"Freedom at Midnight" இங்கிலீஷ் வெப் சீரிஸ் இனிக்குது! பராசக்தி கசக்குதா? காங்கிரஸின் இரட்டை வேடம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவை விமர்சித்து எடுக்கப்பட்ட ஆங்கில படமான Freedom at Midnight வெப் சீரிஸை ஆஹா ஓஹோ என பாராட்டிய காங்கிரஸ் கட்சியினர், இந்திரா காந்தியை சித்தரித்து எடுக்கப்பட்ட இந்தி எதிர்ப்பு போராட்ட படமான பராசக்திக்கு மட்டும் பொங்குவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் எதற்காக இரட்டை வேடம் போடுகிறது இந்த காங்கிரஸ் என சமூகவலைதளங்களில் விவாதங்கள் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தமிழக அரசியலில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் விஷயம் - 'பராசக்தி' திரைப்படம்! சிவகார்த்திகேயன் நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இந்தப் படம், 1965-இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

cinema parasakthi congress

இதில் காங்கிரஸ் ஆட்சியின் போது நடந்த சம்பவங்கள், குறிப்பாக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி உள்ளிட்ட தலைவர்களை சித்தரிக்கும் காட்சிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் அருண் பாஸ்கர் உள்ளிட்டோர், படத்தில் "வரலாற்று திரிபு" உள்ளதாகக் குற்றம்சாட்டி, படத்தை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். "காங்கிரஸ் தலைவர்களை தவறாக சித்தரிக்கிறது, போலியான காட்சிகள் உள்ளன, படம் pro-DMK & anti-Hindu தன்மை கொண்டது" என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

#BanParasakthiMovie என்ற ஹேஷ்டேக்குடன் பரப்புரையும் நடத்தி வருகின்றனர். ஆனால், இதே காங்கிரஸ் ஆதரவாளர்கள் மற்றும் சில தரப்பினர், 2024-இல் வெளியான 'Freedom at Midnight' (சோனி LIV தொடர்) வெப் சீரிஸில் நேரு, காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை நேரடியாக பிரிவினைக்கு காரணமாக சித்தரித்த போது எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை!

அந்தத் தொடரை பாராட்டியும், பகிர்ந்தும் கொண்டாடிய அதே நபர்கள், இப்போது 'பராசக்தி'க்கு எதிராக தீவிர போராட்டம் நடத்துவது பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது.இரட்டை வேடம் தானே இது? ஒரு பக்கம் காங்கிரஸ் தலைவர்களை விமர்சிக்கும் ஆங்கில தொடரை அமைதியாக ஏற்றுக் கொள்வது மறுபக்கம் தமிழ் உணர்வு, மொழி போராட்டத்தை மையப்படுத்திய படத்தை தடை செய்ய கோருவது.

இந்த சூழலில் பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் "பராசக்தி படம் காங்கிரஸின் துரோகத்தை தெளிவாகக் காட்டுகிறது" என்று பாராட்டி வருகின்றனர். திமுக தரப்போ இதை "தமிழ் பெருமைக்கான போராட்டத்தின் அடையாளம்" என்று கொண்டாடுகிறது.

இந்த சர்ச்சை தமிழக அரசியலில் INDIA கூட்டணி உள்ளேயே பிளவை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் தரப்பின் இந்த அணுகுமுறை உண்மையிலேயே இரட்டை வேடம் தானா? அல்லது வரலாற்று உண்மைகளைப் பாதுகாக்கும் முயற்சியா? வாசகர்களே... உங்கள் கருத்து என்ன?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+