Kombu Seevi Box Office: முதல் நாளே கலக்கிய கொம்பு சீவி! சண்முக பாண்டியன் படத்திற்கு கிடைத்த வசூல் இவ்வளவாம்!
சென்னை: நடிகர் விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியன் நடித்த கொம்பு சீவி திரைப்படம் நேற்று டிசம்பர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.. இந்த திரைப்படத்தில் நடிகர் சரத்குமார் மற்றும் சண்முக பாண்டியன் இருவருடைய காம்போ ஆரம்பத்திலிருந்து பேசப்பட்டு வந்த நிலையில் படத்தின் முதல் நாள் விமர்சனமும் பாசிட்டிவ்வாக வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் பற்றி தகவல் வெளியாகி இருக்கிறது.
இயக்குனர் பொன்ராம் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை இயக்கி இருந்தார். அந்த திரைப்படம் அவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது. அதைத் தொடர்ந்து ரஜினி முருகன் உட்பட ஒரு சில திரைப்படங்களை இயக்கி இருந்தார். சிவகார்த்திகேயனின் வளர்ச்சிக்கு பொன்ராம் பங்களிப்பும் முக்கிய காரணமாக இருக்கிறது.

இப்போது அதேபோல நடிகர் சண்முக பாண்டியனின் வளர்ச்சிக்கும் பொன்ராமுடைய கொம்பு சீவி படம் உதவுமா? என்ற எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்து வந்தது. இந்த படத்தில் நடிகர் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அதேபோல கதாநாயகியாக நாட்டாமை படத்தில் மூலம் பிரபலமான நடிகை ராணியின் மகளான தரணிக்காகவும் அறிமுகமாகி இருக்கிறார்.
Kombu Seevi: சண்முக பாண்டியன்- சரத் காம்போ செம! விஜயகாந்த் மகன்னு நிரூபிச்சிட்டாரு! கொம்பு சீவிக்கு எகிரும் பாராட்டு
கொம்பு சீவி படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். மீண்டும் மதுரை பின்னணியை கொண்டு ஒரு கிராமத்தில் நடக்கிறது. உண்மை கதையை கழுவி இந்த படம் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதோடு இந்த படத்திற்கு முதல் நாளே பாசிட்டிவான விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தது. இந்த படத்தில் காமெடி மற்றும் ஆக்சன் காட்சிகள் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிருக்கு இருப்பதாகவும் கிளைமாக்ஸ் சூப்பராக இருக்கிறது என்றும் பலர் பாராட்டி இருந்தனர்.
இந்த நிலையில் இந்த படம் வெளியான முதல் நாளில் தமிழகத்தில் 30 லட்சம் வசூல் செய்திருக்கிறது என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்கள் என்பதால் வசூல் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications