Meena : நான்சென்ஸ், கர்மா சும்மா விடாது.. பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென கண் கலங்கிய மீனா
சென்னை: 90களில் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் குடும்பம், காதல், செண்டிமெண்ட் என எந்த வகை கதையிலும் நிச்சயமாக நினைவுக்கு வரும் நடிகைகளில் முதல் வரிசையில் இருப்பவர் மீனா. குழந்தை நட்சத்திரமாகத் தொடங்கி, பின்னர் முன்னணி ஹீரோக்களின் ஹீரோயினாக வளர்ந்து, பல தலைமுறைகளை கடந்து இன்னும் திரையில் செயலில் இருப்பது அவரது பயணத்தின் தனிச்சிறப்பு. இந்த நிலையில் சமீபத்தில் அவர் இரண்டாவது திருமணம் பற்றி ஆதங்கத்துடன் பேசிய வீடியோ இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, சத்யராஜ், கார்த்திக், முரளி, அர்ஜூன், பிரபுதேவா, அஜித் - இப்படி அந்த காலகட்டத்தில் இருந்த அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்தவர் மீனா. குடும்ப கதைகளில் மென்மையான பெண், கிராமத்து பெண், நகரத்து மாடர்ன் கேரக்டர், காமெடி கலந்த ரோல் - எதையும் இயல்பாகச் செய்ததால் தான் அவர் 'பேவரிட் ஹீரோயின்' என்ற இடத்தை பிடித்தார்.

ஓடிடியில் புதிய முயற்சி
இப்போது அந்த மீனா, மீண்டும் ஒரு வித்தியாசமான கேரக்டரில் வர இருக்கிறார். இயக்குநர் சுமேஷ் நந்தகுமார் இயக்கியுள்ள சீக்ரெட் ஸ்டோரீஸ் ரோஸ்லின் என்ற வெப் சீரியஸில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்த தொடர் பிப்ரவரி 27ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளது.
இந்த சீரிஸ் பற்றி மீனா பேசும்போது,ஒரு பெண் குழந்தைக்கு அம்மாவாகவும், தன் வாழ்க்கையைத் தானே முடிவு செய்யும் தைரியமான பெண்ணாகவும் வரும் கேரக்டர் என்று கூறினார். கதை கேட்ட உடனே ஒப்புக் கொண்டதற்குக் காரணம் அதில் இருக்கும் த்ரில்லர் எலிமெண்ட் மட்டும் இல்ல - அந்த பெண்ணின் மனநிலை, தீர்மானம், போராட்டம் தான் எனவும் அவர் குறிப்பிட்டார்.
"நான் பல கேரக்டரில் நடித்திருக்கிறேன். ஆனாலும் இது வேற மாதிரி இருக்கும்" என்று அவர் சொன்னது, இந்த கதையை அவர் ஒரு நடிகையாக எவ்வளவு முக்கியமாக எடுத்திருக்கிறார் என்பதை காட்டுகிறது.
தனிப்பட்ட வாழ்க்கை
சினிமா, ஓடிடி, தன்னுடைய நடிப்பு என இவையெல்லாம் பேசிக் கொண்டிருந்த பேட்டி, திடீரென அவரது தனிப்பட்ட வாழ்க்கையை நோக்கி திரும்பியது. குறிப்பாக தொடர்ந்து வெளியாகிக் கொண்டே இருக்கும் இரண்டாவது திருமண வதந்திகள் குறித்து அவர் மிகவும் மனவருத்தத்துடன் பேசினார்.
முன்பு இதுபோன்ற செய்திகள் வந்தாலும் அவை தன்னிடம் வந்து சேராது. ஆனால் இப்போது சமூக வலைதள காலம் - ஒரு செய்தி வந்தால் அதே மாதிரி பல செய்திகள் வர தொடங்கிவிடுகிறது என்று கூறினார். "எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். அவளும் இதைப் பார்ப்பாள் என்பதை யாரும் நினைக்கவே மாட்டார்கள்" என்று அவர் பேசும்போது அம்மாவின் கவலை தெளிவாக இருந்தது.
உண்மை இருந்தால் எழுதலாம், அதில் தவறு இல்லை. ஆனால் நான்சென்ஸ் எந்த ஆதாரமும் இல்லாமல் நேரில் பார்த்தது போல எழுதுவது தான் வருத்தமாக இருக்கிறது என்று அவர் சொன்னார். "என் வாழ்க்கையை பற்றி நான் தான் பேசணும். என்னைத் தவிர எல்லாரும் என் கல்யாணத்தை பற்றி பேசுறாங்க" என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
'கர்மா' மீது நம்பிக்கை
மேலும் தன்னை பற்றித் தவறாக எழுதியவர்களை நேரடியாக குற்றம் சொல்லாமல், "நான் கர்மாவை நம்புகிறேன்" என்று மிகவும் அமைதியாக பதில் அளித்தார். தன்னைச் சுற்றியிருந்த சிலர் செய்த விஷயங்களுக்கு அவர்கள் அனுபவித்ததை நேரில் பார்த்திருக்கிறேன் என்றும், உண்மை எப்போதாவது வெளியில் வரும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கூறினார்.
தனிமையிலிருந்து தன்னம்பிக்கை
மீனா தன்னுடைய கணவரை இழந்த பிறகு கடந்த சில ஆண்டுகளில் அவர் சந்தித்த தனிமை, மகளுடன் வாழும் வாழ்க்கை, மீண்டும் வேலைக்கு திரும்பிய விதம் - இவை அனைத்தும் மீனாவின் வாழ்க்கையை வேறு ஒரு கட்டத்துக்கு கொண்டு வந்துள்ளது. முன்பு 'ஹீரோயின்' என்ற அடையாளம் இருந்த இடத்தில், இப்போது 'வலிமையான பெண்' என்ற அடையாளம் உருவாகி வருகிறது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications