சிவக்குமாரின் லுங்கி, எளிமை, மனிதாபிமானம், தாய்பாசம்! சூர்யாவின் அகரம் ஆலமரத்துக்கு விதை போட்ட அப்பா
சென்னை: சிவகுமார் சாரிடம் எந்த விஷயத்திலும் போலித்தனம் இருக்காது. அவர் காட்டும் அன்பாக இருந்தாலும் சரி, கோபமாக இருந்தாலும் சரி, அது மிகவும் உண்மையாக இருக்கும் என்று திரைப்பட தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேட்டி ஒன்றில் புகழ்ந்து பேசியிருக்கிறார்.. அத்துடன் சிவகுமார் தன்னுடைய அம்மா மீது வைத்திருந்த பாசத்தை பற்றியும் விரிவாக பேசியிருக்கிறார்.
Aramnaadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, "தன்னுடைய தாயின் மீது அதிக பிரியம் வைத்திருந்தவர் நடிகர் சிவகுமார்.. பொத்தி பொத்தி தன்னுடைய அம்மாவை கடைசிவரை பார்த்துக் கொண்டார்..

அந்த தாயார் மறைந்தபோது, சிவக்குமார் சார் ஒரு முதிர்ந்த மனிதராக இருந்தபோதிலும், அந்த துக்கத்திலிருந்து வெளிவர நீண்ட காலம் கஷ்டப்பட்டார். அம்மாவின் மீது வைத்திருந்த அளவு கடந்த அன்பே இதற்கு காரணம்.
கல்வியின் முக்கியத்துவம்
சிவகுமார் சார், தொடக்கத்திலிருந்தே கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தார். ஒவ்வொரு வருடமும் 10-வது மற்றும் 12-வது பொதுத்தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு 10,000 ரூபாய் பரிசுத் தொகை வழங்கி வந்தார்... வருடா வருடம் இந்த பரிசுகளை தந்து வந்தார்.. அன்று தினத்தந்தியில் இந்த போட்டோக்கள் வெளிவரும்.. சூர்யா மற்றும் கார்த்தி இன்று கல்வி உதவி செய்ய இதுவே அடிப்படை விதையாக அமைந்தது.
தன்னை படிக்க வைக்க தன்னுடைய அம்மா எந்த அளவுக்கு கஷ்டங்களை அனுபவித்தார் என்பதை தன் பிள்ளைகளான சூர்யா, கார்த்தி, பிருந்தா மூவருக்கும் சிறு வயதிலிருந்தே சொல்லி வந்துள்ளார்.. அதனால் ஏற்பட்ட தான் இன்று 'அகரம் பவுண்டேஷன்' ஆக வளர்ந்து நிற்கிறது. சிவகுமார் விதைத்த விதை, இன்று ஆலமரமாக உயர்ந்து நிற்கிறது..
விதை - ஆலமரம்
பணம், பொருள் கொடுத்துவிடலாம், ஆனால், "கல்வி என்பது காலத்தால் அழியாத செல்வம்" என்பதை உணர்ந்து இந்த உதவியைச் செய்து வருகிறார்கள்.. இப்படியான உதவியை எந்த நடிகருமே திரையுலகில் இதுவரை செய்ததில்லை..
சிவகுமார் சார், எப்போதுமே வீட்டிலும் மிகவும் சாதாரணமாக, ஒரு கைலி, ஷர்ட் அணிந்து கொண்டு மிகவும் கேஷுவலாக இருப்பார்... தான் ஒரு பிரபல நடிகர் என்ற எண்ணமே
அவருக்கு கிடையாது.. தானோ அல்லது தன் பிள்ளைகளோ பெரிய நட்சத்திரங்கள் என்ற எண்ணம் அவரிடம் துளிகூட இருக்காது.
நல்ல குடும்ப தலைவன்
சிவகுமார் அவர்களிடம் எந்த விஷயத்திலும் போலித்தனம் இருக்காது. அவர் காட்டும் அன்பாக இருந்தாலும் சரி, கோபமாக இருந்தாலும் சரி, அது மிகவும் உண்மையாக இருக்கும்.
நல்ல குடும்ப தலைவனாகவே திகழ்ந்து வருகிறார்.. அகரம் அறக்கட்டளைக்கு ஆண்டுதோறும் ஒரு கோடி ரூபாய் நிதியை சூர்யா வழங்கி வருகிறார்.. லகரம் என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தின் லாபத்தில் ஒரு பகுதியை, அகரம் அறக்கட்டளைக்கு ஒதுக்கி வருகிறார்.. சிவகுமார் சார் மட்டுமல்ல, அவரது மனைவி லட்சுமி அம்மாவும் மிகவும் எளிமையானவர், இந்த நல்ல வளர்ப்பே பிள்ளைகளையும் கட்டுக்கோப்பாக வைத்துள்ளது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
"வெறுப்புல கருப்பு படம் பார்க்கல!".. பிறகு நடந்த அதிசயம்.. மனம் திறந்த நடிகை ஆனந்தி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications