“அன்பு படர்ந்த கொம்பிலே அகந்தை குரங்கு!” மனைவியை துச்சமாக பேசிய விஜயை கிழித்த ப்ளூ சட்டை மாறன்
சென்னை: நடிகரும் அரசியல்வாதியுமான விஜய் குறித்து கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பல சர்ச்சைகள் பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக அவரது குடும்ப வாழ்க்கையைச் சுற்றியுள்ள விவகாரங்கள், நடிகை திரிஷா Trisha Krishnan உடன் அவர் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டது ஆகியவை இணையத்தில் பெரிய விவாதமாக மாறியுள்ளன. இந்த நிலையில் விஜய்க்கு ஆதரவாக ரசிகைகள் கொடுத்த விளக்கத்தை ப்ளூ சட்டைமாறன் கலாய்த்து இருக்கிறார்.

விஜய் - சங்கீதா விவாகரத்து விவகாரம்
முதலில் விஜயின் குடும்ப வாழ்க்கையைச் சுற்றி விவாகரத்து தொடர்பான செய்திகள் சமூக வலைதளங்களில் பரவ ஆரம்பித்தது. அவரது மனைவி சங்கீதா சொர்ணலிங்கம் நீதிமன்றத்தில் மனு கொடுத்ததாக வெளியான தகவல்கள் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தின. அதில் விஜய் மீது சங்கீதா சில குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார். இந்த விவகாரம் இன்னும் தெளிவாக முடிவுக்கு வராத நிலையில், விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் ஒன்றாக ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றதாக வெளியான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவின. இதனால் பலரும் விஜயை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தனர்.
மகளிர் தின நிகழ்ச்சியில் விஜய்க்கு ஆதரவு
இதற்கிடையில், விஜய் தனது கட்சி சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு ஒரு பெரிய நிகழ்ச்சி நடத்தினார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சில பெண்கள் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். ஒரு பெண் பேசும்போது, "விஜயின் சொந்த வாழ்க்கையை அவர் தான் சமாளித்துக் கொள்வார். அவர் அரசியலுக்கு வந்துள்ளார். அரசியலில் மக்களுக்கு என்ன செய்கிறார் என்பதுதான் முக்கியம். அவரது தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி நாம் பேசக்கூடாது" என்று கூறினார்.
மேலும் அவர், "ஒரு நண்பருடன் ஒரே காரில் ஒரு நிகழ்ச்சிக்கு செல்லக் கூடாதா? ஒரே மாதிரி ஆடை அணியக் கூடாதா?" என்று கேள்வி எழுப்பினார்.
திரிஷா காரில் சென்றதாக விளக்கம்
அதே நிகழ்ச்சியில் பேசின மற்றொரு பெண், "விஜய் காரில் சென்றால் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் அவரை பின்தொடர்ந்து வருவார்கள். அதனால் தான் அவர் த்ரிஷாவின் காரில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றார்" என்று கூறியுள்ளார். இந்த விளக்கங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின.
ப்ளூ சட்டை மாறன் கிண்டல் பதிவு
இந்த கருத்துகளை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் Blue Sattai Maran, அதை கிண்டல் செய்யும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், "இந்த தவெக பெண், தவெக ஆண்களை விட மிகவும் புத்திசாலியாக இருக்கிறார். இந்த பெண் எல்லாரையும் ஓவர்டேக் செய்து விட்டார்" என்று அவர் எழுதியுள்ளார். இந்த பதிவு இணையத்தில் பரவி, புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
விஜயின் பதிலும் சர்ச்சை
இதற்கிடையில் விஜய் தனது விவாகரத்து தொடர்பான சர்ச்சைகள் குறித்து பேசும்போது, "அதெல்லாம் அவ்வளவு முக்கியமான விஷயம் இல்லை. நீங்கள் கவலைப்பட வேண்டாம்" என்று கூறியிருக்கிறார். இந்த கருத்தையும் சிலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குடும்ப விவகாரம் குறித்து இப்படி பேசுவது சரியா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.
இதற்கு இடையில் ப்ளூ சட்டை மாறன் இன்னொரு பதிவையும் வெளியிட்டு இருக்கிறார். அதில் விஜய் என்னுடைய பர்சனல் விஷயத்தை நான் பார்த்துக்கிறேன் அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்று தன்னுடைய மனைவியை துச்சமாக பேசி இருந்தார். அந்த வீடியோவை பகிர்ந்த ப்ளூ சட்டை மாறன் அதற்கு, "அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு அகந்தை குரங்கு தாவும். அதன் அழகை குலைக்க மேவும். கொம்பு ஒடிந்து..கொடியும் குலைந்து.. குரங்கும் விழுந்து சாகும். - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், சொன்னது என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
ரசிகர்கள் மத்தியில் கலவையான எதிர்வினை
மொத்தத்தில், விஜயின் குடும்ப வாழ்க்கையைச் சுற்றியுள்ள சர்ச்சைகள், த்ரிஷாவுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டது, அதற்கு ரசிகர்கள் மற்றும் பெண்கள் தெரிவித்த ஆதரவு, அதை ப்ளூ சட்டை மாறன் கிண்டல் செய்த பதிவு - இவை அனைத்தும் தற்போது சமூக வலைதளங்களில் பெரிய விவாதமாக மாறியுள்ளது.
இந்த விவகாரம் அடுத்த நாட்களில் எப்படி மாறும் என்பதையும், விஜய் இதற்கு நேரடியாக பதில் அளிப்பாரா என்பதையும் ரசிகர்கள் கவனித்து பார்க்கிறார்கள்.












Click it and Unblock the Notifications