சாமியாராகும் நடிகை நளினி? தங்கம் தியேட்டரையே அன்று வாங்கின ராமராஜன்! மறக்க முடியாத நட்சத்திர காதல்
சென்னை: நளினி சாமியாராக போக போவதாக செய்திகள் கசிந்தன.. சாமியாராக போவது கடைசி காலத்தில் அவரவர் மனப்பக்குவத்தை பொறுத்தது.. ஒரு நடிகையாக இருந்துவிட்டு சாமியாராக சென்றாலும், அங்கேயும் பிரச்சனை செய்ய நாலு பேர் இருப்பார்கள்.. மேலும், ஒரு நடிகையாகத்தான் பார்ப்பார்களே தவிர, நளினியை சாமியாராக யாரும் பார்க்க மாட்டார்கள் என்று தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார் சபிதா ஜோசப்.
King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப், நடிகர் ராமராஜன் உதவி இயக்குனராக இருந்தபோதே நளினியை காதலித்தார்.. அப்போது நளினி உச்ச நடிகையாக இருந்தார்..

நளினி - ராமராஜன்
ராம நாராயணன் படங்களில் நடித்தபோது, நளினி - ராமராஜன் இடையே புரிதல் ஆரம்பமானது.. இருவருமே வெளிப்படையாக சொல்லி கொள்ளவில்லை என்றாலும், காதல் மட்டும் ஆழமாக வளர்ந்தது..
அதற்கு பிறகு மருதாணி என்ற படத்தை ராமராஜன் டைரக்ட் செய்தபோதுதான் தன்னுடைய காதலை நளினி சொல்ல ஆரம்பித்தார்.. ஆனால் இந்த காதலை நளினி குடும்பத்தில் ஏற்கவில்லை..
மோகன் உள்ளிட்ட பிரபலமான நடிகர்களுடன் அப்போது நளினி நடித்து கொண்டிருந்ததால், அவரை பொன் முட்டையிடும் வாத்து போலவே குடும்பத்தினர் நினைத்தனர்.. திருமணம் செய்து கொண்டால் தங்களுக்கான வரவு குறைந்துவிடுமே என்று நினைத்தனர்.. இந்த எதிர்ப்பையும் மீறி இருவரும் ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.
ஆரம்பத்திலிருந்தே எம்ஜிஆரின் தீவிர ரசிகரான ராமராஜன், திருமணம் முடித்ததுமே எம்ஜிஆரை நேரில் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டனர்.
பசுநேசன், கிராம ராஜன்
பிறகு ராமராஜன் படங்கள் ஹிட்டாகின.. பசுநேசன், கிராம ராஜன் என்றெல்லாம் கிராமங்களில் ராமராஜனை கொண்டாடினார்கள்..
திருமணத்துக்கு பிறகு நளினியை நடிக்க கூடாது என்றும் ராமராஜன் சொன்னதில்லை என்றாலும் காதல் மனைவி தன்னுடனேயே இருக்க வேண்டும் என்றும் நினைத்தார்.. பிறகு மனஸ்தாபம் காரணமாக இருவரும் பிரிந்துவிட்டதாலும் நல்ல புரிதலுடன்தான் இருக்கிறார்கள்.. ஒன்றாக வாழவில்லையே தவிர, ஒன்றாக சேர்ந்துதான் பிள்ளைகள் திருமணத்தையும் நடத்தியிருக்கிறார்கள்.
பரஸ்பர அன்பு
எனக்கு அவர் மீது அன்பு உள்ளது, அவர் மீது எனக்கு அன்பு உள்ளது.. சில காரணங்களுக்காக நாங்கள் பிரிந்துவிட்டோம் என்றாலும் நாங்கள் நல்ல நண்பர்களாக இப்போது வரை உள்ளோம்.. என்று இருவருமே வெளியில் சொல்ல துவங்கினார்கள்..
பலவிதமான கேரக்டர்களில் நடிக்க நளினி ஆரம்பித்துவிட்டார் என்றாலும், ராமராஜனோ, நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று பிடிவாதமாக உள்ளார்.. இத்தனைக்கும் குணசித்திர வேடங்கள், வில்லன் வேடங்கள் நிறைய வந்தது. ஆனால் ராமராஜன் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போது அந்த வேடங்கள் எதுவுமே தனக்கு தேவையில்லை என்று சொல்லிவிட்டார்.
நளினி சாமியாரா?
எனினும் நளினி-ராமராஜன் இருவரும் சேர வாய்ப்பில்லை.. மனம்விட்டு பேசி சந்தோஷமாக வாழக்கூடிய நாட்களை இருவருமே தொலைத்துவிட்டார்கள்.. இருவருக்குள்ளும் புரிதல் உள்ளதால் அப்படியே வாழ்ந்துவிட நினைக்கிறார்கள்..
நளினி சாமியாராக போக போவதாக செய்திகள் கசிந்தன.. சாமியாராக போவது கடைசி காலத்தில் அவரவர் மனப்பக்குவத்தை பொறுத்தது.. ஒருநடிகையாக இருந்துவிட்டு சாமியாராக சென்றாலும், அங்கேயும் பிரச்சனை செய்ய நாலு பேர் இருப்பார்கள்.. மேலும், ஒரு நடிகையாகத்தான் பார்ப்பார்களே தவிர, நளினியை சாமியாராக யாரும் பார்க்க மாட்டார்கள்..
தங்கம் தியேட்டர்
அப்போதிருந்தே தன்னுடைய சம்பாத்தியத்தில் மட்டுமே வாழ்ந்து வருகிறார் ராமராஜன்.. மனைவி மூலமாக சம்பாதித்த பணத்தை அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை..
தங்கம் தியேட்டரில்தான் டிக்கெட் கிழித்து வேலை பார்த்தார்.. பின்னாளில் நடித்து புகழ்பெற்று, அதே தியேட்டரை விலைக்கு வாங்கினார் ராமராஜன்.. எனினும் அந்த தியேட்டரையும் ராமராஜன் விற்றுவிட்டதாக சொன்னார்கள்..
அதேபோல நளினியும், தன்னுடைய 2 குழந்தைகளையும் நன்றாக படிக்க வைத்தார்.. அவர்களுக்கு நல்லபடியான வாழ்க்கையையும் இன்று அமைத்து தந்துள்ளார்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications