Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘ஜனநாயகன்’ லீக் ஆனது தவறு இல்ல.. ஆதங்கத்துடன் நடிகர் சூரி போஸ்ட்.. விஜய்க்கு சப்போர்ட்டுக்கு வந்த விஜய் தேவரகொண்டா

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'ஜனநாயகன்' திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. படம் இன்னும் அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் ஆகாத நிலையில், காட்சிகள் வெளியேறியிருப்பது பெரிய விவாதமாக மாறியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து பல திறை பிரபலங்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக, இந்த லீக் ஒரு சாதாரண விஷயம் இல்லை, இது நேரடியான திருட்டு என பலரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Jana nayagan Soori vijay

நடிகர் சூரி கண்டனம்

அந்த வகையில் நடிகர் சூரி தனது பதிவில், 'ஜனநாயகன்' படம் வெளியாவதற்கு முன்பே கசிந்திருப்பது தவறு இல்லை.., அது நேரடியான திருட்டு என்று தெரிவித்துள்ளார். இது ஒரு படத்தையே பாதிப்பதல்ல, அதற்காக உழைத்த நூற்றுக்கணக்கான மனிதர்களின் வாழ்க்கையையும் தாக்கும் செயல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது சினிமா பிரச்சனை மட்டும் இல்லாமல், உழைப்பை மதிக்காத மனநிலையின் பிரதிபலிப்பாகும் என்றும் கூறியுள்ளார். இப்படிப்பட்ட செயல்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், "நாங்கள் உருவாக்குவது படம் மட்டும் இல்லை, அது ஒரு நம்பிக்கை; அதை காப்பது கடமை" என்ற வரிகள் அதிக கவனம் பெற்றுள்ளன.

நடிகர் விஜய் தேவரகொண்டா பதிவு

அதேபோல், தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா வெளியிட்ட பதிவு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 'ஜனநாயகன்' லீக் செய்தி தன்னை கோபப்பட வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தனது ஆரம்ப காலத்தில் இதுபோன்ற அனுபவத்தை சந்தித்ததாகவும், அப்போது ஏற்படும் மனவேதனை, நம்பிக்கை இழப்பு போன்ற உணர்வுகளை நன்றாக அறிந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஒரு நடிகர் மட்டுமல்லாமல், படத்தில் பணியாற்றும் அனைவரின் கனவுகளும் இதனால் பாதிக்கப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பிரச்சனை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும், இதற்கு காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்; இல்லையெனில் இது ஒரு அமைப்புச் சீர்கேடு என்பதை காட்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். படக்குழுவுக்கு தனது முழு ஆதரவும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

திரை பிரபலங்கள் கண்டனம்

இவ்வாறு பலரும் 'ஜனநாயகன்' லீக் சம்பவத்திற்கு எதிராக குரல் கொடுத்து வரும் நிலையில், இந்த விவகாரம் திரையுலகில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இப்படம் தொடர்பாக 'Edit Reference' அல்லது ஆரம்ப கட்ட எடிட்டிங் பிரதியிலிருந்தே காட்சிகள் வெளியேறியிருக்கலாம் என்ற தகவல்கள், இந்த லீக் உள் வட்டாரத்திலிருந்தே ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தையும் அதிகரித்துள்ளது.

விஜய்யின் மௌனம்

இத்தனை பிரபலங்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வரும் சூழலில், இந்த படத்தின் நாயகனாக இருக்கும் விஜய் இதுவரை இந்த லீக் சம்பவம் குறித்து எந்த அதிகாரப்பூர்வ கருத்தையும் வெளியிடாதது கவனிக்கத்தக்க விஷயமாக பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில், 'ஜனநாயகன்' படம் லீக் ஆனது ஒரு சாதாரண விஷயம் அல்ல; அது திரையுலகில் பாதுகாப்பு, உழைப்பின் மதிப்பு மற்றும் தொழில்முறை நம்பிக்கை குறித்து பெரிய கேள்விகளை எழுப்பிய முக்கிய சம்பவமாக மாறியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+