Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரேவதிக்கு அமைந்த பொக்கிஷ கேரக்டர்கள்.. மௌன ராகம் திவ்யா, மறுபடியும் துளசி, புதுமைப்பெண் சீதா.. வாவ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆரம்ப காலத்தில் பெண்கள் சினிமாவில் நுழைவது கடினமாக இருந்தது.. ஒரு குறிப்பிட்ட நிலையை அடைந்த பிறகே சுதந்திரம் கிடைத்தது.. இப்போது தொழில்நுட்பத் துறைகளிலும் கேமரா, சவுண்ட் உட்பட பெண்கள் அதிகம் வரத் தொடங்கியிருப்பது நல்ல மாற்றம் என்று பிரபல நடிகை ரேவதி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.. அத்துடன், தான் நடித்த சில படங்களின் கேரக்டர்கள் பற்றியும் விரிவாக பேசியிருக்கிறார்.

TN Prime என்ற யூடியூப் சேனலில் பேட்டி தந்துள்ள நடிகை ரேவதி, "நான் பிரியங்கா என்ற ஒரு படத்தில் மருமகளாக நடித்தேன்.. ஒரு கூட்டுக்குடும்பத்தில் வாழ்கிறார் அந்த மருமகள்.. அப்போது தன்னுடைய வீட்டின் மைத்துனர் அங்கு வேலை செய்யும் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததை கண்டும், அதை வெளியே சொல்ல முடியாமல் தவித்து போகிறாள் மருமகள்.

பிரியங்கா - மருமகள்

உண்மையிலேயே பல குடும்பங்களில் சிறுவர், சிறுமிகளுக்கு அத்துமீறல்கள் நடக்கின்றன.. "யாரிடமாவது இதை சொன்னால் கொன்றுவிடுவேன்" என்று சொந்தங்களே மிரட்டப்படுவதால், பல குழந்தைகள் மௌனமாக இருக்கிறார்கள். அதனால்தான் பிரியங்கா படத்தில் அந்த மருமகள் கேரக்டரை மிகவும் விரும்பி நடித்தேன்..

அதுபோல இன்றும்கூட பல கூட்டுக்குடும்பங்களில் இப்படியான பாலியல் வக்கிரங்கள் நடக்கின்றன.. சில இடங்களில் சித்தப்பா, மாமா, தாத்தா போன்றவர்களே இந்த கொடுமைய செய்வது மிகவும் கொடுமையானது. இதுகுறித்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளன..

புதுமைப்பெண் சீதா

புதுமைப்பெண் படத்தில் சீதா கேரக்டரில் நடித்தேன்.. அந்தப் படத்தில் சீதாவுக்கு நேர்ந்த ஒரு கசப்பான சம்பவத்திற்குப் பிறகு, அவள் தனது கணவனை விட்டுப் பிரிந்து செல்லும் முடிவை எடுத்துவிட்டாள்.. அந்த துணிச்சலான முடிவை எடுத்தது மிகவும் சரியே..

சீதா போன்ற சமூகத்தாக்கம் மிக்க கேரக்டர்களில் நடித்த பிறகு, ஒரு நடிகையாக, மிகவும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதை நான் உணர்ந்தேன். நான் பேசும் வசனங்கள், செய்யும் செயல்கள் எல்லாவற்றையுமே மகள்கள், அம்மாக்கள் பார்க்கபோகிறார்கள் என்பதை உணர்ந்துதான் நடித்தேன்.. பெண்களுக்கு சரியான முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதில் நான் கவனமாக இருக்கிறேன்.

மறுபடியும் துளசி

அதேபோல 'மறுபடியும்' துளசி கேரக்டரில் நான் நடித்திருந்தேன். அந்த படத்தை பார்த்த பிறகு, ஏகப்பட்ட லட்டர்கள் எனக்கு வந்தன.. அந்த படத்தை பார்த்துவிட்டு, பல பெண்கள், தங்கள் வாழ்க்கையில் முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளார்கள்..

சுயமரியாதைக்காக துணிச்சலாக முடிவை எடுப்பவள்தான் துளசி.. ஆனால், நிஜ வாழ்க்கையில் எல்லாப் பெண்களாலும் அப்படி உடனே செய்ய முடிவதில்லை..

மௌன ராகம் திவ்யா

அதேபோல 'மௌன ராகம்' படத்தில் திவ்யா கேரக்டரில் நான் நடித்திருந்தேன்.. ஆதில் அந்த முதலிரவு சீனுக்கு முன்பு தன் தாயிடம் பேசும் வசனத்தில், தாலி கட்டிட்டா எல்லாம் சரியாயிடுமே, இதே 2 நாள் முன்னாடி அவர் கூட என்னை நினைச்சிருப்பியா? என்று பேசியிருப்பேன்.. அது மிகவும் உண்மையானது.. ஆழமானது.. அந்த வசனத்தை அப்போது படிக்கும்போதே "That is so true" என்று எனக்கு தோன்றியது.

இன்றைய தலைமுறையினர் இதுபோன்ற உறவு முறைகளை நன்றாகப் புரிந்துகொண்டுள்ளார்கள் ...ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவு என்பது வெறும் முத்தம் அல்லது உடல் ரீதியான ஈர்ப்பு சார்ந்தது மட்டுமல்ல, அதையும் தாண்டி ஒருவருக்கு ஒருவர் கொடுக்கும் மரியாதை, புரிதல்தான் முக்கியம்.. திவ்யா கதாபாத்திரம் தனது மனதில் உள்ளதை ஒளிக்காமல் வெளிப்படையாகப் பேசியதுதான் அந்த கேரக்டரின் சிறப்பு" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+