ரஜினி பிறந்த நாளில் தனுஷ் போட்ட பதிவு.. மாறாத பாசம்! கமல் முதல் சினிமா பிரபலங்களின் போஸ்டை பார்த்தீங்களா!
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் பற்றிய பேச்சு தான் சில நாட்களாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் அனைவரும் எதிர்பார்த்தபடி டிசம்பர் 12ஆம் தேதி அவருடைய பிறந்த நாளும் வந்துவிட்டது. இன்று சோசியல் மீடியா முழுக்க ரஜினிக்கு பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். ரசிகர்கள் மட்டுமல்லாமல் அவருடைய முன்னாள் மருமகன் முதல் முதலமைச்சர் வரை பலரும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். அது பற்றி பார்க்கலாம்.
பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய பதிவில், ரஜினிகாந்தின் 75 ஆவது பிறந்தநாள் என்னும் சிறப்பான தருணத்தில் அவருக்கு வாழ்த்துக்கள். அவரது நடிப்பாற்றல் பல தலை முறைகளை கவர்ந்துள்ளது. பரவலாக பாராட்டை பெற்றுள்ளது. அவரது திரை உலக படைப்புகள் பல்வேறு பாத்திரங்கள் மற்றும் பணிகளில் பரவி தொடர்ச்சியாக முத்திரைகளை பதித்துள்ளன. திரைப்பட உலகில் அவர் 50 ஆண்டுகள் நிறைவு செய்திருப்பது இந்த ஆண்டில் குறிப்பிடத்தக்க அம்சமாகும். அவருடைய நீண்ட கால ஆரோக்கியமான வாழ்க்கைக்காக பிராத்திக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

முதலமைச்சர் வாழ்த்து
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தன்னுடைய வாழ்த்து பதிவில்," ரஜினிகாந்த் = வயதை வென்ற வசீகரம். மேடையில் ஏறினால் அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை! உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசாத கள்ளம் கபடற்ற நெஞ்சம். ஆறிலிருந்து அறுபது வரைக்கும் நூற்றாண்டு கவர்ந்திழுக்கும் என் நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உளம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். மேன்மேலும் பல வெற்றி படைப்புகளை அளித்து மக்களின் அன்போடும் ஆதரவோடும் தங்கள் வெற்றி கொடி தொடர்ந்து பறக்கட்டும்" என்று கூறியிருக்கிறார்.
தனுஷ் வாழ்த்து
அதுபோல நடிகரும் ரஜினிகாந்தின் முன்னாள் மருமகனுமான தனுஷ் தன்னுடைய எக்ஸ் தளத்தில், "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா" என்று வாழ்த்தி அவரை டேக் செய்திருக்கிறார். அதுபோல் கவிஞர் வைரமுத்து படையப்பா படத்தில் ரஜினிகாந்த்காக தான் எழுதிய பாடல்கள் மற்றும் ரஜினிகாந்த் மீது தனக்கு இருக்கும் அன்பு மற்றும் பாசத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார்..
இவர்களைப் போல நடிகர் கமல்ஹாசனும் தன்னுடைய எக்ஸ் தளத்தில், "75 ஆண்டுகள் சிறப்பான வாழ்க்கை. 50 ஆண்டுகள் வெற்றிகரமான சினிமா வாழ்க்கை. எனது நண்பர் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என்று தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சின்னத்திரை வெள்ளித்திரை பிரபலங்கள் பலரும் ரஜினிகாந்துடன் எடுத்த புகைப்படங்களை தங்களுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து வாழ்த்துக்களை கூறி ரஜினி பற்றிய நினைவுகளையும் பகிர்ந்து வருகிறார்கள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications