விஜய் கிறிஸ்தவ மத பற்றில் ரொம்ப தீவிரமானவரா? கனல் கண்ணன் உடைத்த ரகசியம்
சென்னை: கனல் கண்ணன், தமிழ் திரையுலகில் ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைத்து புகழ் பெற்றவர். அதோடு சில படங்களில் நடிகராகவும் தோன்றியுள்ளார். ஆனால் இப்போது அவரது கவனம் முழுக்க ஆன்மிகத்தின் பக்கம் திரும்பியுள்ளது. மதுரவாயலில் அமைந்துள்ள தனது சொந்த கோவிலுக்கு விஜய், நயன்தாரா உள்ளிட்ட ஏராளமான சினிமா பிரபலங்கள் வந்து சென்றிருப்பதாக கூறிய கனல் கண்ணன், விஜய் பற்றிய ஒரு சுவாரஸ்யமான கதையை விவரித்தார்.
"விஜய் சார் ரொம்ப நல்ல மனிதர், ஆனால் அவர் மதம் சம்பந்தப்பட்ட ஆள் கிடையாது!" என்று தொடங்கிய கனல் கண்ணன், 1996-ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்தார். "அப்போது நான் வட பழனி சிவன் கோவிலில் நிர்வாக பதவியில் இருந்தேன். பங்குனி உத்திர திருவிழாவுக்கு பிரம்மாண்டமான ஏற்பாடுகளை செய்திருந்தோம். அந்த விழாவுக்கு விஜய் சார் சிறப்பு விருந்தினராக வந்தார்.

அங்கு சாமிக்கு மாலை அணிவித்து, தேங்காய் உடைத்து, அவருக்கு பட்டை போட்டு மரியாதை செய்து அனுப்பினேன். ஷூட்டிங் நாட்களில் நான் அவரை பல கோவில்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறேன். ஆனால் அவர் மத விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டாதவர்," என்று கூறினார் கனல் கண்ணன். இந்த தகவலை கேட்டதும் எங்கள் தளபதியையா கிறிஸ்தவர் என்று விமர்சித்தீர்கள் என்று கூறி வருகிறார்கள்.
இதோடு நிற்காமல், தனது கோவில் கட்டிய கதையையும் கனல் கண்ணன் பகிர்ந்தார். சிம்புவின் 'சரவணா' படத்தில் பணியாற்றிய போது, கோவில் கட்டும் திட்டத்தை இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரிடம் கூறியுள்ளார். "முதல் டொனேஷனாக நீங்கள் தான் பணம் தர வேண்டும்," என்று கேட்டபோது, ரவிக்குமார் சிரித்துக்கொண்டே சென்றுவிட்டாராம். ஆனால் மறுநாள் விஜிபி ஷூட்டிங் ஸ்பாட்டில், "டேய் கண்ணா, இங்க வா!" என்று அழைத்து ஒரு பண்டலை கொடுத்தார்.
அது என்னவென்று தெரியாமல் காரில் போட்டுவிட்டு வீட்டுக்கு சென்றபோது, உள்ளே 61 ஆயிரம் ரூபாய் இருந்தது தெரிந்தது! "அந்த பணத்தோடு, சினிமா பிரபலங்களிடம் இருந்து டொனேஷன் வாங்கி, என் சொந்த பணத்தையும் செலவு செய்து கோவிலை கட்டினேன்," என்று உணர்ச்சிபூர்வமாக கூறினார் கனல் கண்ணன். இந்த பேட்டி, சினிமா உலகின் பின்னணியில் உள்ள ஆன்மிக தொடர்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
-
எதிர்க்கட்சிகள் தீர்ந்து போன சக்தி சரி.. அப்போ நீங்க? விஜய்யை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய வேல்முருகன் -
"விஜய் கோட் போடுவது பிரச்சனை இல்லை... எல்லாத்தையும் கோட்டை விடுவது தான் பிரச்சனை!" உதயநிதி தாக்கு -
தமிழ்நாடு விஷம் குடித்து இருக்கிறது.. மக்கள் புரிந்து கொள்வார்கள்! தேர்தல் முடிவு பற்றி சுகி சிவம் பரபர பேச்சு -
Mayor பிரியா - தவெக MLA பல்லவி மோதல்.. மேயர் vs எம்எல்ஏவில் பெரியவர் யார்? சட்டம் சொல்வது என்ன? -
விஜய் அரசின் முதல் MoU.. பரந்தூருக்கு ஒரு நியாயம்? டேட்டா சென்டருக்கு ஒரு நியாயமா? -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ











Click it and Unblock the Notifications