ECR போறீங்களா.. மொத்தமாக போடப்படும் 'எண்ட் கார்டு'.. விஸ்வரூபம் எடுத்த பிரம்மாண்ட உயர்மட்ட சாலை
சென்னை: திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை ஈசிஆர் சாலையில் அமையவுள்ள 15 கிலோமீட்டர் நீளமுள்ள மேம்பாலத்திற்கான ஒப்பந்தத்தை கேஎன்ஆர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இதற்கான மண் பரிசோதனை தொடங்கி உள்ளது.
சென்னையில் அமைய உள்ள நீளமான இரண்டாவது பெரிய பாலமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் (TNSHA) ரூ. 2,100 கோடி மதிப்பீட்டில், திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை 14.2 கி.மீ. நீளத்திற்கு நான்கு வழி மேம்பாலம் அமைக்க உள்ளது. இது மாநில அரசு மேற்கொள்ளும் மிக நீளமான உயர்மட்ட சாலைத் திட்டமாகும். நிலம் கையகப்படுத்துதல் மற்றும் பிற காரணங்களால் திட்டத்தின் இறுதிச் செலவு மாறக்கூடும்.

சென்னையிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை (ECR) வழியாக மாமல்லபுரம், புதுச்சேரி, கடலூர் மற்றும் பிற சுற்றுலா, புனித யாத்திரை தலங்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு இந்தத் திட்டம் போக்குவரத்து நெரிசலில் இருந்து விரைவில் நிவாரணம் அளிக்கும். TNSHA நேற்று இந்த திட்டத்திற்கான சர்வதேச டெண்டர்களை வெளியிட்டது.
மாபெரும் சாலை திட்டம்
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் (ECR) சமீபகாலமாகப் பயணிப்பவர்களுக்கு ஒரு விஷயம் கண்ணில் பட்டிருக்கும். இஞ்சம்பாக்கம் பகுதியில் சாலையின் நடுவே தடுப்புகள் (Barricades) முளைத்திருக்கின்றன. "மறுபடி என்ன தோண்டப் போறாங்க?" என அங்கலாய்த்தபடி கடப்பவர்களுக்கு ஒரு நற்செய்தி... இது வெறும் தோண்டல் அல்ல, சென்னையின் போக்குவரத்து முகவரியையே மாற்றப்போகும் ஒரு மெகா புராஜெக்ட்!
₹2,100 கோடியில் 13.5 கி.மீ மேஜிக்!
திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை சுமார் 13.5 கிலோமீட்டர் தூரத்திற்கு, நான்கு வழித்தடங்கள் கொண்ட பிரம்மாண்ட உயர்மட்டச் சாலை (Elevated Corridor) அமையவிருக்கிறது. சுமார் 2,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாகும் இந்தச் சாலை, இன்னும் மூன்று ஆண்டுகளில் மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆரம்பமானது மண் சோதனை
தற்போது இஞ்சம்பாக்கத்தில் நாம் பார்க்கும் அந்தத் தடுப்புகள் மண் சோதனைக்காக (Soil Test) அமைக்கப்பட்டவை. இந்த 13.5 கி.மீ நீளப் பாதையில் மொத்தம் 430 இடங்களில் ராட்சதத் தூண்கள் (Pillars) அமையவுள்ளன. அந்த ஒவ்வொரு புள்ளியிலும் மண் எந்தத் தன்மையில் இருக்கிறது என்பதை அறியும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
இது குறித்துப் பேசிய திட்டப் பொறியாளர் ஒருவர், "சுமார் 25 மீட்டர் ஆழம் வரை துளையிட்டு அங்கிருக்கும் மணல், களிமண் மற்றும் பாறைகளின் தன்மையை ஆய்வு செய்கிறோம். இந்த மாதிரிகள் (Samples) எங்கள் வடிவமைப்புத் துறைக்கு அனுப்பப்படும். மண்ணின் உறுதித் தன்மைக்கு ஏற்பவே, தூண்களின் அஸ்திவாரம் மற்றும் கட்டுமான அமைப்புகள் பிளான் செய்யப்படும்" என்கிறார்.
நிம்மதிப் பெருமூச்சில் சென்னைவாசிகளும், சுற்றுலாப் பயணிகளும்
வார இறுதி நாட்களில் இசிஆர் சாலையில் பயணிப்பது என்பது ஒரு பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. குறிப்பாகத் திருவான்மியூர் சிக்னலைக் கடப்பதற்கே பொறுமை காற்றில் பறந்துவிடும். இந்த உயர்மட்டச் சாலை பயன்பாட்டிற்கு வரும்போது:
போக்குவரத்து நெரிசல் கணிசமாகக் குறையும்.
பயண நேரம் பாதியாக மிச்சமாகும்.
புதுச்சேரி மற்றும் தென் மாவட்டங்களுக்குச் செல்பவர்கள் 'ஈஸியாக' கடந்து செல்லலாம்.
அடுத்த சில மாதங்களுக்கு இந்த மண் சோதனைப் பணிகள் தொடரும் என்பதால், சாலையில் மெதுவாகச் செல்லுமாறு வாகன ஓட்டிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சென்னையின் 'மகுடமாக' அமையப்போகும் இந்த உயர்மட்டச் சாலைக்காகச் சில சிரமங்களைப் பொறுத்துக் கொள்ளலாம் என்கிறார்கள் பகுதிவாசிகள்!
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட்












Click it and Unblock the Notifications