LIK vs TN 2026 Box Office: ஐந்து நாள் முடிவில் எல்ஐகே vs தநா 2026 வசூல் இவ்வளவுதானா? வெற்றி இவங்களுக்குத்தான்!
சென்னை: பிரதீப் ரங்கநாதன் நடித்த "லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (LIK)" மற்றும் நட்டி நடித்த "TN2026" இரண்டு படங்களும் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரையரங்குகளில் ஒரே நாளில் ரிலீஸ் ஆனது. இப்போது வசூல் நிலவரத்தில் எதிரெதிர் பாதையில் பயணித்து வருகிறது இந்த இரண்டு படங்களில் ஆறு நாள் வசூல் நிலவரத்தை விரிவாக பார்க்கலாம்.

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான இந்த படம், நீண்டநாளாக எதிர்பார்ப்பில் இருந்து இறுதியாக ஏப்ரல் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் நடித்த இந்த படம், முழுக்க இளைஞர்களை குறிவைத்து உருவாக்கப்பட்ட காதல்-நகைச்சுவை கலவையாக அமைந்துள்ளது.
படம் வெளியான முதல் சில நாட்களில் நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக வார இறுதி நாட்களில் திரையரங்குகளில் நல்ல கூட்டம் காணப்பட்டது. இதன் மூலம் ஆரம்ப கட்ட வசூலில் படம் வலுவாக இருந்தது.
ஆனால் அதன் பிறகு வசூலில் சற்றே தளர்வு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐந்து நாட்களில் இந்த படம் சுமார் ₹44 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ஆம் தேதியிலும் படம் சுமார் ₹4.15 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
பிரதீப் ரங்கநாதனின் முந்தைய படங்கள் அனைத்தும் ₹100 கோடி கிளப்பில் சேர்ந்ததால், இந்த படமும் அதே சாதனையை எட்டுமா என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது கிடைத்துள்ள வசூல் நிலவரத்தை பார்த்தால், அந்த இலக்கை அடைவது சற்று சவாலாக இருக்கலாம் என்ற கருத்து திரைத்துறையில் பேசப்படுகிறது.
TN2026 வசூல்
மற்றொரு பக்கம், தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கத்தில், நட்டி நடித்த "TN2026" படம் அரசியல் பின்னணியில் உருவாகி வெளியானது. டீசர் வெளியான தருணத்திலிருந்தே சர்ச்சையில் சிக்கிய இந்த படம், வெளியீட்டுக்குப் பிறகும் அதே பரபரப்பை தொடர்ந்தது.
ஆனால் அந்த சர்ச்சைகள் வசூலாக மாறவில்லை என்பதே நிதர்சனம். படத்தின் முதல் ஐந்து நாட்களின் வசூல் மிக குறைவாகவே இருந்துள்ளது.
Day 1 - ₹0.21 கோடி
Day 2 - ₹0.21 கோடி
Day 3 - ₹0.33 கோடி
Day 4 - ₹0.16 கோடி
Day 5 - ₹0.30 கோடி
மொத்தத்தில், படம் இதுவரை சுமார் ₹1 கோடி அளவிலேயே வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், பெரிய எதிர்பார்ப்புடன் வந்த படம் வசூலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றே சொல்லப்படுகிறது.
LIK படம் குறைந்தது ஆரம்பத்தில் ரசிகர்களை திரையரங்குகளுக்கு கொண்டு வந்துள்ளது. ஆனால் TN2026 படம் சர்ச்சை இருந்தும், அது டிக்கெட் விற்பனையாக மாறவில்லை.
எதிர்காலம் எப்படி இருக்கும்?
LIK படத்துக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக குடும்ப ரசிகர்கள், இளைஞர்கள் தொடர்ந்து வருவார்களா என்பது முக்கியம். TN2026 படத்துக்கு வந்துவிட்ட எதிர்மறை விமர்சனங்கள் மற்றும் குறைந்த திரையரங்கு ஆதரவு காரணமாக, அதன் வசூல் மேலும் உயர வாய்ப்பு குறைவாகவே பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications