சென்னை வாகன ஓட்டிகளுக்கு வந்த ஷாக் செய்தி.. ஆசை ஆசையா இருந்தாங்களே.. கடைசியில் இப்படி ஆகிடுச்சே!
சென்னை: மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம், பல்வேறு சிக்கல்களை மேற்கோள் காட்டி, முக்கிய தமிழக திட்டங்களுக்கான காலக்கெடுவை தள்ளி வைத்துள்ளது. ₹5,510 கோடியில் சென்னை துறைமுகம்-மதுரவாயல் உயர்த்தப்பட்ட பாலத்திற்கான கட்டுமானத்தில் பல அனுமதிகள் இன்னும் வழங்கப்படவில்லை.
இந்த திட்டத்திற்கு இப்போது பிப்ரவரி 2027 இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு இன்னும் அனுமதி வழங்காததால் ₹1,835 கோடியில் முகையூர் - மரக்காணம் நான்கு வழிச்சாலை திட்டம் அடுத்த ஆண்டுக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பெங்களூரு-சென்னை விரைவுச் சாலை மற்றும் மதுரை ரிங் ரோடு ஆகியவை தாமதம் ஆகி உள்ளன.

மதுரவாயல் பாலம்:
மதுரவாயல் - துறைமுகம் பாலம் திட்டம் கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கிய நிலையில் தற்போது பணிகள் நடக்கின்றன. அங்கே தற்போது தூண்களை உடைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது. இதற்கான இரண்டாம் கட்ட பணிகள்.. அதாவது ஏற்கனவே கட்டிய தூண்களை இடிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. 14 ஆண்டுகளாக முடங்கி இருந்த இந்த திட்டத்தில் உச்சபட்ச வேகத்தில் சென்று கொண்டு இருக்கின்றது.
இதற்கான டெண்டர் விடப்பட்ட நிலையில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்து பணிகள் தொடங்கி உள்ளன. சென்னையில் தற்போது பல்வேறு பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. சாலைகள் சரி செய்யப்பட்டு வருகின்றன. புதிய சாலைகள் போடப்பட்டு வருகின்றன. சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரை கூட பாலம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடக்க உள்ளன.
இந்த நிலையில்தான் இன்னொரு பக்கம் மதுரவாயல் பாலத்திற்கான கட்டுமானம் தொடங்கி உள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைத்து துறைமுகத்திற்கு கூடுதல் ஏற்றுமதி, இறக்குமதியை மேற்கொள்ள வைத்து, வருமானத்தை பெருக்கும் வகையில் திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் கருணாநிதி மூலம் 2009ல் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் என்பது திமுகவின் கனவு திட்டம் ஆகும். சரியாக சொல்ல வேண்டும் என்றால் கருணாநிதியின் கனவு திட்டமாக இது இருந்தது. ஆனால் 14 வருடங்களாக இந்த திட்டம் தொடங்கப்படாமல் முடக்கப்பட்டு இருந்தது.
சென்னையில் கட்டப்பட உள்ள இந்த மதுரவாயல் பாலம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட உள்ளது. இதற்கான டெண்டர் சமீபத்தில் விடப்பட்ட நிலையில், J Kumar Infraprojects என்ற நிறுவனம் வென்றுள்ளது. ஏற்கனவே டெண்டர் 1, 2, 4 ஆகியவற்றை கைப்பற்றிய இந்த நிறுவனம் தற்போது டெண்டர் 4ஐயம் கைப்பற்றி உள்ளது.
சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ் வே சாலை:
சென்னை பெங்களூர் இடையிலான எக்ஸ்பிரஸ் எப்போது திறக்கப்படும் என்பது தொடர்பான முக்கியமான தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக அதிர்ச்சி அளிக்கும் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.
2025.. செப்டம்பர் மாதத்திற்குள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்.. இந்த திறப்பு தேதி தள்ளிப்போகிறது. அதன்படி இந்த வருட கடைசியில் அதாவது டிசம்பர் மாதம்தான் இந்த எக்ஸ்பிரஸ் வே முழுமையாக திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டிற்கு உள்ளே திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக மொத்தம் 105.7 கிமீ தூரம் செல்லும் வகையில் இந்த நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. பெங்களூரு-சென்னை எக்ஸ்பிரஸ்வே (BCE) அமைப்பதற்கான 65% பணிகள் தமிழகத்தில் நிறைவடைந்துள்ளன.
தமிழ்நாட்டு பகுதியில்.. இந்த விரைவுச் சாலை ஸ்ரீபெரும்புதூரில் தொடங்கி ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள குடிபாலாவில் முடிவடையும். இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) தகவல்களின்படி, தமிழ்நாடு மாநிலத்திற்குள் நடக்கும் பணிகள் ஆகஸ்ட் 2025 க்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டிசம்பருக்கு தள்ளிப்போய் உள்ளது. இது சென்னை மற்றும் பெங்களூரு இடையேயான பயண நேரத்தையும் தூரத்தையும் கணிசமாகக் குறைக்க உதவும்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
டோல் கட்டணத்தைத் தவிர்க்க.. இதை மட்டும் பண்ணாதீங்க.. மத்திய அரசின் வார்னிங்.. கவனம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications