சீமானுடன் நடிக்கும் போது நடந்த சம்பவம்.. வெளிப்படையாக பேசிய நடிகை கிரித்தி ஷெட்டி! குவியும் கமெண்ட்ஸ்
சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள 'எல்.ஐ.கே' (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி LIK) திரைப்படம் டிசம்பர் 18ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் கிரித்தி ஷெட்டி நாயகியாக நடித்துள்ளார். டிரைலர் வெளியான பிறகு இந்த படம் பற்றிய எதிர்பார்ப்பு சமூக வலைதளங்களில் வேகமாக உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில், சமீபத்திய பேட்டியில் கிரித்தி ஷெட்டி பகிர்ந்த தகவல்கள் தற்போது அதிகமாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக சீமான் குறித்து அவர் கூறிய அனுபவம் அரசியல் சூழ்நிலையிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

2040 பின்னணியில் உருவான படம்
'எல்.ஐ.கே' படம் சாதாரண காதல் கதை அல்ல. இது சயின்ஸ் ஃபிக்ஷன் மற்றும் ரொமான்டிக் காமெடி கலந்த ஒரு கதையாக உருவாகியுள்ளது. 2040ஆம் ஆண்டை பின்னணியாக கொண்டு கதை நகர்வதால், ஒவ்வொரு காட்சியும் கற்பனை அடிப்படையில் உருவாக்கப்பட்டதாக கிரித்தி ஷெட்டி கூறியுள்ளார்.
அவர் சொல்வதாவது, "இந்த மாதிரி எதிர்காலக் கதைக்கு ரெஃபரன்ஸ் கிடையாது. அதனால் எல்லாமே புதிதாக யோசித்து உருவாக்க வேண்டி இருந்தது. அதற்காக இயக்குனர் விக்னேஷ் சிவன் ரொம்ப கஷ்டப்பட்டார்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், படத்தின் இசை பற்றியும் அவர் பேசினார். அனிருத் இசையில் வரும் பாடல்கள் இந்த படத்துக்கு பெரிய பலமாக இருக்கும் என்றும், குறிப்பாக சில பாடல் ஐடியாக்கள் கூட பிரதீப் ரங்கநாதன் தரப்பிலிருந்து வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
சீமான் கற்று கொடுத்த சுத்த தமிழ்
இந்த படத்தில் முக்கியமான அம்சம் என்னவென்றால், சீமான் பிரதீப் ரங்கநாதனின் தந்தையாக நடித்துள்ளார். அவருடன் நடித்த அனுபவம் குறித்து கிரித்தி ஷெட்டி மிகவும் ரசித்து பேசியுள்ளார்.
"சீமான் சார் தூய தமிழில் பேசுவார். நிறைய ஆங்கில வார்த்தைகளுக்கு அவர் அழகான தமிழ் வார்த்தைகள் சொல்லித் தருவார். அவருடன் இருந்தது ஒரு நல்ல அனுபவம். நான் அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்," என்று கூறியுள்ளார்.
இந்த கருத்து வெளியான பிறகு, சீமான் ரசிகர்களும், நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்களும் இந்த பேட்டியை அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.
டிரைலர் வெளியான பிறகு சூடு பிடித்த விவாதம்
நேற்று 'எல்.ஐ.கே' படத்தின் டிரைலர் வெளியான பிறகு, இந்த படம் பற்றி இணையத்தில் பல்வேறு கருத்துகள் பரவி வருகிறது. காதல், எதிர்காலம், அரசியல் சாயல் என கலவையாக இருக்கும் போல தெரிகிறது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்திய அரசியல் சூழ்நிலையில் சீமான் குறித்து கிரித்தி ஷெட்டி பேசியிருப்பது இந்த படத்துக்கு கூடுதல் கவனம் பெற்றுத் தந்துள்ளது.
கிரித்தி ஷெட்டி பற்றி சில தகவல்கள்
கிரித்தி ஷெட்டி தென்னிந்திய சினிமாவில் மிகவும் வேகமாக வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவர். தெலுங்கில் 'உப்பேனா' படம் மூலம் அறிமுகமான அவர், முதல் படத்திலேயே பெரிய வெற்றி பெற்றார். அதன் பிறகு பல மொழிகளில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தது.
தமிழிலும் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இளம் ரசிகர்கள் மத்தியில் தனக்கு ஒரு நல்ல ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டிருக்கிறார். நடிப்பு மட்டுமல்லாமல், இயல்பான பேச்சு மற்றும் பார்ப்பதற்கு பக்கத்து வீட்டுப் பெண் போல இருப்பதால் அவருக்கு நல்ல பெயர் இருக்கிறது.
மொத்தத்தில், 'எல்.ஐ.கே' படம் ஒரு சாதாரண காதல் படம் அல்லாமல், எதிர்காலத்தை மையமாகக் கொண்ட ஒரு வித்தியாசமான முயற்சியாக இருக்கிறது. அதோடு, சீமான், பிரதீப் ரங்கநாதன், கிரித்தி ஷெட்டி போன்ற பலரும் இணைந்திருப்பதால், இந்த படம் மீது எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டிரைலர் ஏற்படுத்திய பேச்சு பட ரிலீஸ்க்கு முன்னதாகவே ஒரு பெரிய ஹைப்பை உருவாக்கியுள்ளது. இந்த படம் வரும் ஏப்ரல் பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதே நாளில் நட்டி நடராஜன் ஹீரோவாக நடித்திருக்கும் டிஎன் 2026 என்ற படமும் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications