Jananayagan : ஜனநாயகன் பட ரிலீஸில் வந்த சிக்கல்.. ரவுண்ட் கட்டும் பிரச்சனைகள்! கடைசியில் இப்படி ஆகிவிட்டதே!
சென்னை: தமிழ் சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருப்பது நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம். ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், விஜய்யின் திரைப்பட வாழ்க்கையில் இறுதி படம் என சொல்லப்படுவதால், ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் சினிமா வட்டாரத்திலும் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
இந்த நிலையில், படம் வெளியீட்டை நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தற்போது ஒரு பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் 'ஜனநாயகன்' படத்தை வெளியிட ஒப்பந்தம் செய்திருந்த தயாரிப்பு நிறுவனம், திடீரென அந்த முடிவிலிருந்து பின்வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக, அந்த மாநிலங்களில் படத்திற்கு போதுமான தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் தாக்கம் படத்தின் ஓப்பனிங் வசூலில் பிரதிபலிக்க வாய்ப்பு இருப்பதாக சினிமா வர்த்தக வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், ஹிந்தி மார்க்கெட்டிலும் இதுவரை பெரிய அளவில் பிரமோஷன் செய்யப்படாததால், அங்கும் மிகக் குறைந்த தியேட்டர்களில் மட்டுமே படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 'ஜனநாயகன்' படத்தின் மொத்த வசூலை பாதிக்கக்கூடும் என்ற கவலை எழுந்துள்ளது.
ஜனவரி 9ம் தேதி வெளியாகவுள்ள இந்த படம், அரசியல் மற்றும் சமூக நீதி பேசும் கதைக்களத்துடன் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. விஜய் ஏற்கனவே அரசியலில் நேரடியாக களமிறங்கியுள்ள நிலையில், 'ஜனநாயகன்' படத்தின் உள்ளடக்கம் அவரது அரசியல் அடையாளத்தோடு இணைத்து பார்க்கப்படுகிறது.
அதனாலேயே இந்த படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களிடையே தீவிரமாக பேசப்பட்டு வருகிறது. இதற்கிடையில், அதே பொங்கல் ரேஸில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' படமும் வெளியாகவுள்ளது. இந்த படம் சமூக விழிப்புணர்வு மற்றும் அரசியல் பின்னணியுடன் உருவாகியிருப்பதாக கூறப்படுவதால், 'ஜனநாயகன்' - 'பராசக்தி' என்ற இரண்டு படங்களுக்கிடையிலான போட்டி குறித்தும் சோசியல் மீடியாவில் விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன.
ஒருபுறம் விஜய்யின் கடைசி படம் என்ற உணர்வு, மறுபுறம் வெளியீட்டு சிக்கல்கள்... இவற்றுக்கிடையே 'ஜனநாயகன்' படம் எப்படி ரசிகர்களை சென்றடையும், வசூல் ரீதியாக எப்படி செயல்படும் என்ற கேள்விகளுக்கு விடை கிடைப்பது, படம் வெளியான பிறகே தெளிவாகும்.
-
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்!












Click it and Unblock the Notifications