மலேசியாவில் ஜன நாயகன் கோலாகலம்.. டிக்கெட் ரூ.10000 வரை.. விஜய்யின் ராயல் ட்ரீட்மென்ட் ஆடியோ லான்ச்
சென்னை: ஜனநாயகன் விழாவில் ரஜினி, அஜித் போன்றோர் கலந்து கொள்ள வாய்ப்பில்லை.. அஜித், விஜய் இருவருமே நெருங்கிய நட்பில் இருந்தாலும், அஜித் கலந்து கொள்ள மாட்டார்.. தன் படத்தின் ஆடியோ லான்ச்சில் அஜித் கலந்து கொள்வதில்லை என்பதால், இந்த விழாவிலும் கலந்து கொள்ள மாட்டார். ஆனால், தனிப்பட்ட முறையில் தன்னுடைய வாழ்த்தை விஜய்க்கு சொல்வார்" என சொல்கிறார் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு,
Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, "இதுவரை தமிழ் சினிமாவில் நடக்காத பிரம்மாண்டமான ஜன நாயகன் ஆடியோ லான்ச்சாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜனநாயகன் தன்னுடைய கடைசி படம் என்று விஜய்யும் சொல்லி விட்டார்.. எனவே, விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கு முன், அவரது முழு வெற்றியையும் மாஸையும் காட்டும் விதமாக இந்த விழா நடத்தப்படுகிறது..

அரசியலுக்கு விஜய் வந்துவிட்டதால், ஏகப்பட்ட நெருக்கடிகள், சிரமங்கள் ஏற்படலாம் என்பதால், ஜனநாயகன் நிகழ்ச்சியை மலேசியாவில் நடத்திவிடலாம் என்று முடிவெடுத்துள்ளனர்.
இதுவரை தமிழ் சினிமாவில் நடக்காத பிரம்மாண்டமான ஆடியோ லான்ச்சாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தன்னுடைய கடைசி படம் என்று விஜய்யும் சொல்லி விட்டார்.. எனவே, விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கு முன், அவரது முழு வெற்றியையும் மாஸையும் காட்டும் விதமாக இந்த விழா நடத்தப்படுகிறது..
மலேசியாவில் ஜன நாயகன் பிரம்மாண்டம்
இன்றைய முன்னணி தமிழ் இயக்குனர்கள், விஜய்யை வைத்து ஏற்கனவே படம் எடுத்த அட்லி, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலரும் இவ்விழாவில் கலந்து கொள்கிறார்கள்.. முன்னணி தயாரிப்பாளர்கள், ஜன நாயகன் படத்தில் நடித்தவர்கள், தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல், கர்நாடகா, ஆந்திரா,கேரளாவில் உள்ள பிரபல நடிகர்கள், நடிகைகள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள போகிறார்கள்..
இவர்கள் அனைவருக்குமே டிக்கெட் போட்டாச்சு.. அனைவரையும் பட்டு கம்பளம் விரித்து அழைத்து செல்லப்படுகிறார்கள்..இந்நிகழ்ச்சியை நடத்துவது முதல் மொத்த ஏற்பாட்டையும் மாலிக் செய்துள்ளார்.. ஜன நாயகம் படத்தின் மலேசிய விநியோக உரிமையாளர்தான் மாலிக்.. இவர்தான் இந்த விழாவை ஏற்று நடத்துகிறார். இவர் மலேசியாவின் ஒரு "பவர் சென்டர்" மற்றும் பெரிய செல்வந்தராக உள்ளார்..
ஆடிட்டோரியம் - 90000 பேர்
இந்த ஆடியோ வெளியீட்டு விழாவை பெரிய ஆடிட்டோரியத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.. அந்தவகையில் சுமார் 90,000 பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது... மொத்த கூட்டத்தையும் கட்டுப்படுத்துதல், ஒழுங்குபடுத்துதல், எந்தப் பாதையில் வருவது, திரும்புவது, தண்ணீர், உணவு, கழிப்பறை வசதிகள், கூட்டம் உள்ளே வருவது, வெளியேறுவது போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் பக்காவாக திட்டமிடப்பட்டுள்ளன.
கிட்டத்தட்ட 4 முதல் 5 மணி நேரம் நடக்கவுள்ள நிகழ்ச்சி என்பதால், ரசிகர்களுக்கு எந்த அசௌகரியமும் ஏற்படாதவாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்ல, தமிழர்கள் அதிகமாக உள்ள மலேசியா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.. மேலும் சுற்றுலா பயணிகளும் இங்கு அதிகமாக வருகிறார்கள்..
டிக்கெட் ரூ.10 ஆயிரம்
இது இலவச விழா கிடையாது,.. டிக்கெட் போடுகிறார்கள்.. டிக்கெட்டின் குறைந்தபட்ச விலை ரூ.3,000-ல் இருந்து ஆரம்பித்து அதிகபட்சமாக ரூ.10,000 வரை விற்கப்படுகிறது. 90,000 டிக்கெட்டுகளில், 10,000 டிக்கெட்டுகள் விஐபிக்களுக்கு இலவசமாக கொடுக்கப்படலாம்..
எப்படியும் குறைந்தபட்சம் ஒரு டிக்கெட், 3 ஆயிரம் என்று டிக்கெட் வைத்து கொண்டாலும், டிக்கெட்டுகள் விற்பதன் மூலம் ரூ.24 கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 12 கோடி கொடுத்து இந்த ஜனநாயகன் படத்தின் உரிமையை வாங்கும் மாலிக்குக்கு, எப்படியும் இந்த விழா நடத்துவதால், 12 கோடி லாபத்தை எடுக்கலாம்..
மலேசியாவில் உள்ள முக்கியத் தொழிலதிபர்கள், விஐபிகள் என முதல் 4 வரிசைகளில் உட்காருவதற்காக லட்சக்கணக்கில் டொனேஷன் கொடுத்திருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன..
7 ஸ்டார், 5 ஸ்டார் ஓட்டல்கள்
அழைக்கப்பட்ட பிரபலங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் 'ராயல் ட்ரீட்மென்ட்' கொடுக்கப்பட்டுள்ளது. 5 ஸ்டார், 7 ஸ்டார் ஹோட்டலில் தங்குவதற்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களும் செய்யப்படுகின்றன..
இந்த விழாவில் ரஜினி, அஜித் போன்றோர் கலந்து கொள்ள வாய்ப்பில்லை.. அஜித், விஜய் இருவருமே நெருங்கிய நட்பில் இருந்தாலும், அஜித் கலந்து கொள்ள மாட்டார்.. தன் படத்தின் ஆடியோ லான்ச்சில் அஜித் கலந்து கொள்வதில்லை என்பதால், இந்த ஜனநாயகன் விழாவிலும் கலந்து கொள்ள மாட்டார். ஆனால், தனிப்பட்ட முறையில் தன்னுடைய வாழ்த்தை விஜய்க்கு சொல்வார்..
மீண்டும் நடிக்க வருகிறாரா விஜய்
ஆனால் இன்னொன்றையும் சொல்கிறேன், ஆந்திராவில் பவன் கல்யாண போல, ஜனநாயகன் படத்துக்கு பிறகும் விஜய் சினிமாவில் தொடர்ந்து நடிப்பார்..
அரசியலில் வெற்றி தோல்வி அடைந்தாலும்சரி, ஜனநாயகன் படம் வெற்றி, தோல்வியை பெற்றாலும் சரி, மீண்டும் சினிமாவில் விஜய் நடிப்பார்.. காரணம், சினிமாவை உயிராய் நினைப்பவர் விஜய்,..
மலேசியா விழாவிலும் ஜன நாயகன் தன்னுடைய கடைசி படம் என்றும் சொல்ல மாட்டார்.. இதை எழுதி வைத்து கொள்ளுங்கள்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications