இனி சினிமா பாடல்கள் பாடப் போவதில்லை! ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அர்ஜித் சிங் - பின்னணி என்ன?
பாலிவுட் திரையுலகின் 'மெலடி கிங்' என்று அழைக்கப்படும் பிரபல பின்னணி பாடகர் அர்ஜித் சிங், இனி திரைப்படங்களில் பாடப் போவதில்லை என்ற அதிரடி முடிவை எடுத்துள்ளார். அவரது இந்த திடீர் அறிவிப்பு ஒட்டுமொத்த இந்திய இசைத் துறையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்னணி பாடகர் பயணத்திற்கு முற்றுப்புள்ளி:
கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தனது காந்தக் குரலால் இந்திய ரசிகர்களை கட்டிப் போட்டவர் அர்ஜித் சிங். 'தும் ஹி ஹோ' தொடங்கி சமீபத்திய 'கேசரியா' வரை இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது. தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான '24' திரைப்படத்தில் 'நான் உன் அழகினிலே' என்ற பாடலின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதையும் கவர்ந்தார்.
தற்போது புகழின் உச்சியில் இருக்கும்போதே, "இனிமேல் நான் பின்னணிப் பாடகர் வாய்ப்புகள் எதையும் ஏற்க போவதில்லை" என அறிவித்து திரையுலகினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அர்ஜித் சிங்கின் உருக்கமான அறிக்கை:
தன்னுடைய ஓய்வு குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
"அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இத்தனை ஆண்டுகளாக என் பாடல்களைக் கேட்டு, எனக்கு அளவற்ற அன்பை கொடுத்த உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. சினிமா பின்னணி பாடகர் என்ற அடையாளத்தில் இருந்து நான் இப்போது விடைபெறுகிறேன். இது ஒரு அற்புதமான பயணம்."
அடுத்த திட்டம் என்ன?
சினிமா பாடல்களுக்கு குட்பை சொன்னாலும், இசையை விட்டு அவர் விலகவில்லை என்பதுதான் ரசிகர்களுக்கான ஒரே ஆறுதல். இனிவரும் காலங்களில் சுயாதீன இசை (Independent Music) மற்றும் ஆல்பம் பாடல்கள் உருவாக்குவதில் முழு கவனத்தையும் செலுத்த போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
திரைப்படங்களின் வணிகக் கட்டுப்பாடுகள் இன்றி, தனக்குப் பிடித்தமான தனித்துவமான இசையை ரசிகர்களுக்கு வழங்கவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
அதிர்ச்சியில் திரையுலகம்:
அர்ஜித் சிங்கின் இந்த முடிவு தற்காலிகமானதா அல்லது நிரந்தரமானதா? என்ற விவாதம் சமூக வலைதளங்களில் சூடுபிடித்துள்ளது. முன்னணி இசையமைப்பாளர்களும், சக கலைஞர்களும் இந்த அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும், ஒரு கலைஞனாக அவரது புதிய முயற்சிக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications