இந்த தவறை மட்டும் பண்ணவே பண்ணாதீங்க.. ஒரு வருஷத்துக்கு வாகன ரிஜிஸ்ட்ரேஷன் காலி.. போலீஸ் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: 18- வயதுக்குட்பட்டவர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி அளித்தால், அந்த வாகனத்தின் பதிவை (Registration) நிறுத்தி வைப்போம் என்று தமிழ்நாடு போக்குவரத்து போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

கடந்த வாரம் காரைக்குடியில் காசிம் என்பவர் 18 வயது பூர்த்தி அடையாத சிறுவர் ஒருவருக்கு தனது KTM என்ற இருசக்கர வாகனத்தை ஓட்டுவதற்கு கொடுத்த குற்றத்திற்காக போலீஸ் அவர் மீது நடவடிக்கை எடுத்தது. காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தால் sec. 199(A) & 129 MV Act -ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Traffic Registration will be removed for a year for this mistake in Tamil Nadu: Traffic rules

மேற்படி வழக்கில் அந்த சிறுவருக்கு இருசக்கர வாகனத்தை இயக்குவதற்காக கொடுத்துள்ள குற்றமானது நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு இந்நீதிமன்றம் ரூ.26,000/- அபராதமும் மற்றும் 12 மாத காலத்திற்கு இந்த இரு சக்கர வாகனத்தின் பதிவை (Registation) நிறுத்தி வைக்கவேண்டும் (To be suspended) என்று 02.02.2024ல் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் அபராதத் தொகையை காசிம் த-பெ. பிரான்மலை என்பவர் இந்நீதிமன்றத்தில் செலுத்திவிட்டார். எனவே 12 மாத காலத்திற்கு மேற்படி இருசக்கர வாகனத்தின் பதிவை (Registation) நிறுத்தி வைக்கவேண்டும் எனவும் மோட்டார் வாகன சட்டப்பிரிவு 199(A)ன் கீழ் உத்தரவிடப்படுகிறது என்று போலீசார் அறிவித்துள்ளனர்.

போலீஸ் எச்சரிக்கை; இந்த நிலையில்தான் 18- வயதுக்குட்பட்டவர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி அளித்தால், அந்த வாகனத்தின் பதிவை (Registation) நிறுத்தி வைப்போம் என்று தமிழ்நாடு போக்குவரத்து போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

இது தொடர்பாக போலீசார் விடுத்துள்ள எச்சரிக்கையில், 8- வயதுக்குட்பட்டவர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி தரும் எண்ணத்தில் உள்ள பெற்றோர்களா நீங்கள்? 18-வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி அளிக்கும் பெற்றோருக்கு தண்டனை உறுதி.

12 மாதங்களுக்கு வாகன பதிவு நிறுத்தி வைக்கப்படும். கவனம் தேவை பெற்றோர்களே என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

போக்குவரத்து விதி: தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து விதிகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக சென்னை போன்ற பெருநகரங்களில் போக்குவரத்து விதிகள் தீவிரமாக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக சாலை விதிகளை பலர் மீறுவதாக புகார்கள் அதிகரித்து வருகின்றன. முக்கியமாக சாலைகளில் அபாயகரமான ஸ்டண்ட்களை செய்வதாகவும் புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

விதி மீறல்: டிடிஎப் வாசன் போன்றவர்கள் சாலைகளில் அபாயகரமாக ஸ்டண்ட்களை செய்வதாகவும் புகார்கள் வைக்கப்பட்டு வந்தது. சாலை போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று சமீபத்தில் தமிழ்நாடு போக்குவரத்து துறை போலீசாரும் எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.

முக்கியமாக சென்னையில் அதிகம் இப்படி நடக்கிறது. அதோடு சிலர் சாலைகளில் அபாயகரமான ஸ்டண்ட்களை செய்வதாகவும் புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்தான் சமீபத்தில் தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு குற்றங்களுக்கான, விதி மீறல்களுக்கான அபராத தொகைகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. அந்த வகையில் சென்னையில் போக்குவரத்து விதி மீறல் செய்பவர்களை கண்காணிக்க, அவர்களுக்கு அபராதம் விதிக்க புதிய வழிமுறை ஒன்றை தமிழ்நாடு அரசு கையில் எடுத்துள்ளது.

புதிய விதி; இந்த நிலையில்தான் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள், வண்ண விளக்குகளை பொருத்தி பேருந்துகளை இயக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் வாகனங்களில் பல வண்ண விளக்குகள் பொறுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. பல வண்ண ஒளி விளக்குகள் எதிரில் வரும் வாகன ஓட்டுநரின் கவனத்தை சிதறடிப்பதால் போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சோதனையின் போது விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+