பராசக்தியை ஜனவரி 10ல் வெளியிட காரணம் இது! அரசியல் இல்லை, பின்னணியில் நடந்த சம்பவம்! தயாரிப்பாளர் விளக்கம்
சென்னை: வரும் பொங்கலுக்கு புது டிரஸ் எடுக்குறோமோ இல்லையோ இந்த முறை ஜனநாயகன் பார்க்க போகலாமா? அல்லது பராசக்தி பார்க்க போகலாமா? என்ற விவாதம் தான் எழுந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் சிவகார்த்திகேயன் நன்றி மறந்து விட்டார், தனக்கு துப்பாக்கி கொடுத்த விஜய் படத்தோடே தன் படத்தை ரிலீஸ் செய்ய வைத்து விட்டார் என்றும் சில விமர்சனங்கள் வருகிறது.
அதோடு ஜனநாயகன் படத்தை காலி செய்வதற்காக திமுக செய்யும் சதித்தான் இந்த ஏற்பாடு என்றும் சில விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. விஜய் அரசியலுக்கு வந்து விட்டதால் அவருடைய படத்தை இனி ஓட வைக்க கூடாது, அவருடைய படத்தை பிளாக் செய்து அவருக்கு மார்க்கெட் இல்லை என்று நிரூபிக்க வேண்டும் என்பதற்காக பல சூழ்ச்சிகள் நடப்பதாகவும் சோசியல் மீடியாவில் பேசப்பட்டு வருகிறது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இப்போது பராசக்தி படத்தின் தயாரிப்பாளர் பேசியிருக்கிறார்.

வரும் பொங்கலுக்கு 2 பெரிய நடிகர்களின் படங்கள் மோத இருக்கிறது. அதிலும் ஜனநாயகன் படம் இந்த வருடத்தில் வெளியாக இருந்தது. ஆனால் அடுத்த ஆண்டு வரும் தேர்தலில் விஜய் போட்டியிட இருப்பதால் அடுத்த ஆண்டு தன்னுடைய படமும் வெளியாக வேண்டும் என்று ஆசைப்பட்டதால் ஜனநாயகனை வரும் ஜனவரி மாதத்தில் ரிலீஸ் செய்ய முடிவு செய்தார்களாம்.
இது ஒரு பக்கம் இருக்க முதலில் பராசக்தி படத்தை ஜனவரி 14-ஆம் தேதி வெளியிட முடிவு செய்யப்பட்டிருந்தது. இதற்காக வள்ளுவர் கோட்டத்தில் பராசக்தி கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது. ஆனால் இப்போது திமுகவின் தூண்டுதலால் ஜனவரி 10ஆம் தேதி பராசக்தி படம் வெளியாக போவதாக விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில், இதற்கு பராசக்தி பட தயாரிப்பாளர் தனஞ்செழியன் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
அதுபற்றி அவர் பேசும் போது பராசக்தி படம் ஜனவரி 14ம் தேதி ரிலீஸ் என்று சொல்லிவிட்டு இப்போது ஜனவரி 10ஆம் தேதி முன்கூட்டியே ரிலீஸ் செய்வதற்கு எந்த ஒரு காரணமும் இல்லை. ஜனநாயகன் படம் 900க்கு அதிகமான திரையரங்குகளில் ஜனவரி ஒன்பதாம் தேதி வெளியானால் ஒரே வாரத்தில் ஜனவரி 14-ஆம் தேதி பராசக்தி படம் வெளியாகும் போது தியேட்டரை ஒதுக்குவது வினியோஸ்தர்களுக்கு சிக்கல் ஏற்படும்.
அதனால் தான் ஜனவரி 10ஆம் தேதி பராசக்தி திரைப்படம் வெளியானால் இரண்டு படங்களுக்கும் சமமான தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என இப்படி மாற்றம் செய்ததாக தமிழ் செழியன் கூறி இருக்கிறார். பராசக்தி படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்த நாளிலிருந்து பல விமர்சனங்களை சிவகார்த்திகேயன் சந்தித்து வருகிறார்.
சிவகார்த்திகேயன் நன்றி மறந்து விட்டார். அவரை தூக்கி விட்டவர்களை எல்லாம் அவர் எதிர்த்து கொண்டு இருக்கிறார் என்று கூட சிலர் சொல்லி வந்தனர். இன்னும் ஒரு சிலர் சிவகார்த்திகேயன் விஜய்யிடம் தன்னுடைய கெத்தை காட்டுவதற்காக தன் படத்தை முன்கூட்டியே ரிலீஸ் செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தார் என்று கூட குற்றச்சாட்டுகள் வைத்து வருகிறார்கள்.
எது எப்படி இருந்தாலும் சரி ஜனநாயகன் மற்றும் பராசக்தி என இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வந்தாலும் கூட எந்த படத்தில் கண்டன்ட் நல்லா இருக்கிறதோ அதைத்தான் ரசிகர்கள் ரசிக்கப் போகிறார்கள். ஒரு படத்தை காலி பண்ண வேண்டும் என்று இன்னொரு பட ரசிகர்கள் நெகட்டிவ் விமர்சனம் கொடுத்தால் கூட அதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.
அதேபோல ஜனவரி ஒன்பதாம் தேதி ஜனநாயகன் வெளியாகி பாசிட்டிவ் அலை பெற்றுவிட்டால் பராசக்தி படத்திற்கு பெரிய சிக்கல் ஏற்படும். அதேபோல ஜனநாயகன் படத்திற்கு நெகட்டிவ் வந்து விட்டால் அது பராசக்தி படத்திற்கு லாபம். இதற்கு முன்பு விஜய் அஜித் ரசிகர்கள் மோதிக்கொண்டது போல இப்போது சிவகார்த்திகேயன் விஜய் ரசிகர்கள் மோதி வருகின்றனர். என்ன தான் ரசிகர்கள் மோதிக்கொண்டாலும் நாங்கள் எல்லாம் நண்பர்கள் என்று விஜய்யும், அஜித்தும் பல இடங்களில் நிரூபித்து இருக்கிறார்கள். அதேபோல இப்போதும் நடக்குமா? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு இருக்கிறது.
-
விஜய் பற்றி.. டெல்லிக்கு பறந்த உளவுத்துறை ரிப்போர்ட்.. ஆட்டத்தை கலைத்து ஆடப்போகும் அமித் ஷா? -
10 சீட்டுகளை வெல்லும் தவெக.. 23.9 சதவிகித வாக்குகளை கைப்பற்றும் விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள் -
என்னது வாக்காளர்கள் பணம் வாங்கணுமா.. உளறி கொட்டிய விஜய்.. சிபிஐ வீரபாண்டியன் புகாரால் தவெக ஷாக் -
தமிழ்நாட்டில் தேர்தலுக்கு பின் விஜய் ஆதரவை கோருவோம்.. என்டிஏ கூட்டணி ஆட்சி உறுதி.. ராம்தாஸ் அத்வாலே! -
கோவிலில் தேங்காய் உடைத்து பிரச்சாரத்தை தொடங்கிய தவெக முஸ்லிம் வேட்பாளர்கள் -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
தமிழ்நாட்டையே அதிர வைத்த திருமணம்.. தவெக வேட்பாளரான ஆர்.எஸ்.முருகன்.. விஜய் சீட் கொடுத்த பின்னணி! -
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்! -
முதல் நாளே இப்படியா? விஜய் மீது 5 பிரிவுகளில் பாய்ந்த வழக்கு! காவல்துறை அதிரடி -
கல்லூரியில் இருந்து டிராப் அவுட்.. 10, 12th தேர்வை தனித்தேர்வராக எழுதிய விஜய்.. வேட்புமனுவில் தகவல் -
Election Exclusive: கால் வச்ச இடமெல்லாம் கன்னிவெடி.. புலம்பித் தள்ளிய விஜய்! திடீரென மாறிய பிரச்சார ப்ளான்! என்னாச்சு?












Click it and Unblock the Notifications