விஜய் அண்ணா தோத்துடாதீங்க.. இதை மட்டும் செய்யுங்க! ஸ்டாலினே சொல்லிட்டாரே! நடிகை விஜயலட்சுமி வீடியோ
சென்னை: தமிழக அரசியல் களம் தற்போது மிகுந்த பரபரப்புடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவருமான விஜய், சட்டசபைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்திருந்தாலும், இன்னும் முழுமையான பெரும்பான்மையை எட்டாத காரணத்தால் ஆட்சி அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் "விஜய் முதலமைச்சராக வருவாரா இல்லையா?" என்ற கேள்வி மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் குழப்பத்தையும் உருவாக்கியுள்ளது.

நடிகை விஜயலட்சுமி வீடியோ
இந்த சூழ்நிலையில், விஜயுடன் 'Friends' படத்தில் நடித்த நடிகை விஜயலட்சுமி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் கூறியதாவது:
"விஜய் அண்ணா, நீங்க இவ்வளவு கஷ்டப்பட்டு இப்போ அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கீங்க. இந்த நேரத்தில் நீங்கள் ஒரு விஷயத்தை மட்டும் புரிஞ்சுக்கோங்க... உங்களுக்கு தமிழ்நாட்டில் யாருமே எதிரி இல்ல. ஏற்கனவே மு.க. ஸ்டாலின் உங்களிடம் எந்த தொந்தரவும் செய்ய மாட்டோம், நீங்க ஆட்சி அமைக்கலாம் என்று சொல்லியிருக்கார்.
கூட்டணி
அதேபோல, உங்களுக்கு யாருடன் கூட்டணி வைக்கணும்னு தோணுதோ, அவர்களுடன் பேசிட்டு கூட்டணி அமைங்க. அது திமுக ஆக இருந்தாலும் சரி, அதிமுக ஆக இருந்தாலும் சரி - எப்படியாவது தேவையான எம்.எல்.ஏ எண்ணிக்கையை சீக்கிரம் ரெடி பண்ணி ஆட்சி அமைக்கணும்.
மக்கள் உங்களுக்காக ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்திருக்காங்க. நீங்க எப்போ முதலமைச்சராக வருவீங்கன்னு மக்கள், நாங்க எல்லாரும் காத்திருக்கோம். இவ்வளவு வந்த பிறகு நீங்க தோத்துப் போயிடாதீங்க அண்ணா... எப்படியாவது கூட்டணி வைத்து முதலமைச்சர் ஆகணும். இது உங்களுக்கு அட்வைஸ் இல்ல... என்னுடைய வேண்டுகோள் தான்" என்று அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
தங்கையின் வேண்டுகோள்
இது மட்டும் அல்லாமல், சில நாட்களுக்கு முன்பே விஜய் வெற்றி பெற்றபோது, அவருக்கு வாழ்த்து தெரிவித்து விஜயலட்சுமி மற்றொரு வீடியோவும் வெளியிட்டிருந்தார். அப்போது, "நான் இப்போ பெங்களூருல இருக்கேன். என் அக்காவுக்கு உடல்நிலை சரியில்லை. நான் சென்னைல இருந்திருந்தா நேர்ல வந்து அண்ணாவை சந்திச்சு வாழ்த்து சொல்லி, என்னையும் உங்கள் கட்சியில் சேர்த்துக்கோங்கன்னு கேட்டிருப்பேன்" என்று கூறியிருந்தார். அந்த வீடியோவும் அப்போது வைரலாகி இருந்தது.
இப்போது தொடர்ந்து வெளியிட்டுள்ள இந்த புதிய வீடியோ, சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது. சிலர் விஜயலட்சுமியின் உணர்ச்சி பூர்வமான வேண்டுகோளை ஆதரித்து கருத்து தெரிவிக்கின்றனர். மற்றொரு தரப்பு, அரசியல் சூழ்நிலையில் இப்படியான வெளிப்படையான அழைப்புகள் எந்த மாற்றத்தை ஏற்படுத்தும் என கேள்வி எழுப்புகின்றனர்.
இதற்கிடையே, தற்போதைய அரசியல் நிலவரமும் மிகுந்த சிக்கலாகவே உள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏ ஆதரவுக்காக விஜய் பல கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்ற நிலையில், விசிக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவும் விரைவில் உறுதியாகும் என தகவல்கள் வெளியாகின்றன.
எதிர்பார்க்காத தகவல்கள்
மறுபுறம், திமுக - அதிமுக கூட்டணி குறித்த பரபரப்பான அரசியல் பேச்சுகளும் எழுந்துள்ளன. இந்த கூட்டணி அமையுமா அல்லது விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைக்குமா என்ற கேள்வி தமிழக அரசியலில் மிகப்பெரிய விவாதமாக மாறியுள்ளது.
மொத்தத்தில், ஒரு பக்கம் அரசியல் கணக்குகள் தீவிரமாக நகரும் நிலையில், மற்றொரு பக்கம் நடிகர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் ஆகியோரின் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த வரிசையில் நடிகை விஜயலட்சுமி வெளியிட்டுள்ள இந்த வீடியோ, "எப்படியாவது விஜய் முதலமைச்சராக வேண்டும்" என்ற உணர்வை பிரதிபலிக்கும் முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
-
தமிழ்நாட்டில் ஹையோசங் டிஎன்எஸ் புதிய தொழிற்சாலை.. ஏடிஎம் உற்பத்திக்கு திட்டம்! -
அரசு ஊழியர்களை பந்தாடும் விஜய்.. சென்னையில் நடப்பது என்ன? -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
50+ வீடியோ.. சேலம் மணிகண்டன்.. சிபிஎம், டிடிவி தினகரன் விஜய்க்கு வைத்த கோரிக்கை -
அரசியல் சதுரங்கத்தில் சறுக்கிய விஜயதாரணி! ‘அமைச்சர்’ வாய்ப்பை கோட்டை விட்டாரா விளவங்கோடு சிங்கப்பெண் -
பேய் பிசாசு நலத்துறை அமைச்சர் ராகவா லாரன்ஸ்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. தெறிக்கும் மீம்ஸ்! -
234 மாவட்ட செயலாளர்.. விஜய் எடுக்கும் புதிய வியூகம்.. நிர்வாகிகளுக்கு போன மெசேஜ்.. பின்னணி என்ன? -
கம்ப்ளைன்ட் கொடுக்க போன என் மீதே கேஸ் போட்டுட்டாங்க.. பிளான் பண்ணி பண்ணுறாங்க! ஜூலி ஆதங்கம் -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
101 தவெக எம்எல்ஏக்களுக்கு ரூல்ஸ் சொல்லி கொடுக்கணும்..முதல் முறை வென்ற 145 பேருக்கு 2 நாள் பயிற்சி -
விஜய்யின் பெயரை கூட தவறாக சொன்ன கர்நாடகா அமைச்சர்.. இப்படி செய்வாருனு யாரும் எதிர்பார்க்கலை -
எம்ஜிஆர் பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு வெள்ளி வாள் வழங்கி தரிசனம்












Click it and Unblock the Notifications