Jana Nayagan Audio Launch: மலேசியாவில் ஜனநாயகன் நிகழ்ச்சி தொடக்கம்! ரசிகர்கள் செய்த சம்பவம்! ஸ்தம்பித்த போக்குவரத்து
சென்னை: நடிகர் விஜய்யின் திரை வாழ்க்கையின் கடைசி திரைப்படமாக கருதப்படும் 'ஜனநாயகன்' படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில், அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள குதிந்த ரசிகர்களால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது.
எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம், விஜய் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அதன் ஆடியோ லாஞ்ச் இன்று மலேசியாவின் புகழ்பெற்ற புக்கிட் ஜலீல் தேசிய மைதானத்தில் நடைபெறுகிறது. 80 ஆயிரம் பேர் அமரக்கூடிய இந்த மைதானத்திற்கான டிக்கெட்டுகள் சில தினங்களுக்கு முன்பே விற்றுத் தீர்ந்ததாக தகவல்கள் வந்தது.

ஆடியோ லாஞ்சால் ஸ்தம்பித்த மலேசியா
ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள மலேசியாவின் பல பகுதிகளிலிருந்தும், அண்டை நாடுகளிலிருந்தும் ரசிகர்கள் குவிந்ததால், மைதானத்தை சுற்றியுள்ள முக்கிய சாலைகள் முழுவதும் டிராபிக்கால் ஸ்தம்பித்தன. சில இடங்களில் போக்குவரத்து காவல்துறையினர் மாற்றுப் பாதைகளை ஏற்படுத்தி நிலைமையை கட்டுப்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பரபரப்பு
விழா தொடங்குவதற்கு முன்பாக, மைதானத்திற்குள் நுழைவதில் தாமதம் ஏற்பட்டதால், சில ரசிகர்கள் இடையே சிறு தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் உடனடியாக தலையிட்டு நிலைமையை சீர்படுத்தினர். இதனால் விழா எந்த பெரிய பாதிப்பும் இன்றி தொடர்ந்து நடைபெற்றது.
மேள தாள, கொண்டாட்டங்கள்
தமிழ்நாட்டில் விஜய் பட வெளியீடுகளைப் போலவே, மலேசியாவிலும் ரசிகர்கள் மேள தாளங்கள் முழங்க, விஜய் கட்-அவுட்களுக்கு பாலபிஷேகம் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சில ரசிகர்கள் விஜய்யின் வசனங்களை முழக்கமிட்டு கோஷங்கள் எழுப்பியதால், மைதானம் முழுவதும் திருவிழா சூழல் நிலவியது.
ரசிகைகளின் சிறப்பு வருகை
இந்த விழாவில், விஜய்யின் பெண் ரசிகைகளும் அதிக அளவில் கலந்துகொண்டனர். 'ஜனநாயகன்' மற்றும் 'தளபதி' என்ற பெயர் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்களை அணிந்து, விஜய்யின் புகைப்படங்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரம்மாண்ட பேனர்கள்
புக்கிட் ஜலீல் மைதானத்தின் நுழைவுவாயிலில், கிரேன் உதவியுடன் வைக்கபட்ட மிகப் பெரிய ஜனநாயகன் பட பேனர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த பேனருக்கு முன்பு ரசிகர்கள் கூட்டம் திரண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
தளபதி திருவிழா
ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா, வெறும் ஆடியோ லாஞ்சாக மட்டுமல்லாமல், 'தளபதி திருவிழா' என்ற பெயரில் ஒரு முழுமையான இசை நிகழ்ச்சியாக நடத்தப்படுகிறது. இதில், விஜய்யின் பழைய சூப்பர் ஹிட் பாடல்களை, அந்தப் பாடல்களை பாடிய அசல் பாடகர்களே மேடையில் பாடுவது ரசிகர்களை உற்சாகத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
சமூக வலைதளங்களில் வைரல்
விழாவில் நடந்த ஒவ்வொரு தருணமும் சமூக வலைதளங்களில் நேரடியாக பகிரப்பட்டு வருகிறது. ரசிகர்களின் கொண்டாட்டம், கூட்ட நெரிசல், மேடை அலங்காரம் உள்ளிட்டவை இணையத்தில் வைரலாகி, 'ஜனநாயகன்' மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
நிஜமாவே மலேசியா தைப்பூசம் vibeல இருக்கு ❤️💥🇲🇾
— TVK 𝚂qυα∂💥 (@TVKVijay24x7) December 27, 2025
Waiting For Demigod Thalapathy 🛐 pic.twitter.com/PxiM4W2g6p
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
பால்வாடி இயக்கம்.. லீடர்னு சுற்றியவன்.. வில்லிவாக்கத்தில் சம்பவம் இருக்கு! உறுதியாக சொன்ன சேகர் பாபு -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
“திமுக தீயசக்தி”! கோஷம் போட்ட சிறுவர்கள்! த.வெ.க ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் மீது பாய்ந்தது வழக்கு -
திமுக கூட்டணியில் 3 சீட் கேட்டுள்ளோம்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம்- எஸ்டிபிஐ தலைவர் தகவல் -
மும்பை பயணம் முடிந்த கையோடு விஜய் எடுத்த முடிவு! புதுவை தவெக வேட்பாளர்கள் பட்டியல் நாளை ரிலீஸ் -
பச்சை துண்டு போட்டு விஜய் கத்துனா விவசாயி ஆயிடுவாரா? சூட்டிங் வைத்து 50 பேரை கொன்னுட்டாரு! ஜூலி வீடியோ -
நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. மும்பைக்கு பறந்த விஜய்! பைனான்ஸ் செய்யும் அரசியல் புள்ளியின் வாரிசு -
Election Exclusive: பரபர பனையூர்..சைலண்டாய் லிஸ்டை ரெடி செய்த விஜய்! பாதித் தொகுதி வேட்பாளர்கள் ரெடி? யார் யருக்கு சீட்? -
ஜனநாயகன் பிரச்சனை.. அடிச்சவன் சொல்ல மாட்டான்.. அடிவாங்குபவன் சொல்லனும் சார்.. இயக்குநர் அமீர்! -
சினிமாவை விட்டு விலகும் திரிஷா.. காரணம் இதுதானா? அதிர்ச்சி பின்னணி! லீக்கான தகவல்கள்












Click it and Unblock the Notifications