Jana nayagan: ரிலீசுக்கு முன்பே ஜனநாயகன் இத்தனை கோடி வசூல்! முன்பதிவில் மாபெரும் சாதனை!
சென்னை: இளையதளபதி விஜய் - இயக்குநர் எச்.வினோத் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜனநாயகன்'. அரசியல் மற்றும் சமூக கருத்துக்களை மையமாக கொண்டு உருவாகி வரும் இந்தப் படம், விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி, தமிழ் சினிமா வட்டாரத்தையே பெரும் எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.
'ஜனநாயகன்' திரைப்படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தர் இணைந்துள்ளதால், பாடல்கள் மற்றும் பின்னணி இசை மீதான எதிர்பார்ப்பும் உச்சத்தில் உள்ளது. ஏற்கனவே விஜய் - அனிருத் கூட்டணி பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ள நிலையில், 'ஜனநாயகன்' அவர்களின் இன்னொரு மைல்கல்லாக அமையும் என ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

நட்சத்திர பட்டாளம்
இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், நரேன், ப்ரியாமணி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். குறிப்பாக வில்லன் கதாபாத்திரத்தில் பாபி தியோல் நடிப்பது, படத்தின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.
அதேபோல், பிரகாஷ் ராஜ் மற்றும் நரேன் போன்ற அனுபவமிக்க நடிகர்கள் இருப்பதால், அரசியல் - சமூக ரீதியான காட்சிகள் வலுவாக இருக்கும் என கூறப்படுகிறது.
மலேசியாவில் நடந்த இசை வெளியீட்டு விழா
நேற்று முன்தினம் மலேசியாவில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழா, மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் முன்னிலையில் நடத்தப்பட்டது. வெளிநாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வு, 'ஜனநாயகன்' படத்திற்கு சர்வதேச அளவிலான கவனத்தை பெற்றுத் தந்துள்ளது. அனிருத் இசையில் வெளியான பாடல்கள் நிகழ்வில் ஒலித்ததும், ரசிகர்கள் உற்சாகத்தில் ஆரவாரம் செய்தனர்.
டிரைலருக்காக காத்திருக்கும் ரசிகர்கள்
இசை வெளியீட்டுக்கு பிறகு, தற்போது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பது 'ஜனநாயகன்' டிரைலர் எப்போது வெளியாகும்? என்பதற்காக தான். படத்தின் டைட்டில், பாடல்கள் மற்றும் போஸ்டர்கள் வெளியான போதே சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், டிரைலர் வெளியானால் அது அரசியல் ரீதியாகவும் பேசுபொருளாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யின் இறுதி திரைப்படம்
'ஜனநாயகன்' படம், விஜய் நடிக்கும் இறுதித் திரைப்படம் என்று விஜய்யே அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார். ஏற்கனவே அரசியலில் முழுமையாக ஈடுபட உள்ளதாக விஜய் அறிவித்துள்ள நிலையில், இந்தப் படம் சினிமாவைத் தாண்டி அரசியல் களத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அவரது ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
முன்பதிவிலேயே மாபெரும் சாதனை
இந்த நிலையில், 'ஜனநாயகன்' திரைப்படம் ரிலீசுக்கு முன்பே முன்பதிவில் சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இதுவரை 24,500 டிக்கெட்டுகள் முன்பதிவில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும். அதன் மூலம் மொத்தமாக 7.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஒரு படத்தின் டிரைலர் வெளியாகும் முன்பே இத்தகைய வசூல் சாதனை நிகழ்ந்திருப்பது, 'ஜனநாயகன்' மீது ரசிகர்களும் பொதுமக்களும் வைத்துள்ள எதிர்பார்ப்பை வெளிப்படுத்துகிறது.












Click it and Unblock the Notifications