ஜனநாயகனை விடுங்க.. உன்னை நினைத்து படத்தில் விஜய் நடித்தபோது.. விக்ரமன் உருக்கம்! இப்படியும் நடந்ததா?
சென்னை: நடிகர் விஜய், 'ஜனநாயகன்' தான் தனது கடைசி படம் என்றும், அதன் பிறகு சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்றும் அறிவித்திருப்பது, தற்போது சோசியல் மீடியாவில் மிகப்பெரிய விவாதமாக மாறியுள்ளது. ரசிகர்கள் மட்டுமல்லாமல், விஜய்யுடன் பணியாற்றிய பல திரை பிரபலங்களும் தங்களுடைய நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், பிரபல இயக்குனர் விக்ரமன், விஜய் குறித்து வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

விக்ரமன் வருத்தம்
விக்ரமன் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், "விஜய் சினிமாவை விட்டு விலகுகிறேன் என்று சொல்வது எனக்கு வருத்தமாக தான் இருக்கிறது"
என்று மனம் திறந்து பேசியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது, "நான் 'உன்னை நினைத்து' படத்தை விஜயை வைத்துத்தான் ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் சில நாட்கள் ஷூட்டிங் போனது. இரண்டு பாடல்கள் கூட விஜயை வைத்து சூட் செய்து விட்டோம். அதை நீங்கள் பாருங்கள்" என்று அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
என்னை தாலாட்டும் பாடல்
அந்த பதிவில் விக்ரமன் மேலும் கூறியுள்ள முக்கியமான தகவல் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது. 'உன்னை நினைத்து' படத்தில் இடம்பெற்ற 'என்னை தாலாட்டு' பாடல், சமீபத்தில் இலங்கையில் சிங்கள மாணவர்களால் பாடப்பட்டு சோசியல் மீடியாவில் வைரலானது.
இந்த பாடலை, "முதலில் தளபதி விஜயை வைத்துத்தான் படமாக்கியிருந்தேன்" என்றும், அந்த நினைவுகள் தோன்றிய போது, அந்த பாடல் தொடர்பான பழைய வீடியோ கேசட் ஒன்று கிடைத்தது என்றும் விக்ரமன் தெரிவித்துள்ளார்.
டேமேஜ் ஆன பழைய வீடியோ
அந்த பழைய வீடியோ கேசட் மிகவும் டேமேஜ் ஆகி இருந்ததாகவும், அதை அப்படியே ரசிகர்களின் பார்வைக்கு போஸ்ட் செய்வதாகவும் விக்ரமன் கூறியுள்ளார்.
மேலும் அந்த பதிவில், "Please don't compare this video with the existing video by Mr. Suriya"என்று குறிப்பிட்டு, சூர்யா நடித்த இறுதி பதிப்புடன் ஒப்பிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
வைரலாகும் விக்ரமனின் பதிவு
விக்ரமன் வெளியிட்ட இந்த வீடியோ பதிவு, தற்போது சோசியல் மீடியாவில் அதிகமான லைக் மற்றும் கமெண்ட்களை குவித்து வருகிறது.
விஜயின் கடைசி படம் குறித்த அறிவிப்பால் உணர்ச்சி வசப்பட்ட ரசிகர்கள், இந்த வீடியோவை பகிர்ந்து தங்களுடைய நினைவுகளையும் பதிவு செய்து வருகின்றனர்.
உன்னை நினைத்து படம்
'உன்னை நினைத்து' படம், 2000களின் தொடக்கத்தில் வெளியான ஒரு முக்கியமான காதல், சென்டிமென்ட் ஆன படம். இந்த படத்தை இயக்குனர் விக்ரமன் இயக்க, இசையை சிற்பி அமைத்திருந்தார்.
இந்த படம் வெளியான போது, அதன் கதை, பாடல்கள், உணர்ச்சி காட்சிகள் அனைத்தும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

விஜய்க்கு பதிலாக சூர்யா
இந்த படத்தை முதலில் விஜயை வைத்து ஆரம்பித்த விக்ரமன், பின்னர் சில காரணங்களால் விஜய் இந்த படத்திலிருந்து விலக, அவருக்கு பதிலாக சூர்யா இந்த படத்தில் நடித்தார். இந்த மாற்றமே, சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
'உன்னை நினைத்து' படம், சூர்யாவை ஒரு வளர்ந்து வரும் நடிகராக இருந்து, முன்னணி நடிகர் வரிசையில் நிறுத்திய படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
இந்த படத்தின் வெற்றி, சூர்யாவுக்கு தொடர்ந்து நல்ல கதைகள் கிடைக்க காரணமாக அமைந்தது. மேலும் இந்த படம், பல்வேறு விருதுகள் மற்றும் பாராட்டுகளை பெற்றதோடு, இன்றளவும் ரசிகர்களால் நினைவுகூரப்படும் படமாக உள்ளது.












Click it and Unblock the Notifications