நாகார்ஜுனாவுக்கு ரூ.8000 கோடி சொத்து.. மாதா மாதம் அந்த நடிகைக்கு மணியார்டரில் போகும் "அன்புத்தொகை"
சென்னை: நாகார்ஜூனா பலருக்கும் பல உதவிகளை செய்து வருபவர்.. அவர் செய்யும் உதவிகள் வெளியில் தெரிவதில்லை.. தெலுங்கானா பகுதியில் சுமார் 1500 ஏக்கர் வனப்பகுதியை தத்தெடுத்து, அதன் பராமரிப்பு செலவுகளையும் நாகார்ஜுனாவே ஏற்று நடத்தி வருகிறார் என்று தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
AramNaadu என்ற யூடியூப் சேனலில் பேசியிருக்கும் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, "நாகார்ஜூனா அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவர்.. பழகும் விதமே எளிமையாக இருக்கும்.. பள்ளியில் படிக்கும்போதிருந்தே திமிர் இருக்காது.. சகஜமாக, அனைவரிடமும் பழகக்கூடியவராக வளர்ந்துள்ளார்..

யாராக இருந்தாலும் அவர்களுக்கு மரியாதை தரக்கூடியவர்.. ஏழ்மை குடும்பத்தில் இருந்து வந்தவர் கிடையாது.. வசதி படைத்தோரை BORN WITH SILVER SPOON என்பார்கள், ஆனால் நாகார்ஜூனாவை BORN WITH DIAMOND SPOON என்றே சொல்லலாம்.. அந்த அளவுக்கு பெரிய கோடிகளில் சொத்துள்ள அதிபதி.
நாகார்ஜுனா சொத்து
அவருக்கு சொந்தமான அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் விலைமதிப்பில்லாத சொத்தாக அவருக்கு மாறிவிட்டது.. அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் ஆந்திர மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய ஸ்டுடியோக்களில் ஒன்றாக உள்ளது.. இதன் மதிப்பு சுமார் 500 கோடி ரூபாய் இருக்கும்.,
ஹைதராபாத்தில் ஜூப்லி ஹில்ஸில் அவருக்கு ஒரு பிரம்மாண்டமான வீடு உள்ளது. இதன் மதிப்பு மட்டும் சுமார் 50 கோடி ரூபாயாகும்.. இதைத்தவிர ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வருகிறார்.. லாபம் தரும் தொழிலாக ரியல் எஸ்டேட் உள்ளது..
நம்பர் 1 பணக்காரர் - அன்னபூர்ணா ஸ்டுடியோ
தென்னிந்தியாவின் நம்பர் 1 பணக்காரராக உள்ளார். 7000, 8000 கோடி ரூபாய் வரையிலான சொத்து மதிப்பு வைத்துள்ளதாக சொல்கிறார்கள். அதன் மதிப்பும் உயர்ந்தபடியே உள்ளது.. பெரும்பாலும் தனது சொந்த தனி விமானத்தையே பயன்படுத்துகிறார். பல விலையுயர்ந்த சொகுசு கார்களை வைத்திருக்கிறார்.
அதேபோல பலருக்கும் பல உதவிகளை செய்து வருபவர் நாகார்ஜூனா.. அவர் செய்யும் உதவிகள் வெளியில் தெரிவதில்லை... தெலுங்கானா பகுதியில் சுமார் 1500 ஏக்கர் வனப்பகுதியை தத்தெடுத்து, அதன் பராமரிப்புச் செலவுகளையும் நாகார்ஜுனாவே ஏற்று நடத்தி வருகிறார்.
நடிகை ரமாபிரபா
மறைந்த நடிகை ரமா பிரபாவிற்கு நிறைய உதவிகளை தொடர்ந்து செய்து வந்தார்.. காரணம், ரமாபிரபா தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகையாவார்.. இவர் நடிகர் சரத் பாபுவின் முதல் மனைவி ஆவார்...நாகார்ஜுனாவின் அப்பா நாகேஸ்வர ராவ், ரமாபிரபா அன்று தன்னுடைய சொந்த மகள் போலவே கருதி மிகவும் பாசமாக நடத்தினார்.
நாகேஸ்வர ராவ் உயிருடன் இருந்தவரை, தான் நடிக்கும் அனைத்துப் படங்களிலும் ரமா பிரபாவிற்கு நடிப்பதற்கோ அல்லது டப்பிங் பேசுவதற்கோ ஏதாவது ஒரு வாய்ப்பை தந்துவிடுவார்... நாகேஸ்வர ராவ் மறைந்த பிறகு, ரமா பிரபா ஆந்திராவின் மதனப்பள்ளி என்ற கிராமத்தில் வசித்து வந்தார். ஆனால், அப்போதுகூட ஒவ்வொரு மாதமும் உதவிகள் பண உதவி ரமா பிரபாவுக்கு கிடைத்து கொண்டேயிருந்தது..
மணியார்டர் - அன்புத்தொகை
யார் அந்த மணியார்டரை தொடர்ந்து அனுப்பி வைக்கிறார்கள்? என்ற விவரமே ரமாபிரபாவுக்கு தெரியாமல் இருந்துள்ளது.. யாரென்று தெரியாத ஒருவரிடமிருந்து பணம் கிடைத்து வந்த நிலையில், அந்த பணத்தை அனுப்பி வைத்து கொண்டிருப்பதே நாகார்ஜுனா என்பது நீண்ட நாட்களுக்கு பிறகுதான் தெரிய வந்தது.
தன்னுடைய அப்பா ரமா பிரபா மீது வைத்திருந்த பாசத்தையும், அவருக்குச் செய்த உதவியையும், அப்பா மறைந்த பிறகும் நாகார்ஜுனா தொடர்ந்து செய்து வந்தார். ரமா பிரபாவுக்கு இப்போதுகூட அந்த அன்புத்தொகை சென்று கொண்டுதான் உள்ளது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications