LIK Review: லவ் இன்சூரன்ஸ் கம்பெனி எப்படி இருக்கு? கலக்கியதா? குழப்பியதா? விமர்சனம் இதோ
சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (LIK) படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கிரித்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, சீமான், யோகி பாபு, கெளரி கிஷன், ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்காங்க. அனிருத் இசை அமைத்துள்ள இந்த படம், ரொமான்டிக்-ஃபேண்டஸி ஜானரில் உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தின் ட்விட்டர் ரிவ்யூவை (Love Insurance Company (LIK) Review) இதில் பார்க்கலாம்.

படத்தின் பிரச்சனை
இந்த படம் ஆரம்பத்திலிருந்து பல தடைகளை சந்தித்தது. முதலில் சிவகார்த்திகேயன் நடிக்க இருந்தது, பிறகு மாற்றம், ரிலீஸ் தேதிகள் தொடர்ந்து மாற்றம் என இப்படி நீண்டநாளாக கிடப்பில் இருந்த படம் தான் LIK. இறுதியாக ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வந்திருக்கு.
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி பட கதை
இப்போ முக்கியமான விஷயம், படம் எப்படி இருக்குன்னு நெட்டிசன்கள் என்ன சொல்றாங்கன்னு பாத்தா கலந்த விமர்சனம்தான் அதிகம். முதலில் பாசிட்டிவ் பக்கம் பார்த்தா, 2040ம் ஆண்டை பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படம், அதற்கான விஷுவல்ஸ், கலர்ஃபுல்லான காட்சிகள், உலக அமைப்பு என இதெல்லாம் பலருக்கும் பிடிச்சிருக்குது.
LIK பிளஸ் பாயிண்ட்
கிரித்தி ஷெட்டியின் அறிமுக காட்சி, பிரதீப் - எஸ்.ஜே. சூர்யா மோதல் சீன்கள், யோகி பாபுவின் காமெடிகள் நல்ல ரெஸ்பான்ஸ் வாங்கி இருக்கு. குறிப்பாக அனிருத் இசை, பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்துக்கு பெரிய பலம்னு பலர் சொல்லி இருக்காங்க. முதல் பாதி ஜாலியா போகுது, லைட் ஆக எண்டர்டெயின் பண்ணுது என்ற கருத்தும் அதிகமா வருகிறது.
மைனஸ் இருக்கு
ஆனா நெகட்டிவ் பக்கம் வந்துட்டா, இரண்டாம் பாதிதான் படத்துக்கு பெரிய சிக்கல் என்று பலர் சொல்றாங்க. கதை எங்கோ நின்று போகும் மாதிரி, தேவையில்லாம நீளுது என்ற உணர்வு வந்துருச்சு என்று விமர்சனங்கள் இருக்கிறது. நல்ல கான்செப்ட் இருந்தும் அதை முழுமையாக பயன்படுத்தல என்ற குறையும் சொல்லப்படுகிறது.
விக்னேஷ் சிவனின் நரேஷன் சில இடங்களில் சரியாக வேலை செய்யவில்லை, சில காட்சிகள் லாஜிக் இல்லாம இருக்குது என்ற கருத்தும் வெளிவந்துருக்கு. அதே சமயம், பிரதீப் ரங்கநாதன் தனது நடிப்பாலும், காமெடி டைமிங்காலும் படத்தை ஓரளவு காப்பாற்றுறார் என்பதும் ரசிகர்கள் சொல்லும் விஷயம்.
மொத்தத்தில் பார்த்தா, 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படம் ஒரு நல்ல ஐடியா இருந்தும், அதைக் முழுசாக திரையில் கொண்டு வர முடியாமல் போன படம் மாதிரி தான் பலர் கருத்து. சிலருக்கு இது லைட் எண்டர்டெயின்மென்ட், ஒரு தடவை பார்க்கலாம் என்ற அளவுக்கு இருக்குன்னு தோணுது.
அதே நேரத்தில், இன்னொரு பகுதி ரசிகர்கள், "படம் முழுக்க ஈர்க்கவில்லை... சராசரிக்கும் கீழே தான்"ன்னு நேரடியாக சொல்லி இருக்காங்க. இப்போ நிலைமை என்னனா? விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதன் கூட்டணி பெரிய ஹிட் கொடுத்ததா? இல்ல ஒரு மிஸ் ஆயிடுச்சா?ன்னு ரசிகர்கள் இன்னும் டிவைடட் ஆகி இருக்காங்க.
அதனால், LIK படம் குறித்து ஒரே லைன்ல சொல்லணும்னா.. விஷுவல்ஸ், மியூசிக், சில காமெடி சீன்கள் ஹைலைட்... ஆனா ஸ்ட்ராங் ஸ்கிரிப்ட் இல்லாததால் முழு பட அனுபவம் எல்லாருக்கும் வேலை ஆகலை.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications