Rajakumaran : “விஜய் அழுதாலே என்னால பார்க்க முடியாது” இது சகிக்கல! இயக்குநர் ராஜகுமாரன் ஆதங்கம்
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் நடிகர் விஜய், ரசிகர்களின் மனதில் தனித்த இடத்தை பிடித்தவர். அவரது நடிப்பு, ஸ்டைல், எளிமை மட்டுமல்லாமல், திரையில் அவர் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளும் ரசிகர்களை ஆழமாக பாதிக்கும் வகையில் அமைந்திருக்கின்றன. அந்த வகையில், விஜய் குறித்த இயக்குநர் ராஜகுமாரன் சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
சமீபத்தில் அளித்த பேட்டியில், நடிகர் விஜய் நடித்த சில திரைப்படங்களைப் பற்றி தனது தனிப்பட்ட கருத்துகளை பகிர்ந்துள்ளார் ராஜகுமாரன். அந்த பேட்டியில், "நான் 'பிகில்' படம் பார்த்தேன். அந்த படம் எனக்கு பிடிச்சிருந்தது. ஆனால், 'தெறி' படத்தை என்னால பார்க்கவே முடியல. ரொம்ப குரூரமா இருந்தது. குறிப்பாக விஜய் சாகுற சீன்களை எல்லாம் பார்க்க சகிக்கல" என்று அவர் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து, விஜய்யின் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகள் தன்னை எவ்வளவு பாதிக்கிறது என்பதையும் அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். "விஜய் கண்கலங்கினாலே என்னால பார்க்க முடியாது. ஏன்னா விஜய் மேல நமக்கு ஒரு ஈர்ப்பு இருக்கு. அவர் அழுதா அதை பார்க்க முடியல" என்று அவர் கூறியது ரசிகர்களிடையே அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
இயக்குநர் ராஜகுமாரன், தேவயானியின் கணவர் என்ற அடையாளத்தாலேயே அதிகம் அறியப்படுகிறார். 'நீ வருவாய் என', 'விண்ணுக்கும் மண்ணுக்கும்', 'காதலுடன்', 'திருமதி தமிழ்' உள்ளிட்ட சில திரைப்படங்களை இயக்கியுள்ளார். இந்த படங்களின் அனைத்திலும் தேவயானியே கதாநாயகியாக நடித்திருந்தார்.
தேவயானி உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் அவரை திருமணம் செய்து கொண்ட பிறகு, ராஜகுமாரனுக்கு இயக்குநராக பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. அதனைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் நடிகராகவும் அவர் நடித்திருந்தார்.
கடந்த சில வருடங்களாக ஊடகங்களில் தொடர்ந்து பேட்டி கொடுத்து வரும் ராஜகுமாரன், பல சர்ச்சைக்குரிய கருத்துகளையும் வெளியிட்டு வருகிறார். கமல் ஹாசன், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் குறித்து விமர்சனங்களை முன்வைத்ததுடன், விஜய் நடித்த 'வாரிசு' படத்தில் விஜயை விட சரத்குமார் சிறப்பாக நடித்திருந்தார் என்றும் அவர் பேசியது ரசிகர்களிடையே கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.
அதேபோல், விஜயின் அரசியல் பயணம் குறித்தும் "தேர்தலில் விஜய்க்கு டெபாசிட் கூட கிடைக்காது", "அரசியலில் அவருக்கு எந்த பயிற்சியும் இல்லை" என்றெல்லாம் ராஜகுமாரன் பேசியது பெரும் சர்ச்சையாக மாறியது.
இந்த பின்னணியில், தற்போது அவர் விஜயின் படங்கள் குறித்து வெளிப்படுத்திய உணர்ச்சிப்பூர்வமான கருத்துகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. குறிப்பாக 'தெறி' படத்தில் வரும் விஜயின் மரணக் காட்சிகளை தன்னால் பார்க்க முடியவில்லை என்ற அவரது பேச்சு, விஜய் ரசிகர்களிடையே பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications