Kaandha Twitter Rivew: காந்தா படம் எப்படி இருக்கு? துல்கர் சல்மான் நடிப்பு அடிபோலி! கதை இதுதானாம்! விமர்சனம்
சென்னை: (Kaandha Twitter Rivew) நடிகர் துல்கர் சல்மான் இப்போ தமிழ் சினிமாவில் அடுத்த சம்பவம் பண்ணிட்டாரு! "என்னடா, 'காந்தா'ன்னு பழைய பட டைட்டில்ல நடிக்கிறாரே?"ன்னு நிறையப் பேர் ஆரம்பத்துல ட்ரோல் பண்ணினாங்க. ஆனா, நேற்று பத்திரிகையாளர்களுக்குப் போட்ட சிறப்புக் காட்சி மூலம், அவர் பண்ணினது உலகத் தரமான சினிமான்னு நிரூபிச்சிட்டாரு!
செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், சமுத்திரக்கனி அண்ணன், பாக்யஸ்ரீ போர்சே, ராணா டகுபதி எல்லாம் நடிச்சு உருவாகி இருக்குற இந்த 'காந்தா' திரைப்படம், நவம்பர் 14-ம் தேதி திரைக்கு வரத் தயாராக இருக்கு! இந்த ஆண்டோட ஆக சிறந்தப் படைப்புன்னு இப்போதே திரையுலகமே கொண்டாடுது!

காந்தா பட கதை
'காந்தா' திரைப்படம், 1950கள்ல இருந்த தமிழ் சினிமாவின் பொற்காலத்தை சொல்ற மாதிரி உருவாக்கி இருக்காங்களாம். படத்தோடக் கதை, ஒருப் பிரபல இயக்குநர் மற்றும் அவர் அறிமுகப்படுத்திய முன்னணி நடிகர் இவங்க ரெண்டு பேரையும் மையமாகக் கொண்டது. ஒரு காலத்துலக் கலைக்காக ஒன்னா உழைச்சவங்க, காலப்போக்குல போட்டியும், ஆளுமை மோதலும் வர, அதுதான் படத்தோடச் சுருக்கமா இருக்கு!
புதிய முகம்
இந்த மோதலுக்கு நடுவுல வர்ற ஒரு இளம் நடிகை, இவங்க வாழ்க்கையையே மாத்தி போடுறா. இது சாதாரணக் காதல் கதை இல்ல; கலைஞர்களோட மனப்போராட்டம். துல்கர் சல்மான் நடிப்பைப் பார்த்துட்டு, "கண்டிப்பா இவருக்கு தேசிய விருது கொடுத்தே ஆகணும்!"ன்னு பலர் பதிவு வெளியிட்டு இருக்கிறார்கள்
ட்ரைலர் வெளியீட்டு விழாவிலேயே ராணா டகுபதி, துல்கரை "நடிப்புச் சக்கரவர்த்தி"ன்னு பாராட்டினாரு. இப்போ படம் பார்த்த ரசிகர்கள், "இனிமேல் துல்கர் சல்மான் பெயருக்கு முன்னாடி இந்தப் பட்டத்தைப் போடணும்!"ன்னு டிமாண்ட் பண்ணுறாங்க!. துல்கர் சல்மான், தொழில்ல கவனம் கொண்ட 'டிகே மகாதேவன்'ங்கிற கேரக்டர்ல வாழ்ந்திருக்காராம். இடைவேளை காட்சியிலயும், உச்சக்கட்ட காட்சியிலயும் கண்ணாடியில தெரியுற அவரோட நடிப்புத் திறமை, கதாபாத்திரத்தோட ஆழத்தை அப்படியேக் காட்டுதாம்!
"தான் மம்மூட்டியின் பையன் என்பதை நிரூபிச்சுட்டாரு"ன்னுச் சொல்லி ரசிகர்கள் பாராட்டுறாங்க. (கடந்த வருஷம் 'காந்தாரா' படத்துல ரிஷப் ஷெட்டிக்குக் கேட்ட மாதிரி, இவருக்கும் தேசிய விருது நிச்சயம்னு சொல்றாங்க!)
மற்றவர்களின் மிரட்டல் நடிப்பு
துல்கருக்கு பெரிய டப் கொடுக்குற மாதிரி, குரு கதாபாத்திரத்துல சமுத்திரக்கனி புகுந்து விளையாடி இருக்காராம்! இந்திய சினிமாவுல சிறந்தத் துணை நடிகரா அவர் உருவெடுத்துட்டாருன்னும் சொல்றாங்க! பாக்யஸ்ரீ என்ற இளம் நடிகை ஒரு புதுமையான கண்டுபிடிப்புன்னுப் பத்திரிகையாளர்கள் சொல்றாங்க. ஈகோ, சூழ்ச்சிக்குப் பக்கத்துல அவங்க அப்பாவித்தனம் தனிச்சுத் தெரியுதாம்!
ராணா
அதீதக் குணம் கொண்ட விசாரணை அதிகாரியா ராணா டகுபதி வந்து, இந்தப் படத்துக்குக் கூடுதல் மசாலா சேர்த்திருக்காராம். முதல் பாதி குரு-சிஷ்யன் ஈகோ, காதல்னுப் போக, இரண்டாம் பாதியில ஹிட்ச்காக் பாணியிலான விசாரணைத் த்ரில்லரா மாறி, இறுதிக் காட்சிப் பார்வையாளர்களை உணர்ச்சிவசப்பட வைக்குதாம்!
ஒளிப்பதிவு
1950களில் மெட்ராஸ் எப்படி இருந்ததுங்கிறதை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தினதுல, டேனியல் சான்செஸ்-லோபஸின் ஒளிப்பதிவும், கலை இயக்குநரின் பங்களிப்பும் படத்துக்குப் பெரியப் பலம்! மொத்தத்துல, கடந்த வருஷம் 300 கோடி வசூல் பண்ண 'லோகா' படத்தைத் தயாரிச்ச துல்கர் சல்மான், இப்போ 'காந்தா' மூலமா இந்த வருஷத்துல ஒரு கிளாசிக் வெற்றியைக் கொடுத்திருக்காரு! கண்டிப்பா எல்லாரும் பார்க்க வேண்டிய படம் இதுன்னு 4 ஸ்டார் ரேட்டிங் கொடுத்திருக்காங்க!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications