் பாயிண்ட் அமைக்கப்படும். மின்சார வாரியம் சார்பாக இந்த சார்ஜிங் பாயிண்ட் அமைக்கப்படும். மின்சார வாரியம் சார்பாக இங்கே மின்சாரம் வழங்கப்பட்டு அதில் சார்ஜிங் பாயிண்ட் இயங்கும். வரும் காலங்களில் மக்கள் பயன்பாட்டை பொறுத்து இந்த சார்ஜிங் பாயிண்ட்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அதிகரிக்கப்படும்; முக்கியமாக தமிழ்நாட்டில் இ வாகனங்களுக்கான பாஸ்ட் சார்ஜிங் போர்டுகளை அதிகரிக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் வரும் நாட்களில் நடக்க உள்ளன.
டெல்லி 21
குஜராத் 53
ஹரியானா 2
கர்நாடகா 10
கேரளா 30
மகாராஷ்டிரா 13
மேகாலயா 1
தமிழ்நாடு 13 பாஸ்ட் சார்ஜர்கள் உள்ளன. இதை 100க்கும் அதிகமாக உயர்த்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாம். தமிழ்நாட்டிக் பாஸ்ட் சார்ஜர்கள் அவசியம் அதிகம் ஆகி உள்ளதால், அரசு சார்பாக இதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டு கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications