Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இனி சென்னை டூ பெங்களூர் போறது ரொம்ப கஷ்டம் போலயே.. மொத்தமாக உயரும் டோல் கட்டணம் .. மத்திய அரசு ஷாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை டூ பெங்களூர் இடையிலான தேசிய நெடுஞ்சாலை பயணம் விரைவில் அதிகரிக்க போகிறது. இந்த மாத இறுதியில் டோல் கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளது.

மத்திய அரசின் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) சென்னை நகரின் புறநகரில் உள்ள நான்கு டோல் பிளாசாக்களில் பயனர் கட்டணத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதால், இந்த மாத இறுதியில் இருந்து சாலை மார்க்கமாக சென்னைக்கு செல்வது அல்லது அங்கிருந்து செல்வது செலவு அதிகமாக உள்ளது.

Toll Gate Price Increase Travelling to or from Chennai by road will be costlier from the end of this month

ஒரு பயணத்திற்கு 5 முதல் 20 வரை உயர்வு இருக்கும். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள பல சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு காரணமாக பெங்களூரு மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கான பயணச் செலவு ஏப்ரல் 1 முதல் 150 ஆக உயரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியக் கூட்டணி சார்பாக மத்தியில் ஆட்சி அமைத்தால், அனைத்து சுங்கச்சாவடிகளையும் அகற்றுவோம் என்று மக்களவைத் தேர்தல் அறிக்கையில் திமுக வாக்குறுதி அளித்துள்ளது. இந்த வாக்குறுதிகளுக்கு மத்தியில் இந்தக் கட்டணச் உயர்வு மத்திய அரசு மூலம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் ஏற்கனவே இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. முதலாவதாக, ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வாகனம் பயணிக்கும் தூரத்தின் அடிப்படையில் இப்போது டோல் கட்டணம் நிர்ணயிக்கப்படும். இரண்டாவதாக, ஆரம்ப மூலதன முதலீடு முழுமையாகப் பெறப்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் 40% குறைக்கப்படும். என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை டூ பெங்களூர் இடையிலான தேசிய நெடுஞ்சாலை பயண கட்டணம் தற்போது உள்ளத்தில் இருந்து 5- 20 ரூபாய் கூடுதலாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

டோல் கட்டண முறை; இது போக , ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வாகனம் பயணிக்கும் தூரத்தின் அடிப்படையில் இப்போது டோல் கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூலை இயக்க, அனைத்து வாகனங்களுக்கும் ஜிபிஎஸ் (குளோபல் பொசிஷனிங் சிஸ்டம்) இருப்பது அவசியம். அரசாங்கம் திட்டமிட்டுள்ளபடி, இது மூன்றாம் தலைமுறை (3ஜி) மற்றும் ஜிபிஎஸ் இணைப்புடன் கூடிய மைக்ரோ-கண்ட்ரோலரின் உபகரணங்களின் மூலமாக இயங்கும்.

ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்லும் வாகனங்களின் ஜி.பி.எஸ் ரெக்கார்டுகளை அரசு பெற்று அவற்றை தொடர்ந்து கண்காணிக்க முடியும். எனவே, அவர்கள் பயணிக்கும் வாகனங்களின் வழித்தடத்தையும், அவர்கள் எடுக்கும் சுங்கச்சாவடிகள் ரூட் என்ன என்பதையும் அரசு தெரிந்து கொள்ளும். அவர்கள் எத்தனை டோல் கேட்களைக் கடந்து செல்கிறார்கள் என்பதைச் சரிபார்த்து மொத்த டோல் வரியைக் கணக்கிடலாம்.

நேரடியாக டோல் கட்டணம்: அதாவது வாகனங்கள் எந்த இடத்திற்கு எல்லாம் பயணம் செய்துள்ளது என்பதை கண்டுபிடித்து அதன் மூலம் ஜிபிஎஸ் பயன்படுத்தி நேரடியாக டோல் கட்டணம் வசூலிக்கப்படும்.

விரைவில், இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் செயற்கைக்கோள் அடிப்படையிலான டோல் கட்டண முறைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. டோல் கட்டண முறைகேடுகளை தவிர்ப்பது, பொய்யான டோல் கட்டண முறையை தடுப்பதற்காக இந்த முறை கொண்டு வரப்பட்டு உள்ளது.

நாடு முழுக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்ஹெச்ஏஐ) விரைவில் புதிய முறையை அறிமுகப்படுத்தும் என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். மார்ச், 2024க்குள் தேசிய நெடுஞ்சாலைகளில் செயற்கைக்கோள் அடிப்படையிலான கட்டண முறையை NHAI அறிமுகப்படுத்தும் என்று அமைச்சர் நிதின் கட்கரி ராஜ்யசபாவில் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+