பல வருட வலி நெஞ்சுக்குள்ள இருக்கு! செய்தியாளர் கேட்ட கேள்வியால்.. கடுப்பான அஸ்வின்! தரமான சம்பவம்
சென்னை: 40 கதை கேட்டால் நீங்களே தூங்காம இருக்க முடியுமா? என்ற ஒரே கேள்வியால நேற்று நடந்த 'ஹாட்ஸ்பாட் 2' படத்தின் செய்தியாளர் சந்திப்பு கொஞ்சம் சூடுபிடிச்சது. ஆனால் அந்த சூட்டுக்குள்ளேயே, நடிகர் அஸ்வின் குமார் தன்னை நோக்கி வந்த கேள்விக்கு ரொம்ப அமைதியா, அதே நேரம் தரமா ஒரு பதிலடி கொடுத்தார் என்பதுதான் இப்போ பேசுபொருளாகி இருக்கு.
இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஹாட்ஸ்பாட்' படத்தின் இரண்டாம் பாகம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகப் போகுது. 2024-ல் வந்த முதல் பாகத்துக்குப் பிறகு, இரண்டாம் பாகத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு இருக்கு. இந்த படத்தில் ப்ரியா பவானி ஷங்கர், எம்.எஸ். பாஸ்கர், தம்பி ராமையா, பவானி ஸ்ரீ, அஸ்வின் குமார், ஆதித்யா பாஸ்கர், சஞ்சனா திவாரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தின் ப்ரமோஷன் காரணமாக நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், ஒரு செய்தியாளர் அஸ்வின் குமாரை நோக்கி, "முன்னாடி கதை கேட்கும்போது தூங்குறேன் என்று சொன்னீங்களே... இப்போவும் கதை கேட்கும்போது தூங்குறீங்களா, இல்ல விழிச்சு கேக்குறீங்களா?"ன்னு கேட்டார். கேள்வி கொஞ்சம் குறிவைத்த மாதிரி இருந்தாலும், அதுக்கு அஸ்வின் காட்டிய பதில்தான் எல்லாரையும் கவனிக்க வைத்தது.
உடனே டென்ஷன் ஆகாம, "நான் உங்களிடம் நேர்மையாக ஒரு கேள்வி கேட்கிறேன், நீங்கள் பதில் சொல்வீர்களா?"ன்னு ஆரம்பிச்சார் அஸ்வின். "40 கதைகள் என்பது நான் பொதுவாக சொன்ன ஒரு எண்ணிக்கை தான். உண்மையிலேயே அதைவிட அதிக கதைகள் கூட கேட்டிருக்கலாம். இன்றைக்கு நீங்களே இத்தனை கதைகள் தொடர்ந்து கேட்டா, தூங்காம இருக்க முடியுமா?"ன்னு கேட்டார்.
மேலும், "நான் திரையரங்குகளில் படம் பார்க்கும்போது பலர் தூங்குறதை பார்த்திருக்கேன். அப்போ நான் யாரையும் புண்படுத்த நினைக்கல. அதற்கான விளக்கத்தையும் அப்போதே கொடுத்தேன்"ன்னு அமைதியாக விளக்கம் சொன்னார். ஒரு பிரஸ் மீட்டிங்கில் தான் தெரியாமல் பேசிய விஷயம் பெரிய அளவில் பேசப்பட்டதால் அப்போதே அதற்கு அவர் விளக்கம் கொடுத்திருந்தார் ஆனாலும் இத்தனை வருடம் கழித்தும் அதையே சொல்லி குத்தி காட்டுவது தவறு என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதோடு நிக்காம, தன்னைப் பற்றி இன்னொரு முக்கியமான விஷயத்தையும் அவர் சொன்னார். "நான் என்னை முழுமையான நடிகன் என்று எப்போதும் சொல்லிக்கொள்ள மாட்டேன். இன்னும் கற்றுக்கொண்டுதான் இருக்கேன். நான் வேலை செய்த ஒவ்வொரு இயக்குநரிடமிருந்தும் ஏதாவது ஒன்றைக் கற்றுக்கிட்டே வர்றேன். ஒரு நல்ல நடிகனா மாற தொடர்ந்து முயற்சி பண்ணுறேன்"ன்னு நிதானமா பேசினார்.

மொத்தமா சொல்லப்போனா, தன்னை குறிவைத்து வந்த கேள்விக்குக் கூட அஸ்வின் குமார் கோபமோ, தேவையில்லாத வார்த்தைகளோ இல்லாம, இயல்பா, தரமா ஒரு பதிலடி கொடுத்தார். அதனாலேயே இந்த செய்தியாளர் சந்திப்பு, படத்தை விட அஸ்வினோட பதிலுக்காக அதிகம் பேசப்படுற விஷயமாக மாறியிருக்கிறது.
இந்நிலையில், 'ஹாட்ஸ்பாட் 2' படம் முதல் பாகத்தின் எதிர்பார்ப்பை தாண்டி ரசிகர்களை எப்படிச் சந்திக்கப்போகுது என்பதையும் பார்க்க ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
-
ரீல்ஸ் மோகம்.. மகனுக்கு உதட்டில் முத்தம்.. சீரியல் நடிகையை திட்டும் நெட்டிசன்கள்.. அவரே கொடுத்த விளக்கம் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications