Dhanush: தனுஷ் – மிருணாள் தாகூர் திருமணமா? அதுவும் தேதி கூட இதுதானா? பின்னணி சம்பவம்
சென்னை: தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவரான தனுஷ் மற்றும் பாலிவுட், தென்னிந்திய சினிமாவில் கவனம் ஈர்த்து வரும் நடிகை மிருணாள் தாகூர் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன. இந்த செய்திகள் உண்மையா, இல்லை வழக்கமான இணைய வதந்தியா என்பதே இப்போது ரசிகர்களிடையே பெரிய விவாதமாக மாறியுள்ளது.
42 வயதான தனுஷ் மற்றும் 33 வயதான மிருணாள் தாகூர், 2026 பிப்ரவரி 14-ஆம் தேதி திருமணம் செய்து கொல்லப் போகிறார்கள் என்று சில செய்திகள் பரவி வருகின்றன. இந்த திருமணம் மிகவும் தனிப்பட்ட முறையில் நடைபெறும் என்றும், நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. காதலர் தினத்தில் திருமணம் என்ற தகவல் தான் இந்த வதந்திக்கு கூடுதல் கவனம் கிடைக்க காரணமாக அமைந்துள்ளது.

யூகங்கள் தொடக்கம்
தனுஷ் மற்றும் மிருணாள் தாகூர் பற்றிய காதல் பேச்சுகள் முதலில் தொடங்கியது மும்பையில். 'சன் ஆஃப் சர்தார் 2' படத்தின் சிறப்பு திரையிடலுக்காக தனுஷ் மும்பை சென்ற போது, இருவரும் ஒன்றாக கைகோர்த்து நடந்த வீடியோ இணையத்தில் வைரலானது. அந்த நிகழ்வில், அவர்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாக பேசிக்கொண்ட காட்சிகளும் பதிவானது. இதை பார்த்த ரசிகர்கள், "நிச்சயமாக ஏதோ இருக்கிறது" என யூகிக்க ஆரம்பித்தனர்.
தனுஷ் பட பார்ட்டியில் மிருணாள்
இதற்கு மேலும் தீயில் நெய் ஊற்றியது போல அமைந்தது, தனுஷின் 'தேரே இஷ்க் மே' பட வெற்றிப் பார்ட்டியில் மிருணாள் தாகூர் கலந்து கொண்டது. அந்த படத்தில் அவர் நடிக்கவில்லை என்றாலும், பார்ட்டியில் அவர் கலந்து கொண்டது பல கேள்விகளை எழுப்பியது. அதோடு மட்டுமல்லாமல், தனுஷின் இரு சகோதரிகளையும் மிருணாள் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கிறார் என்பதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
உண்மையிலேயே காதலா?
சில தேசிய ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களில், தனுஷ் - மிருணாள் இருவரும் உண்மையில் காதலித்து வருவதாகவும், ஆனால் அது இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் வெளிப்படையாக பேசாமல் கவனமாக இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. சினிமா வட்டாரங்களில் இவர்களின் நட்பு கடந்த சில மாதங்களாகவே பேசப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.
மிருணாள் தாகூர் விளக்கம்
இந்த வதந்திகள் குறித்து மிருணாள் தாகூர் ஏற்கனவே ஒரு பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார். "தனுஷ் என் நல்ல நண்பர் மட்டுமே. இது எல்லாம் வேடிக்கையான வதந்தி" என்று அவர் கூறியுள்ளார். மேலும், அந்த மும்பை நிகழ்வுக்கு தனுஷ் அல்ல, நடிகர் அஜய் தேவ்கன் தான் தன்னை அழைத்ததாகவும் அவர் விளக்கம் அளித்தார். இதுவரை இந்த விஷயம் குறித்து தனுஷ் தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ பதிலும் வரவில்லை.
தனுஷின் கடந்த வாழ்க்கை
தனுஷ் 2004ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். 2022ஆம் ஆண்டு பிரிவை அறிவித்த இந்த ஜோடி, 2024ல் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றது. அதன் பிறகு தனுஷ் முழுமையாக தனது சினிமா பயணத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
மிருணாள் தாகூர் பாலிவுட்டில் 'சீதா ராமம்', 'ஜெர்சி' போன்ற படங்கள் மூலம் தனக்கென தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர். தென்னிந்திய சினிமாவிலும் அவருக்கான வாய்ப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நடிப்பு திறமை மட்டுமல்ல, எளிமையான நடத்தை காரணமாகவும் அவர் ரசிகர்களிடம் நல்ல பெயர் பெற்றுள்ளார்.
ரஜினி பிறந்த நாளில் தனுஷ் போட்ட பதிவு.. மாறாத பாசம்! கமல் முதல் சினிமா பிரபலங்களின் போஸ்டை பார்த்தீங்களா!
தனுஷ் - மிருணாள் தாகூர் திருமணம் குறித்த தகவல்கள் தற்போது வரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், இருவரையும் சுற்றியுள்ள சர்ச்சைகள் பொது நிகழ்ச்சிகளில், இருவரும் கலந்து கொள்வது போன்றவை ரசிகர்களை யூகிக்க வைத்திருக்கிறது. இது உண்மையா, இல்லை வழக்கமான சினிமா வதந்தியா என்பதை காலமே சொல்ல வேண்டும்.
அதுவரை, இந்த செய்தி தான் இணையத்தில் ஹாட் டாப்பிக்காக வலம் வருகிறது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications