சுஹாசினியின் கையில் வாட்ச் கவனிச்சீங்களா? கண்ணகியின் சிலம்பை உடைக்கும்போது.. போட்டு தாக்கிய பிரபலம்
சென்னை: கண்ணகியின் கோபமான வசனங்களை ஆங்கிலத்தில் பேசி நடிச்சிக் காட்டுற வீடியோதான் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனை ரசிகர்களும் வரவேற்று பாராட்டு வருகிறார்கள். அதேசமயம் சில எதிர்மறை விமர்சனங்களையும் தாங்கி வருகிறத. இதுகுறித்து பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் தன்னுடைய சேனலில் விரிவாக பேசியிருக்கிறார்.
Jeeva Cinema என்ற யூடியூப் சேனலில் பேசியிரும் மூத்த பத்திரிகையாளர் ஜீவ சகாப்தன், "நடிகை சுஹாசினி வெளிநாட்டில் ஆங்கிலத்தில் நடித்த கண்ணகி நாடகம் பேசியிருக்கிறார்.. சிலம்பை உடைக்கும்போது, மாணிக்கப் பரல்களா, முத்துப்பரல்களா என்று கேட்டு உடைப்பது குறித்து அவர் பேசியிருப்பதற்கு சோஷியல்மீடியாவில் பல்வேறு கமெண்ட்கள் வந்தவண்ணம் உள்ளன.

வாட்ச் கட்டிய கண்ணகி
"இதுவாங்க கண்ணகி? கண்ணகி பற்றி நாங்கள் ஒரு சித்திரம் வைத்திருந்தோம்.. மொத்தத்தையும் சுஹாசினி போட்டு உடைத்துவிட்டாரே? கண்ணகியிடம் இருந்த ஆவேசம், துணிச்சல் என எதையுமே முகபாவனைகளில் காட்டவில்லையே?" என்றெல்லாம் கிண்டலடித்து கமெண்ட்களை இணையவாசிகள் பதிவிட்டு வருகிறார்கள்.
இப்போது நடித்துள்ள கண்ணகி நாடகத்தில் கையில் வாட்ச் கட்டியிருந்தார் சுஹாசினி.. வாட்ச் கட்டிய கண்ணகியா? என்று பலரும் கேட்டு வருகிறார்கள்.
கண்ணகி நாடகத்தின் அடிநாதமான காட்சியே, சிலம்பை உடைக்கும் காட்சிதான்.. ஆனால், சுஹாசினி நடிக்கும்போது, அதில் உயிர் இல்லை என்பதுதான் பலரது விமர்சனமாக உள்ளது. இப்படித்தான் ஒய்ஜி மகேந்திரன் மகள் மதுவந்தியின் நடனமும் விமர்சனத்துக்கு உள்ளானது.
மதுவந்தி, சுஹாசினி
இவர்களை கிண்டல் செய்ய வேண்டும் என்று யாருக்கும் நோக்கம் இல்லை.. ஆனால், பரதநாட்டியம் என்பதே குறிப்பிட்ட சாதியினர் ஆடக்கூடிய நடனம் என்று சொல்லப்பட்டு வருகிறது.. இன்று பல தமிழ் பெண்கள் நடனம் கற்றாலும், இவ்வளவு பெரிய மேடை, அங்கீகாரம் எளிதில் அவர்களுக்கு கிடைப்பதில்லை.. அப்படியே கிடைத்தாலும் தங்களை புரமோட் செய்து கொள்ள மாட்டார்கள்.
ஆனால், மதுவந்தி, சுஹாசினி போன்றோருக்கு மேடைகள் கிடைத்து கொண்டே இருக்கின்றன.. இவர்கள் தங்களைத் தாங்களே விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள்.. இதனால் தொடர்ந்து வாய்ப்புகளும் கிடைக்கின்றன..
அறிவுஜீவி சுஹாசினி
ஆனால் மற்றவர்களுக்கு இந்த மேடை கிடைக்க வேண்டுமானால் 100 மடங்கு உழைக்க வேண்டியிருக்கிறது. சினிமா மட்டுமல்ல, கல்வி, வேலைவாய்ப்பு முதல் இந்திய அதிகாரம்வரை, இப்படியொரு அங்கீகாரம் அனைவருக்குமே கிடைப்பதில்லை.
சுஹாசினி ஒன்றும் அன்று உச்சநட்சத்திரம் கிடையாது.. எப்போதுமே பிரபலமான நடிகையும் கிடையாது.. சுஹாசினி வெகுஜன மக்களுக்கு அவ்வளவு பிரபலமானவரும் கிடையாது.. ஆனால், அவர் ஒரு அறிவுஜீவி போலவும், பெரிய ஆள் போலவும் ஊடகங்களால் காட்டப்பட்டே வருகிறார்..
கிளாசிக் நடிகை
பத்திரிகைகள் அவரைத் தொடர்ந்து "கிளாசிக் நடிகை", "வேற லெவலில் நடிப்பவர்" போன்ற பிம்பங்களை உருவாக்கிப் பாராட்டிக்கொண்டே இருக்கின்றன.
சுஹாசினி, "இந்தி மொழி நல்லது என்பார், இந்திக்கு உதவுங்கள்" என்பார்.. பொன்னியின் செல்வன் போன்ற படங்களுக்கு 'பான் இந்தியா' கான்செப்ட் குறித்து பேசுவார்.. அதிகார வர்க்க ஊடகங்களும் இவர்களை புரமோட் செய்தபடி இருப்பார்கள். இந்த அரசியலையும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
மக்களுக்கு பிடித்த நடிகரை மக்கள் தேர்ந்தெடுப்பதில்லை, லாபிதான் தேர்ந்தெடுக்கிறது.. இவர்கள் தாங்களாகவே மக்களிடம் பிரபலமாக மாட்டார்கள்.. தங்கள் திறமையையும் நம்ப மாட்டார்கள்.. ஒளிப்பதிவாளர்கள், எடிட்டர்கள் மூலமாகவே, தங்களை அறிவுஜீவியாக காட்டி கொள்கிறார்களே தவிர, இயல்பாக மக்களுக்கான அரசியலை, மக்களுக்கான உணர்வுகளை, மக்களுக்கான வாழ்வியலை பேசுவதில்லை..
அஞ்சலி படம் - மோகன் சொன்ன லாஜிக்
அஞ்சலி படத்தில் ஏன் நடிக்கவில்லை என்று நடிகர் மோகனிடம் சுஹாசினி ஒரு பேட்டியில் கேட்டார்.. அதற்கு மோகன், "அந்த படத்தின் அடிப்படையே தப்பாக உள்ளது.. மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தையை தனி அறையில் விட்டுவிட்டா அப்பா, அம்மா இருவரும் வேறு அறையில் தூங்குவார்கள்? அதில் எனக்கு உடன்பாடு இல்லாததால், அந்த படத்தில் நடிக்கவில்லை" என்கிறார் மோகன்.
ஆனால், மோகன் என்ன சொல்கிறார் என்பதைகூட சுஹாசினியால் விளங்கிக்கொள்ள முடியாமல், "ஓகே மோகன், உங்களுடைய அடுத்த படம்?" என்று கேட்டு அடுத்த கேள்விக்கு சென்றுவிட்டார்.. ஆக, சினிமா பற்றிய விமர்சனமோ, பகுப்பாய்வோ சுஹாசினியிடம் இல்லை" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications