தூக்கி சாப்பிட்ட மணிவண்ணனின் நடிப்பு.. கோடியில் சம்பளம் வாங்கிய சிவாஜி.. ரெக்கார்டு படைத்த படையப்பா
சென்னை: கிட்டத்தட்ட 86 தியேட்டர்களில் 100 நாட்களுக்கு மேல் ஓடிய படம் படையப்பா.. இந்த படம் தெலுங்கில் நரசிம்மா என்று டப் செய்து, 49 தியேட்டர்களில் 50 நாட்களுக்கு மேல் ஓடியது இந்த படம்.. 45 கோடிக்கு மேல் வசூல் செய்த படம்.. தமிழக அரசின் 5 விருதுகளை பெற்ற படம்" என்றெல்லாம் படையப்பா படத்தை பாராட்டி தள்ளியிருக்கிறார் மூத்த பத்திரிகையாளரும், சினிமா விமர்சகருமான திண்டுக்கல் வெங்கடேசன்.
Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சினிமா விமர்சகர் திண்டுக்கல் வெங்கடேசன், "படையப்பா படத்தில் சிவாஜி கணேசனை நடிக்க வைக்க முடிவானது.. கிட்டத்தட்ட இது சிவாஜி சாரின் கடைசி படம்.. அப்போதே அவருக்கு உடம்பு சரியில்லாமல் இருந்தது.. அதனால் படக்குழுவினர் மிகவும் கவனமாக அவரை பார்த்து கொண்டனர்..
படத்தில் சில இடங்களில் அவர் படிக்கட்டு ஏறி நடக்கக்கூட சிரமப்பட்டாராம். ஆனாலும்., "நான் நடிக்கணும்டா" என்று சொல்லி மிகுந்த ஆசையுடன் சிரமப்பட்டுதான் நடித்தாராம்.. அந்த சிரமங்களை மீறி அவர் முழு ஈடுபாட்டுடன் நடித்திருக்கிறார்.
தனக்கு உடம்பு சரியில்லாமல் இருந்தபோதும்கூட, சவால் நிறைந்த சீன்களில் நடித்தார் சிவாஜி கணேசன்.. மூச்சு வாங்கி வசனம் பேசியிருந்தார்.. அந்தவகையில் சிரமப்பட்டுதான் படையப்பா படத்தில் நடித்தார்..

கோடியில் சம்பளம் வாங்கிய சிவாஜி
வீட்டைகாலி செய்யும்போது அழும் காட்சியில், சிவாஜி கணேசன் நிஜமாகவே உருகி அழுதாராம்.. ஏனெனில், அந்த நேரத்தில் அவருக்கு சொந்த வாழ்க்கையில் குடும்ப சொத்து பிரச்சனைகள் இருந்தன.. எனவே சிவாஜி கணேசன் சற்று உணர்ச்சிவசப்பட்டார்..
சிவாஜி சார் கேட்டதைவிட அதிகமாக சம்பளம் தந்தார்கள்.. காரணம் எப்படியாவது சிவாஜி சார் இதில் நடித்துவிட வேண்டும் என்பதால்தான்..
முதல் முதலில் கோடியில் சிவாஜி சார்தான் இந்த படத்தில்தான் சம்பளம் வாங்கினார்.... அதிலும் ஒரே பேமென்ட்டாக சம்பளம் சிவாஜிக்கு தரப்பட்டது.. "என்னை பணத்தால் விலை கொடுத்து வாங்க பார்க்கிறாயா, ரஜினி?" என்று சிவாஜி சிரித்து கொண்டே கேட்டாராம்..
தூக்கி சாப்பிடும் மணிவண்ணன்
அதேபோல மணிவண்ணன் சிறப்பாக நடித்திருப்பார்.. ஆரம்பத்தில் ஏற்கனவே கொடி பறக்குது படத்தில் ரஜினிகாந்த்துக்கு வில்லனாக நடித்திருந்தார் மணிவண்ணன்.. எனக்கு ஒரு மெயின் ரோல் சிக்கினால் உங்களை கண்டிப்பாக கூப்பிடுவேன் என்று அப்போதே ரஜினி மணிவண்ணனிடம் சொன்னாராம்..
இந்த படையப்பா படத்தில் சித்தப்பா கேரக்டருக்கு மணிவண்ணனைதான் நடிக்க வைக்க வேண்டும் என்று ரஜினி விரும்பினாராம்..உடனே சிவாஜி கணேசன், "மணிவண்ணன் நடிப்பில் நம்மளையே தூக்கி சாப்பிடுவான்.. ரஜினி என்னத்தையாவது ஸ்டைல் செய்து ஸ்கோர் செய்துடுவார்.. இதுல லட்சுமியை வேற போட்டிருக்கீங்களா? அந்தம்மா வந்தா வேற கலக்கிட்டு போயிருமே.. என்னை சுற்றிலும் இத்தனை பேரை நடிக்க வெச்சு, இந்த சிவாஜியை என்ன டம்மி ஆக்க பாக்குறீங்களா?" என்று ஜாலியாக பேசி, இவர்களின் நடிப்பு திறமையையும் பாராட்டி சொன்னாராம் சிவாஜி கணேசன்.
படையப்பா சாதனைகள்
ரஜினி திரைக்கு வந்து 25 ம் வருடத்தில் வெளியான படத்தை இப்போது 50வது வருடத்தில் டிஜிட்டரில் ரீ-ரிலீஸ் ஆகிறது.. அன்று 21 ரீல்களில் படையப்பா படம் ரெடியானது.. 1 ரீல் என்பது 1000 அடியாகும். பிறகு, 14 ரீலாக குறைக்கப்பட்டது.. இந்த படத்துக்கு மொத்தம் 210 பிரிண்ட்கள் போடப்பட்டன..
கிட்டத்தட்ட 86 தியேட்டர்களில் 100 நாட்களுக்கு மேல் இந்த படம் ஓடியது.. தெலுங்கில் நரசிம்மா என்று டப் செய்து, 49 தியேட்டர்களில் 50 நாட்களுக்கு மேல் ஓடியது இந்த படம்.. 45 கோடிக்கு மேல் வசூல் செய்த படம்..
1975-ம் ஆண்டுக்கு பிறகு லட்சங்களில் சம்பளம் வாங்கிய முதல் நடிகர் ரஜினிகாந்த்.. கோடிகளில் சம்பளம் வாங்கிய நடிகரும் ரஜினிகாந்த்.. கோடியில் வசூல் சாதனையில் படைத்தது ரஜினிகாந்தின் படையப்பா.. தமிழக அரசின் 5 விருதுகளை இந்த படம் வென்றது.. அந்தவகையில் படையப்பாவின் சாதனைகள் அதிகம்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications