Mankatha box office: ரீ ரிலீஸில் அதிக வசூலை அள்ளியது கில்லியா? மங்காத்தாவா? அதுவும் இவ்வளவு வித்தியாசம்!
சென்னை: தமிழ் சினிமாவில் ரீ-ரிலீஸ் என்றால் ரசிகர்களுக்கு எப்போதுமே ஒரு தனி உணர்ச்சி இருக்கும். பழைய நினைவுகள், திரையரங்கில் மீண்டும் அதே ஆரவாரம், அதே விசில்... இந்த எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் கொடுக்கும் விஷயம்தான் ரீ-ரிலீஸ். அந்த வகையில், இதுவரை ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட படங்களில் விஜய் நடித்த 'கில்லி' படம் தான் வசூலில் முதலிடம் பிடித்து வந்தது. ஆனால் இப்போது அந்த சாதனையை அஜித் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் 'மங்காத்தா' முறியடித்திருக்கிறது.

மங்காத்தா ரீ ரிலீஸ்
2011ஆம் ஆண்டு வெளியான 'மங்காத்தா', நடிகர் அஜித்குமாரின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக அமைந்தது. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான இந்த படம், வழக்கமான ஹீரோ இமேஜை உடைத்து, அஜித்தை ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் காட்டியது.
ஐந்து பேர் கொண்ட ஒரு கேங், 500 கோடி ரூபாய் பணத்தை கொள்ளை அடிக்க திட்டமிடும் கதை, அதில் வரும் திருப்பங்கள், ட்விஸ்ட்கள் என படம் முழுக்க ரசிகர்களை சீட்டின் நுனியில் உட்கார வைத்தது.
அஜித்தின் நெகட்டிவ் ரோல், அவருடைய ஸ்டைல், வசன உச்சரிப்பு எல்லாமே அந்த நேரத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதனால் தான் 'மங்காத்தா' வெளியான போது மட்டுமல்ல, இத்தனை ஆண்டுகள் கழித்தும் ரசிகர்கள் அந்த படத்தை மறக்காமல் வைத்திருக்கிறார்கள்.
பிரம்மாண்ட ரீ-ரிலீஸ்
இந்த நிலையில், 14 ஆண்டுகளுக்குப் பிறகு 'மங்காத்தா' படம் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழகமெங்கும் 400க்கும் மேற்பட்ட திரைகளில் இந்த படம் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. குறிப்பாக முதல் நாளிலேயே ஆன்லைன் டிக்கெட் முன்பதிவில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட டிக்கெட்கள் விற்பனையாகியதாக தகவல்கள் வெளியாகின. ரீ-ரிலீஸ் படத்துக்கு இது சாதாரண விஷயம் கிடையாது.
திரையரங்குகளில் ரசிகர்கள் பட்டாசு, விசில், கட்-அவுட் பாலபிஷேகம் என முழு திருவிழா மூடில் 'மங்காத்தா'வை கொண்டாடினர்.
கில்லி சாதனை உடைந்த தருணம்
ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட 'மங்காத்தா' படத்தின் முதல் நாள் வசூல் விவரங்கள் தான் இப்போது அதிக கவனம் பெற்றிருக்கிறது. தகவல்களின்படி, தமிழ்நாட்டில் மட்டும் ஒரே நாளில் 'மங்காத்தா' படம் ரூ.4.65 கோடி வசூலித்திருக்கிறது. இந்திய அளவில் பார்த்தால், முதல் நாள் வசூல் ரூ.5 கோடியை கடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்பு ரீ-ரிலீஸ் வசூலில் முதலிடத்தில் இருந்த படம் விஜய் நடித்த 'கில்லி'. அந்த படம் ரீ-ரிலீஸில் ரூ.4.23 கோடி வசூலித்ததே பெரிய சாதனையாக பேசப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அந்த சாதனையை 'மங்காத்தா' முறியடித்திருக்கிறது. அதிலும் முன்பதிவில் மட்டும் ரூ.2.20 கோடி வசூலித்ததாக செய்திகள் வெளியாகி இருப்பது, இந்த வெற்றியின் அளவை இன்னும் பெரிதாக காட்டுகிறது.

விஜய் - அஜித் ரசிகர்கள் விவாதம்
'கில்லி' மற்றும் 'மங்காத்தா' ஆகிய இரண்டு படங்களுமே தங்களுடைய நடிகர்களின் திரை வாழ்க்கையில் முக்கியமான படங்கள். 'கில்லி' விஜயை மாஸ் ஹீரோவாக இன்னொரு கட்டத்துக்கு கொண்டு சென்ற படம் என்றால், 'மங்காத்தா' அஜித்தின் இமேஜையே மாற்றிய படம். அதனால் தான் இந்த இரண்டு படங்களின் ரீ-ரிலீஸ் வசூல் ஒப்பீடு ரசிகர்களிடையே பெரிய விவாதமாக மாறியுள்ளது.
ஒரு தரப்பு, "ரீ-ரிலீஸ்ல கூட இப்படி வசூல் அடிக்கிறது அஜித் படம்தான்" என்று கொண்டாடினால், இன்னொரு தரப்பு "கில்லி தான் இந்த ட்ரெண்டுக்கு ஆரம்பம்" என்று சொல்லி வருகின்றனர்.
முன்பதிவில் பட்டையை கிளப்பும் 'மங்காத்தா'! அஜித் ரசிகர்கள் வெறித்தனம்! ஜனநாயகன் இப்படி ஆயிடுச்சே!
ரீ-ரிலீஸ் என்பது இனி சும்மா நாஸ்டால்ஜியா மட்டுமல்ல, பெரிய வசூல் சந்தையாக மாறி வருகிறது என்பதற்கு 'கில்லி'யும் 'மங்காத்தா'வும் சிறந்த உதாரணங்கள். குறிப்பாக 'மங்காத்தா' ரீ-ரிலீஸில் புதிய வசூல் சாதனை படைத்திருப்பது, தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. வரும் காலங்களில் இன்னும் எந்தெந்த பழைய படங்கள் இந்த சாதனையை முறியடிக்கப்போகின்றன என்பதை ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications