மோசமான ப்ரொபோசல்.. மிஸ் ஆன விஜய் படம்.. தலையெழுத்து படி தான் நடக்கும்.. நடிகர் அப்பாஸ் உருக்கம்
சென்னை: நடிகர் அப்பாஸ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவுக்கு கம்பேக் கொடுத்திருப்பது தற்போது ரசிகர்களிடையே பெரிய அளவில் பேசப்படுகிறது. சுமார் 11 ஆண்டுகளுக்கு பிறகு அவர் நடித்துள்ள ஹேப்பி ராஜ் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில், தனது வாழ்க்கை, மிஸ் ஆன வாய்ப்புகள், ரசிகர்களின் அன்பு, நட்பு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

காதலுக்கு மரியாதை
பேட்டியில் அப்பாஸ் கூறிய முக்கிய விஷயங்களில் ஒன்று, காதலுக்கு மரியாதை படம். "அந்த படம் முதலில் என்னிடம் தான் வந்தது. ஆனால் அந்த நேரத்தில் எனக்கு கால்ஷீட் பிரச்சனை இருந்ததால் நான் நடிக்க முடியாமல் போய்விட்டது. பிறகு அந்த படத்தை பார்க்கும்போது சில நேரங்களில் வருத்தமாக இருக்கும்... 'இந்த படம் நமக்கு மிஸ் ஆயிடுச்சு' என்று தோன்றும்" என்று சிரித்தபடியே தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், "நம்ம தலையில என்ன எழுதி இருக்கோ அதுதான் நடக்கும். நமக்கு கிடைக்கக் கூடாதது கிடைக்காது. வாழ்க்கை ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு மாதமும் மாறிக்கொண்டே இருக்கும்" என்று மிகவும் சாதாரணமாகவும் உணர்வுபூர்வமாகவும் கூறியுள்ளார்.
90ஸ் ரசிகர்களின் சாக்லேட் பாய்
அப்பாஸ் என்ற பெயர் வந்தாலே 90ஸ் ரசிகர்களுக்கு நினைவில் வருவது ஒரு மென்மையான, சிரிக்கும் முகம் தான். ஸ்டைலான லுக், மெதுவான பேச்சு காதல் கதாபாத்திரங்களில் இயல்பான நடிப்பு இதனால் அவர் "சாக்லேட் பாய்" என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.
அந்த காலத்தில் பெண்கள் ரசிகைகளிடையே அவருக்கு தனி கிரேஸ் இருந்தது. அவர் நடித்த பல படங்கள் இன்றும் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட் லிஸ்டில் இடம்பிடித்துள்ளன.
ப்ரொபோசல்கள்
பேட்டியில் தனது ரசிகர்களைப் பற்றியும் அப்பாஸ் வெளிப்படையாக பேசியுள்ளார்."எனக்கு நிறைய ப்ரொபோசல்கள் வந்திருக்கிறது. சிலதை பார்த்து சிரித்திருக்கிறேன். சில ப்ரொபோசல்கள் ரொம்ப காமெடியாக இருக்கும்... சில சமயம் கொஞ்சம் வல்கராகவும் இருக்கும்" என்று ஓபனாக தெரிவித்துள்ளார்.
மேலும், "நான் கடந்த 7 ஆண்டுகளாக சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இல்லை. இப்போதான் மீண்டும் கொஞ்சம் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறேன். இப்போ கூட மக்கள் என்னிடம் இவ்வளவு அன்பு காட்டுவது எனக்கே அதிர்ச்சியாக இருக்கிறது. இன்னும் பலர் ப்ரொபோஸ் பண்ணுறாங்க" என்று சிரித்தபடி கூறியுள்ளார்.
நட்பு பற்றிய அவரது கருத்து
நட்பு குறித்து பேசும்போது, அப்பாஸ் சொன்ன ஒரு வரி தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.
"எந்த நட்பாக இருந்தாலும், அதற்குள் ஒரு பெண் வந்துவிட்டால் பிரச்சனை வரும். 'நட்பு' என்று இருந்த இடத்தில் 'காதல்' வந்துவிட்டால் பல உறவுகள் உடைந்து போகும்" என்று அவர் கூறியுள்ளார்.
அப்பாஸ் சினிமா பயணம்
அப்பாஸ் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார். 90களின் இறுதியில் இருந்து 2000களின் ஆரம்பம் வரை முன்னணி நடிகராக இருந்தார். காதல் கதாபாத்திரங்களில் அதிகம் நடித்தவர். சினிமாவில் இருந்து ஒரு கட்டத்தில் விலகி வெளிநாட்டில் வாழ்ந்த அவர், தற்போது மீண்டும் நடிப்புக்கு திரும்பியிருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பு
ஹேப்பி ராஜ் படத்தின் மூலம் மீண்டும் திரைக்கு வந்துள்ள அப்பாஸ், இன்னும் பல படங்களில் நடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசையாக உள்ளது.












Click it and Unblock the Notifications