செம்மீன் ஷீலாவின் காதல்.. ஐசியூவில் ரவிச்சந்திரனின் நெற்றியில் 3 முறை கடைசி முத்தம் தந்த மகன் ஜார்ஜ்
சென்னை: ஏ.எல்.எஸ். புரொடக்ஷன்ஸ் ஜெயந்தி கண்ணப்பன், செம்மீன் புகழ் நடிகை ஷீலா பற்றி பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், நடிகர் ரவிச்சந்திரனை ஷீலா காதலித்து திருமணம் செய்தது, ஐசியூவில் ரவிச்சந்திரன் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரது மகன் ஜார்ஜை அங்கே அழைத்து சென்றது குறித்தெல்லாம் உருக்கமாக அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.
Galatta Pink என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள ஜெயந்தி கண்ணப்பன், "ஷீலா அக்கா கலைக்கு செய்த சேவை பிரம்மிக்கத்தக்கது.. ஜனாதிபதி விருது பெற வேண்டியவர்.. தகழி சிவசங்கரன் பிள்ளை எழுதிய கதைதான் செம்மீன் என்ற திரைப்படமானது..

சலீல் சௌத்ரி இசையமைத்த அந்த மலையாளப் படத்தில், ஷீலா 'கருத்தம்மா' என்ற கேரக்டரில் நடித்தார்... அது ஒரு மலையாளப் படமாக இருந்தபோதிலும், அது அன்றைய காலகட்டத்தில் சென்னையிலேயே பிரமாண்ட வெற்றியைப் பெற்றது..
செம்மீன் கருத்தம்மா
என்கிட்ட ஷீலா அக்கா அடிக்கடி சொல்லுவாங்க, "மலையாளப் படங்களில்தான் நிறைய நடிச்சேன்.. நான் கொஞ்சம் தமிழ் படத்திலதான் நடிச்சேன்.. அதனால என்னை தமிழ் ரசிகர்கள் மறந்திருப்பாங்க" என்று கவலையாக சொல்வார்..
ஏதாவது பட விழாவுக்கு நான் அவரை அழைத்தாலும், 'என்னை தமிழ் ரசிகர்களுக்கு தெரியாதே? நான் வந்தால் எனக்கு அங்கே வரவேற்பு தருவார்களா ஜெயந்தி? என்னை நினைவிருக்காதே" என்பார்.
அதற்கு நான், "இல்லவே இல்லை.. அதெல்லாம் யாருமே உங்களை மறக்கவே இல்ல... நீங்க நடித்த படங்களை தமிழ் ரசிகர்கள் ஃபாலோ பண்ணிட்டே இருக்கிறார்கள்" என்பேன்..
ரவிச்சந்திரன் - ஷீலா ஜோடி
சினிமாவில் ஒருவர் மீது காதல் வயப்படுவது, திருமணம் செய்வது சகஜமான ஒன்று.. அதுபோன்ற ஈர்ப்பு ஒருவர் மீது ஒருவருக்கு வந்துவிடும்.. அப்படித்தான், ரவிச்சந்திரன் சாரும், ஷீலா அக்காவும் திருமணம் செய்தார்கள்..
ரவிச்சந்திரனுக்கு ஏற்கெனவே விமலா என்ற உறவுக்கார பெண்ணுடன் திருமணம் ஆகி 3 குழந்தைகள் இருந்தனர்.. அதற்கு பிறகுதான் ஷீலாவை சந்தித்தார்.. 'நீ இல்லாம நான் இல்ல' என்ற நிலைமை இருவருக்குமே வந்தது. அதற்கு பிறகுதான் இருவரும் இணைந்து வாழ்ந்தனர். இது அப்போது பத்திரிகைகளில் பரபரப்பாக பேசப்பட்டது.
ஷீலாவின் செல்ல மகன் ஜார்ஜ்
இந்த தம்பதிக்கு ஒரே மகன் ஜார்ஜ்.. ஆனால், இரு திருமணம் செய்ததால் ரவிச்சந்திரனுக்கு சில சிக்கல்கள் வந்தன.. பிறகு தனக்கு பிறந்த ஒரே மகன் ஜார்ஜை தன்னந்தனியாக நின்று வளர்த்தார் ஷீலா..
எப்போதுமே காதல் வயப்படும்போது தன்னுடைய துணையின் குறைகள் தெரியாது. மற்ற விஷயங்களை அந்த நேரத்தில் பேசிக் கொள்வதும் இல்லை.. அதனால்தான், இப்போதுள்ளவர்கள் காதலிக்கும்போது அனைத்து விஷயங்களையும் இருவரும் பேசிக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறோம்.
ரவிச்சந்திரனை பிரிந்த பிறகு, ஷீலா அக்கா, பெரிய பெரிய படங்களில் அதிக கவனம் செலுத்தினார். "நாம் செய்தது தவறோ" என்று வருந்திய காலங்களும் அவருக்கு உண்டு..
ஐசியூவில் நடிகர் ரவிச்சந்திரன்
ரவிச்சந்திரன் உடல்நலம் சரியில்லாமல் ஐசியூ-வில் பேச முடியாமல் அறைகுறை மயக்கத்திலேயே இருந்தார்.
அந்த நேரத்தில் ரவிச்சந்திரனின் முதல் மனைவி விமலா அம்மா என்னிடம் வந்து, "அவரு மனசுல ஏதோ ஒரு ஆதங்கம், ஒரு ஆவல் இருக்கு.. அது நிறைவேறினால் தான் சமாதானம் அடையும் போல இருக்கு.
அவருடைய மகன் ஜார்ஜை குழந்தையில் பார்த்தது.. அவரோட மகனை நல்லா பார்க்கணும்னு அந்த விருப்பம் இப்போ இருக்கலாம்.. நிறைவேறாத விருப்பத்தினாலதான் துடிக்கிறாரோ என்னவோ. அதனால ஜார்ஜை பார்க்க ஏற்பாடு பண்றியா?" என்று கேட்டார்.
ரவிச்சந்திரனை பார்ரக்க வந்த மகன் ஜார்ஜ்
உடனே நான் ஷீலா அக்காவுக்கு போன் செய்து விஷயத்தை சொன்னேன்.. "அய்யோ என்னாச்சு அவருக்கு? என்ன ஜெயந்தி இப்படி நீ கேட்டுட்டே? என்கிட்ட உத்தரவு கேக்குறியே? ஜார்ஜ் அவர் மகன்தானே? எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை.. நீயே ஜார்ஜை கூட்டிட்டுப் போய், அவர்கிட்ட காண்பிச்சிட்டு வந்துரு.. ஜார்ஜூக்கும் ஆசை இருக்கும்தானே.. என்ன இருந்தாலும் அவங்க தகப்பனை பார்க்கணும்னு விருப்பப்படுவான்" என்றார்.
அதுக்கப்புறம் ஜார்ஜை மருத்துவமனைக்கு கூட்டிட்டு போனேன்.. அங்கிருந்தவர்களை அறிமுகப்படுத்தியதுமே, அனைவருக்கும் "வணக்கம்" சொன்னார் ஜார்ஜ்.. பிறகு டாக்டர்களிடம் பர்மிஷன் வாங்கி கொண்டு, ஐசியூ-வில் படுத்திருந்த ரவிச்சந்திரனிடம் அழைத்து சென்றேன்..
3 முறை அப்பாவுக்கு முத்தம் தந்த ஜார்ஜ்
அப்போது ஜார்ஜ், "அப்பா நான் வந்திருக்கேன்பா... ஜார்ஜ் வந்திருக்கேன்ப்பா... உனக்கு நல்லாயிடுவேப்பா... நீ வீட்டுக்கு வந்துருவேப்பா..." என்று கையை பிடித்துக் கொண்டு சொன்னார்..
உடனே ரவிச்சந்திரன் கண்ணை திறந்து பார்த்தார்.. அவரது கண்ணில் இருந்து அப்போதுத நீர் வழிந்தது.. உடனே ஜார்ஜ் அந்த கண்ணீரை துடைத்துவிட்டு, தன் அப்பாவின் நெற்றியில் 3 முறை முத்தம் தந்தார்.
இந்த காட்சியை நான் என் கண்ணால் பார்த்தேன்.. எத்தனை வருடங்களுக்கு பிறகு தந்தை-மகனுக்கும் நடந்த சந்திப்பு இது? இந்த ரத்த தொடர்பு சந்திப்பை என்னால் மறக்கவே முடியல. அதற்கு பிறகு 2 நாளில் ரவிச்சந்திரன் இறந்துவிட்டார்" என்று தெரிவித்துள்ளார்.
-
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம்












Click it and Unblock the Notifications