பைக் போக அனுமதி கிடையாது.. சென்னையில் வரும் மிகப்பெரிய சாலையில்.. வருது புது கட்டுப்பாடு.. போச்சு
சென்னை: சென்னையில் வரவிருக்கும் சென்னை பெரிஃபெரல் ரிங் ரோட்டில் இரு சக்கர வாகனங்கள் சர்வீஸ் ரோடுகளில் மட்டும் அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது மெயின் சாலையில் இரு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை துறையால் 132.87 கிமீ தூரத்திற்கு சென்னை பெரிஃபெரல் ரிங் ரோடு சாலை அமைக்கப்பட உள்ளது. சென்னை பெரிஃபெரல் ரிங் ரோடு (CPRR) என்பது, எண்ணூர் துறைமுகம் - மகாபலிபுரத்தை இணைக்கும் வகையில் தமிழ்நாட்டில் 10 வழி அணுகல் கட்டுப்பாட்டு விரைவுச் சாலையாகும். காட்டுப்பள்ளி வரை இந்த சாலை அமைக்கப்படுகிறது.

சாலை எப்படி இருக்கும்?: மொத்த மதிப்பிடப்பட்ட செலவு: ரூ. 12,301 கோடி
திட்டத்தின் நீளம்: 132.87 கிமீ (தோராயமாக)
பாதைகள்: 10 வழி பாதைகள் (மெயின் சாலை 6 பாதைகள் + இருபுறமும் 2 சேவைப் பாதைகள்)
வடிவமைப்பு வேகம்: மணிக்கு 120 கிமீ
நிலை: எண்ணூர் - தச்சூர் பிரிவு கட்டுமானத்தில் உள்ளது
கடைசி தேதி: 2025
உரிமையாளர்: தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் (TNRDC)
திட்ட மாதிரி: பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானம் (EPC)
நிதி ஆதாரங்கள்: பிரிவு 1 (25.31 கிமீ எண்ணூர் துறைமுகம் முதல் தச்சூர் வரை): ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனம் (JICA, 40,074 மில்லியன் யென் கடன்)
இத்திட்டத்தை விரைந்து முடிக்க எண்ணூர் காமராஜர் துறைமுகம், காட்டுப்பள்ளி அதானி, எல் அண்ட் டி உள்ளிட்ட தனியார் துறைமுக நிறுவனங்கள் தமிழக அரசை வலியுறுத்தின. இந்த சாலை முடிந்தவுடன் சென்னையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் காற்று மாசுபாடு கணிசமாக குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..
ரிங் ரோடு: 5 பிரிவுகளைக் கொண்ட இந்த புதிய கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ்வே சென்னையின் 4வது ரிங் ரோடாக இருக்கும். சிங்கபெருமாள்கோயில், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், தாமரைப்பாக்கம், பெரியபாளையம், புதுவொயல், காட்டுப்பள்ளி ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் ரூ.12,301 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
இந்த விரைவுச்சாலை கட்டுமானத்திற்கு 2025 ஆம் ஆண்டு காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. NHAI இன் கட்டுப்பாட்டின் கீழ் கட்டுமானத்தில் உள்ள பெங்களூரு சென்னை விரைவுச்சாலை மற்றும் சித்தூர் - தச்சூர் விரைவுச்சாலை திட்டங்களுடன் இது இணைக்கப்படும். அதன் விரிவான திட்ட அறிக்கை (DPR) ஏற்கனவே தயாரிக்கப்பட்டுவிட்டது.
பைக் அனுமதி இல்லை: சென்னையில் வரவிருக்கும் சென்னை பெரிஃபெரல் ரிங் ரோட்டில் இரு சக்கர வாகனங்கள் சர்வீஸ் ரோடுகளில் மட்டும் அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது மெயின் சாலையில் இரு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
பிரிவுகள் 2 & 3 (56.2 கிமீ தச்சூர் முதல் செங்காடு வரை): ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB, USD 378 மில்லியன் கடன்) மற்றும் சர்வதேச வளர்ச்சிக்கான OPEC நிதி (OFOD, USD 100 மில்லியன் கடன்) ஆகிய உதவிகள் மூலம் இந்த சாலை அமைக்கப்பட உள்ளது.
பெரிய சாலை: சென்னையில் அமைக்கப்பட உள்ள இந்த 10 வழி சாலை இந்தியாவிலேயே பெரிய சாலையாக இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் அமைக்கப்படும் சாலைகளில் மட்டுமன்றி.. உலகில் அமைக்கப்படும் சாலைகளிலேயே பெரிய ரிங் ரோடு சாலையாக இந்த சாலை அமைக்கப்பட உள்ளது.
ஆம் உலகில் எங்கும் 132 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரிங் ரோடு அமைக்கப்படவில்லை. இந்தியாவில் மட்டுமே முதல்முறையாக.. அதுவும் சென்னையில் இந்த சாலை அமைக்கப்பட உள்ளது. மாமல்லபுரத்தில் இருந்து காட்டுப்பள்ளி துறைமுகத்தை இணைக்கும் 10 வழி சென்னை அவுட்டர் சாலையின் பணிகள் இரண்டு கட்டமாக நிறைவடைந்து ஜனவரியில் போக்குவரத்துக்கு திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications