ரூ.3000 FDFS டிக்கெட்… சாமானிய ரசிகனுக்கு “ஜனநாயகன்” தடைபட்ட படமா? விஜய்யின் மௌனம் என்ன அர்த்தம்?
சென்னை: நடிகர் விஜய்யின் கடைசி படம் என அறிவிக்கப்பட்டுள்ள ஜனநாயகன் வெளியாகும் முன்பே, அரசியல் பேசும் கதையை விட, பணம் பேசும் சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. தணிக்கை சான்றிதழ் சிக்கல் ஒருபுறம் இருக்க, தற்போது முதல் நாள் முதல் காட்சி டிக்கெட் விலை குறித்த தகவல்கள், ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ரூ.3000-க்கு சென்ற பயணம்
ஜனநாயகன் படத்தின் FDFS டிக்கெட்டுகள் சில இடங்களில் ரூ.600, ரூ.800, ரூ.1000 என விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகின. விஜய்யின் கடைசி படம் என்பதால், "ஒரு நாள் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை" என்று நினைத்த ரசிகர்கள் கூட இருந்தனர்.
ஆனால் தற்போது வெளியாகும் தகவல்களின்படி, சில மாவட்டங்களில் அதே முதல் காட்சி டிக்கெட்டுகள் ரூ.2000 முதல் ரூ.3000 வரை வசூல் செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது ரசிகர்களின் பொறுமையையே சோதிக்கும் அளவிற்கு சென்றுள்ளது.
அரசு விலை காகிதத்தில் மட்டும்
சில தியேட்டர்கள் "அரசு நிர்ணயித்த விலைக்கே டிக்கெட் விற்கப்படுகிறது" என்று சமூக வலைத்தளங்களில் விளக்கம் கொடுத்திருந்தாலும், நிஜத்தில் நடப்பது வேறு என்றே ரசிகர்கள் சொல்கிறார்கள்.
தியேட்டர் கவுண்டரில் இல்லை, ஆன்லைனில் இல்லை, ஆனால் பிளாக் மார்க்கெட்டில் டிக்கெட் கிடைக்கிறது. அதில் டிக்கெட் விலை மட்டும் ரூ.3000. இது கருப்பு பணம் இல்லாமல் வேற என்ன? என்ற கேள்வி பலருக்கும் வருகிறது
அரசு நிர்ணயித்த விலையை மீறி டிக்கெட் விற்கப்படுவது சட்டவிரோதம் என்பதே உண்மை. ஆனால் ஜனநாயகன் பெயரில் அது நடக்கும் போது, அதை யாரும் ஊழல் என்று சொல்லத் தயங்குவது ஏன்?
விஜய் அரசியலுக்கு வரப் போகிறார். மக்கள், சாமானியர்கள், ஏழைகள் பற்றி பேசப் போகிறார். ஆனால் அதே மக்களே அவரது கடைசி படத்தை பார்க்க ரூ.3000 கொடுக்க வேண்டும் என்றால், அந்த அரசியல் யாருக்கானது? என்ற கேள்வியும் பலருடைய குமுறலாக இருக்கிறது.
விஜய்யின் மௌனம்
இதுவரை இந்த விவகாரம் குறித்து நடிகர் விஜய் சார்பிலோ, விஜய் மக்கள் இயக்கம் சார்பிலோ எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் இல்லை. அதிக விலையில் டிக்கெட் விற்க வேண்டாம் என்று ஒரு வரி கூட விஜய் தரப்பிலிருந்து சொல்ல இல்லை.
இந்த மௌனம், "எப்படி வித்தாலும் பரவாயில்லை, படம் ஓடணும்" என்ற சம்மதமாகவே பார்க்கப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது.
சாமானிய ரசிகனின் குமுறல்
பல ஆண்டுகளாக விஜயை தூக்கி நிறுத்தியது மல்டிப்ளெக்ஸ் கூட்டமல்ல. முதல் நாள் முதல் காட்சிக்காக கடன் வாங்கி போன ரசிகர்கள் தான்.
இன்று அந்த ரசிகனுக்கு, "பணம் இருந்தா வா, இல்லன்னா ஒதுங்கு" என்ற மெசேஜ் தான் ஜனநாயகன் தருகிறதா?

வசூல் அரசியல்
ஜனநாயகன் அரசியல் பேசும் படம் என்கிறார்கள். ஆனால் ரிலீசுக்கு முன்பே நடப்பது முழுக்க வசூல் அரசியல். அரசு விலையை மதிக்காத வசூல், அதை பார்த்தும் பேசாத ஹீரோ, கேள்வி கேட்ட ரசிகனை "எதிரி"யாக மாற்றும் சூழல் - இதுதானா புதிய அரசியல்? என்று பலர் சோசியல் மீடியாவில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
"விஜயின் கடைசி படம்" என்ற ஒற்றை வரி, எல்லா தவறுகளுக்கும் கவர் நோட்டாக மாறிவிட்டதா? ரூ.3000 டிக்கெட், சட்ட சிக்கல், மறைமுக வசூல் - இதெல்லாம் பேசக்கூடாத விஷயங்களா?
ஜனநாயகன் மக்கள் அரசியல் பேசும் படம் என்றால், முதலில் அந்த மக்களுக்கே அது எட்ட வேண்டாமா? இல்லை, அரசியல் பேசுவது திரையில் மட்டும், வசூல் நடப்பது தரையில் தான் என்றால், ரசிகர்கள் கேள்வி கேட்கத்தான் செய்வார்கள்.
இந்த மௌனம் உடையுமா, இல்லை ரூ.3000 டிக்கெட் தான் "ஜனநாயகன் அரசியல்" என்றே நிலைத்துவிடுமா என்பதே, இப்போது தமிழ் சினிமாவின் பெரிய கேள்வி.
-
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்!












Click it and Unblock the Notifications