முதல்வராக ஜனநாயகன் விஜய்.. குஷ்பு வெளியிட்ட பதிவு! இது தொடக்கம் மட்டும் தான்! நயன்தாராவின் போஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் களம் தேர்தல் முடிவுகளால் சூடுபிடித்துள்ள இந்த நேரத்தில், நடிகரும் அரசியல் தலைவருமான விஜய் முன்னிலையில் இருப்பதாக வரும் தகவல்கள் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. முதல் முறையாக தேர்தலை சந்திக்கும் நிலையில் அவர் பெற்றிருக்கும் ஆதரவு, அரசியல் வட்டாரங்களிலும் சினிமா துறையிலும் பெரிய விவாதமாக மாறியுள்ளது.

இந்த சூழ்நிலையில் பல பிரபலங்கள் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதில் முக்கியமாக நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பூ வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Vijay Khushbu Sundar Nayanthara Tamil Nadu Elections 2026 TVK

குஷ்பூ பதிவு

குஷ்புவின் பதிவில், "Heartiest congratulations to my brother @actorvijay and his entire team of #tvk on the spectacular win in Tamilnadu. God bless you today, and always. Now look forward to seeing you lead, truly as the #JanaNayagan 🎉🎉🎉🎉🎉👍👍👍❤️❤️❤️❤️" "என் சகோதரர் விஜய் மற்றும் அவரது #TVK அணியின் அனைவருக்கும் தமிழ்நாட்டில் பெற்றுள்ள இந்த மாபெரும் வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இன்று மட்டும் அல்ல, எப்போதும் கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும். இனி நீங்கள் உண்மையான 'ஜனநாயகன்' ஆக தலைமை ஏற்று வழிநடத்துவதை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்." 🎉👏❤️ குறிப்பிட்டிருக்கிறார்

அதனைத் தொடர்ந்து அவர் #Vijay #TVKVijay #VijayCM என்று ஹாஷ்டாக்கள் பயன்படுத்தி இருக்கிறார். இதேபோல், முன்னணி நடிகையான நயன்தாராவும், விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளார். அதில் "விஜய் சார், உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் 💐 இன்று நீங்கள் வரலாறு படைத்துள்ளீர்கள் 👍 இது பல சாதனைகளின் தொடக்கம் மட்டுமே 😇" என்று கூறியிருக்கிறார்.

ஜனநாயகன்

இந்த பதிவு வெளியாகியதும், விஜய் ரசிகர்கள் அதை மிகப்பெரிய ஆதரவாக எடுத்துக் கொண்டு சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். "ஜனநாயகன்" (#JanaNayagan) என்று குறிப்பிட்டு, விஜய் எதிர்காலத்தில் தலைவராக உருவெடுப்பார் என்ற நம்பிக்கையை குஷ்பூ வெளிப்படுத்தியிருப்பது கவனிக்கப்படுகிறது.

குஷ்பு விஜய் உறவு

குஷ்பூ-விஜய் உறவு சினிமா காலத்திலிருந்தே நல்ல புரிதலுடன் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. அந்த நெருக்கத்தை "my brother" என்று குறிப்பிட்டதிலும் பார்க்க முடிகிறது. அரசியல் அனுபவம் கொண்ட ஒருவராக, அவர் வெளியிட்ட இந்த வாழ்த்து வெறும் மரியாதை பதிவு அல்ல; ஒரு அரசியல் சிக்னலாகவும் பார்க்கப்படுகிறது. ஏற்கனவே குஷ்பூ மற்றும் அவருடைய கணவர் சுந்தரி சி இருவருமே விஜய் மற்றும் அவருடைய கட்சியினரை நாங்கள் எந்த சூழ்நிலையிலும் விமர்சிக்க மாட்டோம் என்று சொல்லி இருந்தனர். அதேபோல தேர்தல் பிரச்சாரத்தில் எந்த இடத்திலும் விஜயை குஷ்பூவும் அவருடைய கணவரும் விமர்சிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போதைய தேர்தல் நிலவரத்தைப் பார்க்கும்போது, பல தொகுதிகளில் கடும் போட்டி நிலவுகிறது. இருந்தாலும், விஜய்யின் முன்னிலை குறிப்பாக இளைஞர்கள் மற்றும் நகர்ப்புற வாக்காளர்களிடையே அதிக ஆதரவைப் பெற்றுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இதனுடன் சேர்த்து, பல்வேறு சினிமா மற்றும் டிவி பிரபலங்களும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சிலர் நேரடியாக ஆதரவு தெரிவிக்க, சிலர் "மக்கள் தீர்ப்பு முக்கியம்" என்ற நடுநிலை கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர். ஆனால் குஷ்பூ பதிவு மட்டும் தனியாக வைரலாக காரணம் - அதில் உள்ள உணர்ச்சி, உறவு, மற்றும் அரசியல் குறிப்புகள்.

மேலும், "Vijay CM" என்ற ஹாஷ்டாக் பயன்படுத்தப்பட்டிருப்பது, விஜய் முதல்வராக வருவார் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் மேலும் தூண்டியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+