ஹிந்தி இன்.. தமிழ் "அவுட்".. பெங்களூர் - சென்னை எக்ஸ்பிரஸ்வேயில் அட்டூழியம்.. என்னங்க இது?
சென்னை: சென்னை - பெங்களூர் இடையே அமைக்கப்படும் எக்ஸ்பிரஸ்வே சாலையில் மும்மொழி கொள்கை பின்பற்றப்பட்டு உள்ளது.
இதில் கர்நாடக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அது தமிழ் அதிகம் பேசும் இடங்களாக இருந்தாலும் தமிழில் தகவல் பலகைகள் வைக்கப்படவில்லை. அதே போல் தமிழ்நாட்டு எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அது கன்னடம் அதிகம் பேசும் இடங்களாக இருந்தாலும் கன்னடத்தில் தகவல் பலகைகள் வைக்கப்படவில்லை. மாறாக இந்தி மூன்றாவது மொழியாக வைக்கப்பட்டு உள்ளது.

உதாரணமாக சென்னை 10 கிமீ என்று கர்நாடக எல்லையில் இந்த எக்ஸ்பிரஸ்வே சாலையில் போர்டு வைக்கப்பட்டு உள்ளது. சென்னை 10 கிமீ தூரத்தில் இருந்தாலும் தமிழில் பெயர் பலகை இல்லாமல் இந்தி - ஆங்கிலம் - கன்னடத்தில் பலகை உள்ளது. தமிழ்நாடு எல்லைக்குள் கன்னடம் இல்லாமல் போய் உள்ளது. இந்தி பயன்படுத்த வேண்டும் என்பதால் தமிழ் - கன்னடம் முக்கியமான இடங்களில் புறக்கணிக்கப்பட்டு உள்ளன .
சாலை வேக கட்டுப்பாடு; இந்த சாலையில் கார்களுக்கு 100 கிலோ மீட்டர் வேகமும், பேருந்துகளுக்கு 120 கிலோ மீட்டர் வேகமும் லிமிட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாலை NH-7 என்று அழைக்கப்படும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் exclusive புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
சென்னை - பெங்களூர் இடையே அமைக்கப்படும் எக்ஸ்பிரஸ் வே சாலை தொடர்பான முக்கியமான அப்டேட் வெளியாகி உள்ளது. கர்நாடகாவில் 60 சதவிகித பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆந்திர பகுதியில் மட்டுமே பணிகள் மெதுவாக நடக்கின்றது. இதனால் அந்த பகுதியில் டிசம்பரில் சாலை திறக்கப்படும். அதற்கு முன் உள்ள தமிழ்நாடு பகுதிகள் மற்றும் கர்நாடக பகுதிகளில் அதற்கு முன்பாகவே சாலையை திறக்க முடிவு செய்துள்ளனர். பெரும்பாலும் ஜூலை மாதமே சாலையை திறக்க முடிவு செய்துள்ளனர்.
சாலை பணிகள் தீவிரம்: பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே சென்னை பெங்களூர் இடையே விரைவுச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சாலை வந்த பின் பெங்களூர் - சென்னை இடையிலான பயணம் அடியோடு மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியமாக தற்போது சென்னை பெங்களூர் இடையே பயணம் செய்ய 7 மணி நேரம் ஆகிறது. இந்த விரைவுச்சாலை வரும் பட்சத்தில் போக்குவரத்து 4 மணி நேரமாக குறையும். இதனால் மக்கள் இன்னும் வேகமாக, எளிதாக பயணம் செய்ய முடியும்.
பாலங்கள்: சென்னை பெங்களூரை இணைக்கும் சாலையில் உள்ள உயர் மட்ட சாலைகளாக அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு கட்டமாக 23.2 கிமீ நீளமுள்ள மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் இடையேயான மேம்பாலப் பணி இந்த நிதியாண்டு இறுதிக்குள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த ஆண்டுக்கான வேலைத் திட்டத்தில் இந்த திட்டம் சேர்க்கப்பட்டுள்ளது. ₹3,500 கோடி மதிப்பில் இந்த உயர்மட்ட சாலை அமைக்கப்பட உள்ளது. அதாவது 23.2 கிமீ நீளமுள்ள மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் இடையே ஒரே நீளமாக பாலம் அமைக்கப்படும். இந்த பகுதியை இப்போது கடக்க 30 நிமிடம் குறைந்தபட்சம் ஆகிறது. பாலம் கட்டப்பட்டால் 10 -15 நிமிடத்தில் இந்த பகுதியை கடக்கலாம்
இடை இடையே மக்கள் வெளியேற, உள்ளே வர இணைப்பு பாலங்கள் அமைக்கப்படும். 6 வழி சாலை கொண்ட மிக பிரம்மாண்ட பாலம் ஆகும். இதற்கான முழு ரிப்போர்ட் விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. . இந்த சாலையில் சூப்பர் வீடியோ இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாக வெளியாகி உள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
What is the use of Nagari script on the Bengaluru-Chennai highway?
— ಕಣಾದ (@Metikurke) May 16, 2024
If we really need to use three languages to help Kannada and Tamil people, along with travelers from outside KA-TN, between Bengaluru and Chennai, it should be Kannada, Tamil, and English, right? Only then will… https://t.co/PWIQoL86q5 pic.twitter.com/nokHS8TLs0
அதன்பின் இதற்கான டெண்டர் விடப்படும். இந்த வருட இறுதிக்குள் இதற்கான பணிகள் தொடங்கும். சென்னை - பெங்களூர் செல்ல தற்போது பயன்படுத்தப்படும் ஹைவேஸின் மேல் இந்த பாலம் கட்டப்படும். நடுவில் ஒரு பில்லர் வைத்து மெட்ரோ பாணியில் இந்த பாலம் அமைக்கப்படும்.
இரண்டு கட்டங்களாக இந்த பாலம் அமைக்கப்படும். ஒன்று மதுரவாயலில் இருந்து சென்னை வெளிவட்ட சாலை வரை அமைக்கப்படும். மற்றொன்று அந்த இடத்திலிருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை அமைக்கப்படும். இந்த புதிய பாலம் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடிக்கு முன்னால் நெடுஞ்சாலையில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நெடுஞ்சாலையில் தினமும் சுமார் 1.15 லட்சம் கார் பயணம் செய்கிறது. இது பீக் ஹவர்ஸில் சுமார் 1 லட்சம் வாகனங்கள் இங்கே பயணம் செய்கின்றன. இந்த பாலம் கட்டுமானம் முடிந்ததும் சுமார் 80 சதவிகித வாகனங்கள் இந்த பாதையில் கீழே செல்வதற்கு பதிலாக மேலே உள்ள பாலத்தில் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாலை வளர்ச்சி; சென்னை - பெங்களூர் இடையே அமைக்கப்படும் எக்ஸ்பிரஸ்வே சாலை தொடர்பான முக்கியமான அப்டேட் வெளியாகி உள்ளது. இந்த சாலை எவ்வளவு தூரம் கட்டப்பட்டு உள்ளது என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன.
கர்நாடகாவில் 71 கிமீ பிரிவு - 87% நிறைவு
ஆந்திரப் பிரதேசத்தில் 85 கிமீ பிரிவு - 40% நிறைவு
தமிழ்நாட்டில் 106 கி.மீ பிரிவு - 55% நிறைவு
இந்த ஆண்டு இறுதிக்குள் 258 கிமீ 6 வழி எக்ஸ்பிரஸ் முழுவதையும் முடிக்க NHAI திட்டமிட்டுள்ளது.
வேகம் எடுக்கும் பணிகள்: சென்னை பெங்களூர் விரைவுச்சாலை ரூ.18 ஆயிரம் கோடி செலவில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மொத்தம் 258 கி.மீட்டர் தூரத்துக்கு இந்த மிக நீண்ட சாலை அமைக்கப்பட உள்ளது. தென் இந்தியாவின் தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் வழியாக இந்த சாலை 4 வழிச்சாலையாக உயர் தரத்தில் அமைக்கப்படுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய பசுமை வழி சாலைகளில் இதுவும் ஒன்றாகும்.












Click it and Unblock the Notifications