நயன்தாரா இப்படி பண்ணுவாங்கன்னு எதிர்பார்க்கல! ஏர்போர்ட்டில் நடந்த சம்பவம் இதுதான்! பிஸ்மி விளக்கம்
சென்னை: நேற்று முன்தினம் துபாய் ஏர்போர்ட்டில நயன்தாராவுடன் வலைப்பேச்சு டீம் எடுத்துக்கிட்ட ஒரே ஒரு போட்டோ... அதான் இப்போ இணையத்துல இவ்வளவு பெரிய புயலை கிளப்பிச்சிருக்குது. பார்த்தா சும்மா ஒரு சாதாரண செல்ஃபி மாதிரி தான். ஆனா அந்த போட்டோவுக்குப் பின்னால இருக்கிற பழைய சர்ச்சையை தெரிஞ்சுக்கிட்டா, "அட இதுக்குத்தான் இவ்வளவு வைரலா?"ன்னு புரியும்.
ஒரு வருடத்துக்கு முன்னாடி நயன்தாரா கொடுத்த ஒரு பேட்டியில், பிஸ்மி - அந்தணன் - சக்திவேல் மூவரையும் மறைமுகமா "மூன்று குரங்குகள்"ன்னு சொல்லிட்டாரு. அது அப்போ பெரிய சர்ச்சை. வலைப்பேச்சு டீமும் அதுக்கு எதிர்வினை கொடுத்தாங்க. "பாடி ஷேமிங் சரியா?", "நயன்தாரா மாதிரி ஒரு பெரிய நடிகை இப்படிச் சொல்லலாமா?"ன்னு கேள்வி மேல கேள்வி. அந்த வீடியோக்கள் எல்லாம் வைரலானதே.

அந்த பின்னணியோட இப்போ நேற்று முன்தினம் துபாய் ஏர்போர்ட்டில நாலு பேரும் சேர்ந்து நின்னு சிரிச்சுக்கிட்டே போட்டோ எடுத்திருக்காங்கன்னா... நெட்டிசன்ஸ் விடுவாங்களா? "அட, குரங்குகளோட லேடி சூப்பர் ஸ்டார் மீட்டிங்"ன்னு கலாய்ப்பு ஆரம்பிச்சுடுச்சு.
இதுக்கிடையில பிஸ்மி இதைப் பற்றி ஒரு பேட்டியும் கொடுத்திருக்கார். அதுல அவர் சொன்ன விஷயம் தான் இன்னும் காமெடி. "நாங்க மூணு பேரும் ஒரு நிகழ்ச்சிக்காக துபாய் போயிருந்தோம். அதே சமயம் நயன்தாராவும் துபாய்ல தான் இருந்தாங்க. ரெண்டு பேரும் ஒரே ஃப்ளைட் தான். அப்போ ஏர்போர்ட்டில எதேச்சையா சந்திச்சோம்"ன்னு ஆரம்பிச்சார்.
அப்போ "பேசும்போது கோபம் இருந்ததா? யாருக்காவது டென்ஷன் இருந்ததா?"ன்னு கேட்டதுக்கு, பிஸ்மி சொன்ன பதில் செம்ம ட்விஸ்ட். "சொல்லப்போனா எங்களைவிட நயன்தாரா தான் கோபமா இருக்க வேண்டியவங்க. ஏன்னா அவங்க ஒரே ஒரு பேட்டியில தான் எங்களைப் பற்றி பேசினாங்க. நாங்க தான் ஆயிரம் தடவை அவங்களைப் பற்றி சேனல்ல பேசி இருக்கோம்.
அவங்க நினைச்சிருந்தா எங்களை பார்த்ததும் முகத்தை திருப்பியிருக்கலாம். ஆனா அப்படியெல்லாம் எதுவும் இல்ல. சிரிச்சு, நல்லா பேசினாங்க"ன்னு சொன்னார். அதோட முடிச்சுட்டு, "நான் நயன்தாரா இடத்துல இருந்திருந்தா கண்டிப்பா கோபம் வந்திருக்கும். பேசவே மாட்டேன்"ன்னு ஒரு பஞ்ச் டயலாக் வேற.
இதை கேட்டதும் நெட்டிசன்ஸ், "அப்போ லேடி சூப்பர் ஸ்டார் தான் உண்மையிலேயே சூப்பர்"ன்னு ஒரு பக்கம், "இது எல்லாம் கேமரா முன்னாடி நடிக்கிற நட்பா?"ன்னு இன்னொரு பக்கம் கலாய்க்க ஆரம்பிச்சிட்டாங்க.
மொத்தமா சொல்லப்போனா, ஒரு காலத்துல வார்த்தை யுத்தம், விமர்சனம், சர்ச்சைன்னு இருந்த இடத்துல, இப்போ ஏர்போர்ட் செல்ஃபி, சிரிப்பு, மரியாதைன்னு மாறியிருக்குது. இதை பார்த்து தான் நெட்டிசன்ஸ் சொல்றாங்க . "சினிமாவும் சரி, சோசியல் மீடியாவும் சரி... இங்க பகை கூட ஒரு போட்டோவுல ஃப்ரெண்ட்ஷிப் ஆயிடும்!" என்று கலாய்த்து வருகின்றனர்.
அதோடு பிஸ்மி கொடுத்த பேட்டியில், நாங்கள் ரொம்ப நேரம் பேசிக்கல கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்தோம். நீங்க வீடியோவில் பார்க்கிற அந்த நேரம் மட்டும்தான் நாங்கள் பேசிக்கொண்டோம். முதலில் குடும்பத்தை பற்றியும், பிறகு குழந்தைகள் பற்றியும் பேசிக்கொண்டோம். அடுத்ததாக விக்கியிடம் அவருடைய லிக் (LIK) படம் எதற்காக லேட் ஆகுது என்ற தகவலை கேட்டுக்கொண்டோம் அவ்வளவுதான் பேசிக்கொண்டோம். ஆனாலும் இது ஒரு வித்தியாசமாக இருந்தது என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications