Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Dhanush Mrunal: தனுஷ்- மிருணாள் தாகூர் இடையே காதல் உருவானது எப்படி? பிப்.14, 2025-ல் நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் தனுஷுக்கும் நடிகை மிருணாள் தாகூருக்கும் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி திருமணம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கிடைத்துள்ள நிலையில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது எப்படி என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

Dhanush Mrunal Thakur

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ், நடிகை மிருணாள் தாகூரை விரைவில் மணம் புரிய உள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வருவதாகவும், இவர்களது திருமணம் தொடர்பான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இவர்களுக்குள் காதல் இருப்பதாக சில மாதங்களுக்கு முன் தகவல்கள் பரவியபோது, இருவரும் இணைந்து நடிக்காததால் அது வெறும் வதந்தியாகவே பார்க்கப்பட்டது. ஆனால், மும்பையில் நடைபெற்ற மிருணாள் தாகூர் நடித்த 'SON OF SARDAR 2' திரைப்படத்தின் சிறப்பு வெளியீட்டு விழாவில் தனுஷ் பங்கேற்றது, இவர்களுக்கு இடையேயான உறவு குறித்த பேச்சுக்களை மீண்டும் வலுப்பெறச் செய்தது.

பிப்ரவரியில் திருமணம்?

தற்போது இந்தி ஊடகங்கள் இவர்களின் திருமணம் குறித்து புதிய தகவல்களை வெளியிட்டுள்ளன. தனுஷ் மற்றும் மிருணாள் தாகூர் பல மாதங்களாக காதலித்து வருவதாகவும், வருகிற பிப்ரவரி மாதத்தில் திருமணம் செய்ய உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் இரு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ் முன்னர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை மணம் முடித்து, அவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்கின்றனர். தற்போது தனுஷ் மறுமணத்திற்கு ஆயத்தமாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இது உண்மைதான் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதாகவும் தெலுங்கு நடிகரும் இயக்குநருமான வெண்ணேலா கிஷோர் ரெட்டி கூறியிருக்கிறார்.

தனுஷ்- மிருணாள் தாகூர் காதல்?

அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: மிருணாள் தாகூர், தனுஷ் இருவரும் காதலிப்பது குறித்து இறுதியாக ஒரு தெளிவு கிடைத்துள்ளது. 11 மாதங்களாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். கடந்த ஆண்டு சென்னையில் பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் சந்திப்பிலேயே அவர்களுக்கு இடையே நட்பு உருவாகி, காதல் மலர்ந்தது.

கடந்த ஆண்டு மிருணாள் எதற்காக சென்னை வந்திருந்தார் என்பது யாருக்குமே தெரியாது. தனுஷை தான் சந்தித்ததாக அவர் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. ஆனால் மும்பையில் இருந்து சென்னைக்கு அவர் தனது குழுவினருடன் வந்ததே தனுஷுடன் ஒரு படம் குறித்து விவாதிப்பதற்காகத்தானாம்.

தனுஷ் பிஸி

எனினும் அந்த சமயம் ஒரே நேரத்தில் இரு படங்களில் தனுஷ் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார். நிறைய பேட்டிகளில் தனக்கு தனுஷை பிடிக்கும் என மிருணாள் தெரிவித்திருந்தார். ஆனால் அவரை எப்போதும் சமூகவலைதளங்களில் பாலோ செய்ததில்லை.

ஆனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தனுஷும் மிருணாளும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவரை ஒருவர் பின்தொடர்ந்தனர். அதன் பிறகு இரு மாதங்கள் கழித்து தனுஷின் சகோதரிகளான விமலா கீதா, கார்த்திகா தேவி ஆகியோரை மிருணாள் இன்ஸ்டாவில் பாலோ செய்துள்ளார்.

சர்தார் 2

கடந்த ஆண்டு ஜூலை 29ஆம் தேதி சர்தார் 2 குறித்து இன்ஸ்டா ஸ்டோரியில் மிருணாள் பேசிய போது தனுஷின் இட்லி கடை படத்தில் வந்த பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. தனது சொந்த படத்தை பிரமோட் செய்ய மிருணாள் தனுஷ் பாடலை பயன்படுத்தியிருக்கிறார். இதிலிருந்து இருவருக்கும் இடையே எவ்வளவு ஆழமான காதல் இருக்கிறது என்பது தெரிகிறது.

மும்பையில் விழா

அது போல் Son of Sardaar 2 என்ற படத்தின் ப்ரீ ரிலீஸ் மும்பையில் நடந்த போது அந்த விழாவுக்கு வந்த தனுஷை மிருணாள் வரவேற்றார். இதனால் இவர்களுக்குள் காதல் இருப்பதை உறுதி செய்து செய்திகள் வந்த போது அதை மிருணாள் மறுத்தார். மேலும் தனுஷ் தனக்கு நல்ல நண்பர் என்றும், அவரை அந்த விழாவுக்கு அழைத்தது அஜய் தேவ்கன் என்றும் தனுஷ் மும்பையில் ஷூட்டிங்கில் இருந்ததால் அவர் அழைக்கப்பட்டார் என்றும் மிருணாள் சமாளித்தார். ஆனால் உண்மையில் தனுஷ் நடிக்கும் இந்தி படத்தின் படப்பிடிப்பு அந்த நிகழ்வுக்கு 20 நாட்களுக்கு முன்பே நடந்துவிட்டது.

ஒய் திஸ் கொலவெறி

கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி மிருணாள் போஸ்ட் செய்த இன்ஸ்டா ஸ்டோரியில் அவரும் அவரது தோழிகளும் ஒரு பார்ட்டில் "Why This Kolaveri kolaveri kolaveri D?" என்ற 3 படத்தில் வந்த தனுஷ் பாடலை பாடிய படியே நடனம் ஆடுகிறார்கள். எனவே இதையெல்லாம் கூட்டிக் கழித்து பார்க்கும் போது இருவருக்குள்ளும் காதல் இருப்பது தெளிவாக தெரிகிறது என நடிகர் வெண்ணேலா கிஷோர் ரெட்டி தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+