"யாருங்க இது?".. நிலவுக்கு நெருப்பென்று பெயர் (6)
- சுதா அறிவழகன்
"மலர் நீங்களா..."
"யாருங்க இது" இது ப்ரீத்தி
"சொல்றேன்.. வாங்க மலர்.. என்ன இந்தப் பக்கம்"
"அதை நான் கேட்கணும்.. இங்கதான் நான் ஒர்க் பண்றேன்.. டாக்டரா"
"ஓ.. அப்படியா.. கிரேட்"
"ஏங்க யாருங்க இது.." மீண்டும் ப்ரீத்தி
"ப்ரீத்தி.. இவங்க மலர் விழி.. என்னோட ஓல்ட் பிரண்ட். பட் ரொம்ப நாளாச்சு பார்த்து.. இப்பத்தான் மறுபடியும் சந்திக்கிறோம்" சுனிலின் பேச்சில் ஒரு நடுக்கம் இருப்பதை உணர்கிறாள் ப்ரீத்தி.
"ஓ.. ஓகே.." சுரத்தே இல்லாமல் வந்தது ப்ரீத்தியின் குரல். .விழிகள் இன்னும் மலர் மீது.
மலருக்கும் இது ஆச்சரியம்தான்.. சுனிலை இங்கு பார்ப்போம் என்று அவளும் எதிர்பார்க்கவில்லை.. உள்ளுக்குள் தெறித்த வியப்பு, ஆச்சரியம் என கலந்து கட்டிய உணர்வுகளை சற்றே அடக்கியபடிதான் அவள் பேசிக் கொண்டிருந்தாள். அதை சுனிலும் உணராமல் இல்லை.

"சரி.. இவங்க யாரு சுனில்.. உங்களுக்கு உறவா"
இப்போது சுனிலின் முகம் பேயடித்தாற் போல ஆனது.. அதைப் பார்த்து மேலும் குழம்பினாள் ப்ரீத்தி.. ஏன் இப்படித் தவிக்கிறான் இவன் என்ற குழப்பம் அவளுக்குள் அலையடித்தது.
மலருக்கோ சுனிலின் பதிலை கேட்க ஆர்வம் பெருக்கெடுத்தது.. அவன்தான் கடும் தவிப்புக்குள்ளாகி விட்டானே.. உடனே வருமா பதில்!
தட்டுத் தடுமாறியபடி.. "மலர்.. இவங்க பேரு ப்ரீத்தி.. ஆக்சிடன்ட் ஆகி இங்க வந்து அட்மிட் ஆகியிருக்காங்க"
"ஓ.. அப்படியா ரிலேஷனா" விடாமல் விரட்டினாள் மலர்.
"ஆ.. ஆமா.. மலர்.. ரிலேஷன்தான்.. தூரத்து ரிலேஷன்" பொத்தாம் பொதுவாக கூறினான் சுனில்.
இந்தப் பதில் மலருக்கு திருப்தி தந்ததோ இல்லையோ நிச்சயம் ப்ரீத்தி திருப்தி அளிக்கவில்லை.. ஏன் இப்படி மொழுகணும்.. லவ்வர்னு சொல்ல வேண்டியதுதானே என்று முகத்தை இறுக்கிக் கொண்டாள் அமைதியாக.
"சரி.. நீங்க இருங்க.. நான் ரவுண்ட்ஸ் போயிட்டிருக்கேன்.. முடிச்சுட்டு வர்றேன்.. இருப்பீங்கள்ல.. என்றபடி கிளம்பினாள் மலர்..
"கொஞ்ச நேரம் இருப்பேன்.. நீங்க போயிட்டு வாங்க" என்று விரட்டாத குறையாக மலரைக் கிளப்பினான் சுனில்.
மலரும் புன்னகையை சிந்தியபடி அங்கிருந்து அகன்றாள்..
அப்படியே ப்ரீத்தி பக்கம் திரும்பினான் சுனில்.. அங்குதான் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டுள்ளதே.. ஆனாலும் முகத்தை அமைதியாக வைத்திருந்தாள் அவள்.. சுனிலுக்கும் அது புரியாமல் இல்லை.
"யார் சுனில் அது.. உங்களுக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்களா" நக்கலாக வந்து விழுந்தது கேள்வி.
"ரொம்பவெல்லாம் இல்லை.. கொஞ்சம்தான்.. பழைய பிரண்ட்.. ரொம்ப வருஷமாச்சு.. இப்பத்தான் மறுபடியும் பார்க்கிறேன்" பதிலில் ஒரு பிடிப்பே இல்லாமல் சுனில் நழுவியது ப்ரீத்திக்கு மட்டுமல்ல.. சுனிலுக்குமே நல்லாத் தெரிந்தது.
"அப்படியா.. பின்ன ஏன் பதட்டமா இருக்கீங்க.. ஏதாவது பிரச்சினையா உங்களுக்குள்ள" விடாமல் கொக்கியைப் போட்டாள் ப்ரீத்தி.
"சேச்சே.. நீ ஏன் இப்படி சிபிஐ மாதிரி கேள்வி கேக்கறே.. சாதாரண பிரண்ட்தான்.. டச்செல்லாம் இல்லை.. ரொம்ப நாளா பாக்கவே இல்லை நீ வேற " என்றான் லேசான எரிச்சலைக் காட்டியபடி.
கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பேசிய சுனில் போல இப்போது தெரியவில்லை ப்ரீத்திக்கு. காரணம் அந்த இனிமையை அவனது பேச்சில் இப்போது காண முடியவில்லை.. இது சுனிலுக்கும் உறைத்தது போல.. சட்டென சுதாரித்து, பேச்சை மடை மாற்றினான்.
"ரிலாக்ஸ் ப்ரீத்தி.. அவங்களை விடு.. நாம பேசிட்டிருந்ததுக்கு வா.. என்னை லவ் பண்றியா" .. சிரிப்புக்கு மாறியது சுனிலின் முகம்.
"நான்தான் உங்களோட தூதூதூதூரத்து ரிலேஷன் ஆச்சே.." என்று நக்கலாக சிரிப்பை வீசினாள் பதிலுக்கு.
"என்ன நக்கலடிக்கிறியா.. " இது சுனில்.
"ஆமா.. என்ன திடீர்னு வா போன்னு பேசறீங்க" என்று கரெக்டாக பாயின்ட்டைப் பிடித்தாள் ப்ரீத்தி. ஆல் லேடீஸ் இப்படித்தான் போல.. கவனம் சிதறாமல் காரியத்தில் இருக்காங்க.
"அதுவா.. அதுதான் நெருங்கியாச்சே.. அதான்.. ஏன் கூப்பிடக் கூடாதா.." என்று கொஞ்சலான புன்னகையை வீசினான் சுனில்.
அடப் பாவி.. அந்த சிரிப்பை மட்டும் காட்டதாடா குரங்குப் பையா.. என்னால இயல்பா இருக்க முடியலை என்று நெளிந்தபடி மனசுக்குள் சுனிலின் தலையில் குட்டு வைத்தாள் ப்ரீத்தி.. கூடவே.." அதெப்படி கூப்பிடலாம்.. நான்தான் பெர்மிஷன் கொடுக்கலையே " என்று முறுக்கிக் கொண்டாள்.
திடீரென கதவைத் திறந்து கொண்டு ஒரு சத்தம். வேகமாக கதவைத் திறந்தபடி உள்ளே நுழைந்த அந்த கரிய உருவத்தின் கையில் பெரிய சைஸ் கத்தி.. அப்படியே வேகமாக பாய்ந்தான் அவன்.. சுனில் அதிர்ச்சியில் உறைய.. ப்ரீத்தி வீலென்று அலற.. பெரும் களேபரம்...!
(தொடரும்)
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications