லிமிட்டை தாண்டி போன நடிகர் முரளி.. கோயம்பேட்டில் காரில் உருண்டு.. வியப்பை தந்த முரளியின் இரக்க குணம்
சென்னை: தன் மகன் அதர்வா ஹீரோவாக அறிமுகமான 'பானா காத்தாடி' படம் வெளியாவதற்கு முன்பே நடிகர் முரளி மாரடைப்பால் இறந்துவிட்டார். அவர் உயிருடன் இருந்திருந்தால் தன் மகனை ஒரு பெரிய இடத்திற்குக் கொண்டு சென்றிருப்பார் என்று சினிமா விமர்சகர் திண்டுக்கல் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
FT Cinemas Xclusive என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள வெங்கடேஷ், முரளியின் தாய் ஒரு தமிழர் என்பதால் அவருக்கு தமிழ் மீது அதிக ஈடுபாடு இருந்தது. கே.பாலசந்தரின் அறிமுகத்தால் "பூவிலங்கு" படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் முரளி.. அவரது திரைப்பயணத்தில் "இதயம்" மிகப்பெரிய திருப்புமுனையான படமாக அமைந்தது. அதன் பிறகுதான் இதயம் முரளி என்றே அழைக்கப்பட்டார்.

விக்ரமன், கதிர் டைரக்டர்கள்
விக்ரமன், கதிர் போன்ற பல முன்னணி இயக்குநர்களுக்கு அவர்களின் முதல் படத்தில் வாய்ப்பளித்து அவர்களை உருவாக்கிய பெருமை முரளிக்கு உண்டு..
முரளி மற்றொரு ஹீரோவுடன் சேர்ந்து நடிப்பதில் எந்தத் தயக்கமும் காட்டாதவர். மற்றவர் சிறப்பாக நடித்தால் தனது புகழ் குறைந்துவிடும் என்ற எண்ணம் அவருக்கு இருந்ததே இல்லை. 'வண்ணக் கனவுகள்' படத்தில் கார்த்திக்குடன் இணைந்து நடித்தார். மம்மூட்டியுடன் இணைந்து நடித்தார்..
அள்ளி தந்த வானம், வெற்றி கொடிக்கட்டு போன்ற படங்களில் பிற ஹீரோக்களுடன் நடித்தவர்.. மணிரத்னத்தின் பகல் நிலவு படத்தில் சத்யராஜ், சரத்பாபு போன்ற பல நடிகர்கள் இருந்தாலும், முரளியின் கேரக்டர்தான் தான் அதிகம் பேசப்பட்டது.
குடிப்பழக்கம் பெரிய ஜாம்பவான்கள்
காதல் தோல்வி அல்லது சோக காட்சிகளில் அவரது முகத்தை பார்த்தாலே பார்ப்பவர்களுக்கு பரிதாபம் வந்துவிடும்.. கண்ணீர் வராவிட்டாலும் முகம் முழுவதுமே சோகத்தை வடிய செய்யும் அபூர்வ கலைஞர் முரளி..
குடிப்பழக்கம் என்ற ஒரே விஷயத்துக்காக பல பெரிய பெரிய ஜாம்பவான்களை இந்த தமிழ் சினிமா இழந்துள்ளது.. அந்த லிஸ்ட்டில் முரளியும் 46 வயதில் இறந்தது, மிகக்கொடுமையான விஷயம்.. லிமிட்டுக்கு மேல் அந்த பழக்கத்தில் மூழ்கி கிடந்தார்..
முரளியின் வளர்ச்சிக்கு வலதுகரமாக இருந்தவர் பி.ஆர்.ஓ மௌன ரவி. அவர் பலமுறை முரளியிடம் இப்பழக்கத்தை விட்டுவிடுமாறு அறிவுறுத்தியும் முரளி அதைக் கேட்கவில்லை.
கோயம்பேடு கார் விபத்து
முரளி எப்போதுமே கார் வேகமாக ஓட்டுவார்.. ஒருமுறை மது அருந்திவிட்டு அதிவேகமாக கார் ஓட்டியபோது, கோயம்பேடு அருகே கார் 4 முறை உருண்டு விபத்துக்குள்ளானது... அப்போது அவர் மயிரிழையில் உயிர் தப்பினார். முரளியுடன் காரில் உட்கார்ந்து செல்வதற்கே நிறைய பேர் பயப்படுவார்கள்..
தன் மகன் அதர்வா ஹீரோவாக அறிமுகமான 'பானா காத்தாடி' படம் வெளியாவதற்கு முன்பே முரளி மாரடைப்பால் இறந்துவிட்டார். அவர் உயிருடன் இருந்திருந்தால் தன் மகனை ஒரு பெரிய இடத்திற்குக் கொண்டு சென்றிருப்பார்..
முரளிக்கு பிறருக்கு உதவும் குணம் அதிகம்.. நடிகர் விக்ரம் ஆரம்பத்தில் டப்பிங் கலைஞராகத்தான் வாழ்க்கையை தொடங்கினார்.. அப்போதுதான் சேது படம் தயாரானது.. அந்த படத்தில் முரளிதான் நடிக்கவிருந்தார்..
சேது படம் விக்ரம்
ஆனால், சேது படத்தின் கதையைக் கேட்ட முரளி, இந்த கேரக்டருக்கு விக்ரமை வைத்து பண்ணினால் நன்றாக இருக்கும் என்று இயக்குநரிடம் சொன்னாராம்.. தனக்கு வந்த வாய்ப்பை விக்ரமிற்கு விட்டுக் கொடுத்தார் முரளி. அந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆகி விக்ரமின் வாழ்க்கையை மாற்றியது. அதற்கு நன்றிக்கடனாகவே பாலா 'பரதேசி' படத்தில் முரளியின் மகன் அதர்வாவிற்கு வாய்ப்பளித்தார்.
முரளி ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல, அற்புதமான மனிதர், அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவர். அதனால் முரளிக்கு என்று தனியாக ரசிகர்கள் மட்டுமல்லாமல், பொதுமக்களே அவரைக் கொண்டாடினார்கள்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications