Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bawariya: 'தீரன்' படத்தின் நிஜ கதை! பவாரியா கும்பலின் கொடூரம்! தமிழகத்தை உலுக்கிய எம்எல்ஏ கொலை வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பவாரியா கும்பல் என்ற பெயரை கேட்டதுமே பலருக்கு தீரன் படம் தான் ஞாபகம் வரும். அந்த படம் எடுப்பதற்கு காரணமாக இருந்த எம்எல்ஏவின் கொலை வழக்குக்கான தீர்ப்பு விரைவில் வரப்போகிறது. தமிழகத்தில் தொடர் கொலைகள், கொள்ளை சம்பவங்களால் பெரும் அச்சத்தை ஏற்படுத்திய பவாரியா (Bawariya) கொள்ளைக் கும்பல் தொடர்பான மிக முக்கியவழக்கு பற்றிய பேச்சு தான் இப்போது இருந்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதி முன்னாள் MLA மற்றும் அமைச்சர் கே. சுதர்சனம் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், வரும் நவம்பர் 21 ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

Bawariya Gang Theeran Adhigaaram karthi

கொடூரம்

அ.தி.மு.க.வைச் சேர்ந்தவரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் சிறிது காலம் இருந்தவருமான கே. சுதர்சனம், தனது கும்மிடிப்பூண்டி தொகுதியில் மக்கள் செல்வாக்கு பெற்றவராகத் திகழ்ந்தார். சுதர்சனம் அவர்களின் வீடு பெரியபாளையம் அருகே தானாக்குளத்தில் இருந்தது. சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்பு, 2005 ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி அதிகாலை 2.45 மணியளவில், ஆறு பேர் கொண்ட மர்மக் கும்பல் அவருடைய வீட்டிற்குள் புகுந்தது.

கொலை

வீட்டின் கதவை உடைத்த கொள்ளையர்கள், சுதர்சனத்தின் இளைய மகன் சதீஷைத் தாக்கி கட்டிப் போட்டனர். இந்தச் சப்தம் கேட்டு மாடியில் தூங்கிக் கொண்டிருந்த சுதர்சனம் கீழே இறங்கி வந்தபோது, கொள்ளையர்களைப் பார்த்துச் சப்தம் போட்டார். உடனே அந்த மர்மக் கும்பல் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது. இந்தக் கொலையை அரங்கேற்றிய பின்னர், அங்கிருந்து 63 சவரன் நகைகள், பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.

Bawariya Gang Theeran Adhigaaram karthi

பவாரியா கும்பலின் வேட்டை

இந்தக் கொலைச் சம்பவத்தால் தமிழகமே அதிர்ச்சி அடைந்தது. அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, கொள்ளையர்களை உடனடியாகப் பிடிக்க உத்தரவிட்டார். இதனையடுத்து, ஐ.ஜி. ஜாங்கிட் தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்தத் தனிப்படை மிகவும் துரிதமாகச் செயல்பட்டு, ஒரு மாத காலத்திற்குள்ளேயே கொள்ளையர்களைக் கண்டுபிடித்தது.

Bawariya Gang Theeran Adhigaaram karthi

பவாரியா கும்பலின் கொடூரம்

விசாரணையில், இந்தக் கொடூரக் குற்றங்களுக்குப் பின்னால் இருப்பது ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த பவாரியா கொள்ளையர்கள் என்பது தெரியவந்தது. ராஜஸ்தானில் பவாரியா கொள்ளையர்களை ஐ.ஜி. ஜாங்கிட் தலைமையிலான குழுவினர் பிடித்த அந்தச் சாகசக் கதை தான், நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான "தீரன் அதிகாரம் ஒன்று" என்ற திரைப்படமாக எடுக்கப்பட்டது.

தமிழகத்தை உலுக்கியது

தீரன் படத்தைப் பார்த்துதான் தமிழகத்தின் பலருக்கும் இந்தத் தொடர் கொலைகள் மற்றும் கொள்ளைகளின் உண்மையான பயங்கரத்தைப் பற்றித் தெரியவந்தது. பவாரியா என்ற கொள்ளை கூட்டம் பற்றியும் இந்தக் கொடூரக் கொலையாளிகளின் பின்னணியில் வந்த தண்டுபாளையா என்ற கன்னடத் திரைப்படம் அந்த மாநிலத்தில் பெரும் உலுக்கலை ஏற்படுத்தியது போல, தமிழகத்தில் தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரண்டுமே கொடூரக் கொலையாளிகளின் பின்னணியில் வந்த நிஜப் படங்களாகும்.

தீரன் படத்தின் கதையில், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி தனியாக இருக்கும் வீடுகளுக்குள் புகுந்து கொலை, கொள்ளையில் ஈடுபடும் வடநாட்டு கும்பல் தமிழகத்திலும் கைவரிசை காட்ட அந்த வழக்கை தீரன் திருமாறன் என்ற கேரக்டரில் நடித்த கார்த்தி விசாரிக்கிறார். அதற்குப் பிறகு அந்த கும்பல் எம்எல்ஏவின் கொலைகளும் சம்பந்தப்பட அதையும் கார்த்தி விசாரிக்கிறார். அந்தப் பட இயக்குநர் எச் வினோத் நிஜ கொள்ளை கும்பல் தலைவனின் பெயர் (ஓமா பவாரியா) என்பதை (ஓமா ஹவேரியா) என்று மாற்றி இருந்தார்.

Bawariya Gang Theeran Adhigaaram karthi

கார்த்தி தலைமையில் நடக்கும் வேட்டையில் கைரேகை வைத்து சங்கிலி தொடர்பான கொள்ளை கூட்டத்தினை பிடித்து அவர்கள் பரம்பரைக்கு பின்னாடி இருக்கும் வரலாறு போன்றவற்றையும் காட்டி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருந்தனர் இப்படி எல்லாம் நம்மை சுற்றி நடக்கிறதா என்று பலருக்கும் அதிர்ச்சி கலந்த ஒரு பயத்தை இந்த படம் காட்டியிருந்தது.

இந்த படம் முழுக்க விறுவிறுப்பும் பரபரப்பும் நிறைந்து இருந்தாலும் இந்த படத்தின் கதைக்கு சத்தியம் சூரியனின் ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் உயிரை கொடுத்திருந்தது. இந்த படம் வந்த சமயத்தில் சில சர்ச்சைகளும் வந்தது. அதாவது இதுபோல குற்றம் சம்பவங்கள் நடைபெறுகிறது என்று அனைவருக்கும் எடுத்துக்காட்டி இருந்தாலும் ஆங்கிலேயரால் குற்ற பரம்பரை என்று குற்றச்சாட்டப்பட்ட ஒரு பிரிவினரை கொலை கும்பலாக சித்தரிப்பது தவறு என்றும் சிலர் போர்க்கொடி தூக்கி இருந்தனர். வாழ்வாதாரத்தை இழந்து புலம் பெயர் தொழிலாளியாக கம்பளி, போர்வை தீர்க்கும் வெளி மாநில தொழிலாளர்களை கொடூர கொலையாளிகளாக காட்டி இருக்கிறார்கள் என்றும் சிலர் கூறி வந்தனர்.

நீண்ட சட்ட போராட்டம்

எது எப்படி இருந்தாலும் இந்த படம் உருவாகுவதற்கு அடிப்படையாக இருந்த எம்எல்ஏவின் வழக்கில் தனிப்படை போலீஸார் மொத்தம் 32 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். அவர்களில் 23 பேர் தலைமறைவாகிவிட்டனர். இதையடுத்து ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த ஓம் பிரகாஷ், பவாரியா, அவரது சகோதரர் ஜெகதீஷ் உள்ளிட்ட 9 பேரை மட்டுமே போலீஸார் பிடித்துக் கைது செய்தனர்.

தண்டனை

ஆரம்பத்தில் இருவருக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. அதில் ஓம் பிரகாஷ் சிறைச்சாலையிலேயே இறந்துவிட்டார். ஜெகதீஷ் 2005 ஆம் ஆண்டு முதல் புழல் சிறையில் இருந்து வருகிறார். கடந்த நான்கு ஆண்டுகளாகச் சென்னை முதன்மை நீதிமன்றத்தில் சுதர்சனம் கொலை வழக்கு விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், வரும் நவம்பர் 21ஆம் தேதி இறுதித் தீர்ப்பு வழங்கப்படுகிறது. இந்தத் தீர்ப்பு, நீண்டகாலமாக நடைபெற்ற ஒரு கொடூரமான குற்றச் சம்பவத்தின் சட்டப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+