8 கிரவுண்ட், ரூ.80 கோடி சொத்தை திருப்பதி பெருமாளுக்கு தந்த காஞ்சனா.. கோயிலில் அடையாளம் தெரியாத நடிகை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல நடிகை காஞ்சனா, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து ஒருகாலத்தில் புகழ்பெற்றவர்.. தான் சம்பாதித்த சொத்தை திருப்பதி ஏழுமலையானுக்கு எழுதி வைத்தவர்.. தற்போதும் எளிய வாழ்க்கையை வாழ்ந்து, ஆன்மீகத்துக்காகவே தன்னை அர்ப்பணித்தவர்.. பழம்பெரும் நடிகை காஞ்சனா குறித்து பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேட்டி ஒன்றில் விரிவாக கூறியிருக்கிறார்.

AramNaadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "நடிகை காஞ்சனா ஏகப்பட்ட படங்களில் நடித்து, ஏகப்பட்ட சொத்துக்களை வாங்கி போட்டார்.

Cinema Actress Kanchana Tirupati Perumal Temple

ஆனால், அனைத்து சொத்துக்களையும் காஞ்சனாவின் உறவினர்களே அபகரித்து கொண்டனர்.. காஞ்சனா கெஞ்சியும் அந்த சொத்தை தராததால், சட்டப்போராட்டம் மேற்கொண்டார்..

8 கிரவுண்ட நிலம் - ரூ.80 கோடி சொத்து

திருப்பதி ஏழுமலையானிடம் சென்று, "பெருமாளே, என் சொத்துக்களை மீட்டு தந்துவிடு, உனக்கே அதை திருப்பி தந்துடறேன்" என்று வேண்டிக் கொண்டாராம் காஞ்சனா.. அப்படி மீட்கப்பட்ட ஜி.என். செட்டி ரோட்டில் இருந்த 8 கிரவுண்ட் நிலத்தை, அதாவது ரூபாய் 80 கோடி சொத்தை, தான் வேண்டிக் கொண்டபடியே திருப்பதி தேவஸ்தானத்திற்கு தந்துவிட்டார்..

இந்த இடத்தில்தான் 3 வருடங்களுக்கு முன்பு திருப்பதி தேவஸ்தானத்தால் பத்மாவதி தாயார் கோவில் கட்டப்பட்டுள்ளது.. 8 கிரவுண்டில் ரொம்ப அழகாக கட்டியிருக்கிறார்கள். திநகர் பகுதியில் தங்கியிருக்கும் காஞ்சனா, ஷேர் ஆட்டோவில் அவ்வப்போது இந்த கோயிலுக்கு சென்று, மணிக்கணக்கில் அங்கேயே உட்கார்ந்திருப்பார்..

கோயிலுக்குள் அடையாளம் தெரியாத நடிகை

மன அமைதிக்காக இப்படி போய் அந்த கோயிலில் உட்கார்ந்திருப்பார் காஞ்சனா.. ஆனால், அன்றைய காலத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை காஞ்சனாதான் என்பது கோயிலுக்கு வரும் பல பேருக்கும் தெரியாது..

இழந்த சொத்துக்களை காஞ்சனா மீட்டதுமே, பல பேர் அந்த சொத்துக்களை வாங்க போட்டி போட்டார்களாம்.. காஞ்சனாவிடமே சென்று, எங்களுக்கு அந்த சொத்துக்களை தந்துவிடுங்கள், உங்களுக்கு இவ்வளவு விலை தருகிறோம் என்றெல்லாம் பேசியிருக்கிறார்கள்.. காரணம், தி.நகரில் உள்ளது பெரிய சொத்து ஆகும்..

ஆனால், யாருக்குமே அந்த இடத்தை காஞ்சனா தரவில்லை.. பணத்துக்கும் ஆசைப்படவில்லை.. வேண்டிக் கொண்டபடியே, கடவுளுக்கே அந்த சொத்தை தந்துவிட்டார்..

இன்னொரு பிறவி

ஆரம்பத்தில் நல்ல வசதியான வீட்டு பெண்ணாகத்தான் காஞ்சனா வளர்ந்துள்ளார்.. அவருடைய அப்பாவின் பிசினஸில் நஷ்டமாகிவிட்டது.. அதனால்தான், ஸ்ரீதர் சார் நடிக்க சம்மதமா? என்று கேட்டதற்கு உடனே ஒப்புக் கொண்டுள்ளார் காஞ்சனா..

அப்படி நடித்துதான், அப்பாவின் கடனை அடைத்து, பல சொத்துக்களை வாங்கி போட்டிருக்கிறார்.. சொந்தக்காரர்கள் தன் வாழ்க்கை முழுவதுமே காஞ்சனம்மா துயரத்தை மட்டுமே அனுபவித்து வந்தார்.. இன்னொரு பிறவி எனக்கு தந்துடாதே, இந்த பிறவி ஒன்றே போதும் கடவுளே என்றுதான் கடவுளிடம் வேண்டிக் கொண்டு வருகிறார்.

ஆன்மீக வாழ்க்கை

காஞ்சனாவுக்கு தங்கை ஒருவர் இருக்கிறார்.. அவர் காஞ்சனாவை கண்ணும் கருத்துமாக கவனித்து கொண்டு வருகிறார்.

சமீபத்தில் காஞ்சனாவுக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.. காலில் எதோ பிரச்சனை இருப்பதால், நடக்க முடியாமல் உள்ளார்.. மற்றபடி மன அமைதிக்கான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் காஞ்சனா, ஆன்மீகத்துக்காகவே தன்னுடைய வாழ்க்கையை ஒப்படைத்தும் விட்டார்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+