ஒடிசா இளைஞருக்கு மட்டும் அல்ல.. என் கண் முன்னே நடந்த சம்பவம்! சந்தோஷ் நாராயணன் ஆதங்கம்
சென்னை: ஒடிசாவை சேர்ந்த இளைஞர் ஒருவர், திருத்தணி ரயில் நிலையம் அருகே நான்கு சிறுவர்களால் பட்டாக்கத்தியால் கண்மூடித்தனமாக தாக்கப்படும் வீடியோ வெளியாகி, தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், எந்த விதமான இரக்கமும் இல்லாமல், பாதுகாப்பற்ற நிலையில் இருந்த அந்த இளைஞரை சிறார்கள் தாக்கும் காட்சிகள், பலரின் மனதை உலுக்கியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு எதிராக, பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதில், கடந்த பத்தாண்டுகளாக சென்னையில் வசித்து வரும் தனது அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார்.

"நான் வசித்து வரும் பகுதி, குறிப்பாக இரவு நேரங்களில், போதைப்பொருட்களுக்கு அடிமையான குண்டர்கள் மற்றும் குற்றவாளிகளால் மிக அபாயகரமான பகுதியாக மாறியுள்ளது. என் ஸ்டுடியோ வளாகத்தின் பக்கத்தில் பணிபுரியும் பல அப்பாவி கட்டுமானத் தொழிலாளர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஒரு குற்றவாளி, வரம்பு மீறிய போதையில் இருந்ததால், காவல்துறை தடியடி நடத்தியபோதும் வலியில்லாமல் சிரித்துக் கொண்டிருந்தான்" என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தத் தாக்குதல்களில் ஈடுபடுவோரில் பெரும்பாலானோர் இனவெறி மனநிலையுடன், பிற மாநிலங்களைச் சேர்ந்த மக்களை குறிவைத்து தாக்குபவர்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்ளூர் அரசியல் பிரிவுகள் மற்றும் சில சாதி அடிப்படையிலான குழுக்கள், இப்படிப்பட்ட இளம் குற்றவாளிகளை மறைமுகமாக ஆதரிக்கின்றன என்பதை சமூகம் உணர வேண்டிய நேரம் இது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
திரையில் காட்டப்படும் வன்முறையும், நிஜ வாழ்க்கையில் நடக்கும் கொடூர சம்பவங்களுக்கும் இடையிலான எல்லைகள் மங்கிவிட்டதாகவும், பொறுப்புடன் செயல்படாவிட்டால் மேலும் பல அப்பாவி உயிர்கள் பாதிக்கப்படும் என்றும் சந்தோஷ் நாராயணன் எச்சரித்துள்ளார். இதே விவகாரத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர் ஒடிசாவை சேர்ந்த சூரஜ் என்பது தெரியவந்துள்ளது. குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டை விட்டு வெளியேறி தமிழ்நாட்டிற்கு வந்த அவர், தங்குவதற்கு இடமின்றி, இரவு நேரங்களில் ரயில் நிலையங்களில் தங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். திருத்தணி ரயில் நிலையம் அருகே தூங்கிக் கொண்டிருந்த போது தான், சிறார்களால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்த சூரஜ், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கவுன்சலிங் வழங்கப்பட்டது. ஆனால், "ஊருக்கே திரும்ப வேண்டும்" என்பதில் அவர் உறுதியாக இருந்ததால், தேவையான ஆவணங்களில் கையெழுத்திட்டு, சொந்த ஊரான ஒடிசாவிற்கு குடும்பத்துடன் சென்றுவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் வெளியாகியதிலிருந்து, சமூக வலைதளங்களில் பலரும் "வெளி மாநிலத்தவர் என்பதற்காக இப்படியொரு வன்முறையா?", "சிறார்களாக இருந்தாலும் இது மனிதாபிமானமற்ற செயல்", "தமிழ்நாடு அனைவருக்கும் பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டாமா?" என கேள்விகளை எழுப்பி வருகின்றனர். குறிப்பாக, நான்கு சிறுவர்கள் ஒன்றாக சேர்ந்து, பாதுகாப்பற்ற ஒருவரை தாக்கியிருப்பது, சமூகத்தின் எதிர்காலம் குறித்த அச்சத்தையும் உருவாக்கியுள்ளது.
வேலை தேடி, வாழ்க்கை தேடி வந்த ஒரு இளைஞர், இங்கே பாதுகாப்பின்றி தாக்கப்பட்ட சம்பவம், வன்முறை, போதைப்பொருள், இனவெறி ஆகியவை எவ்வளவு ஆழமாக சமூகத்தில் வேரூன்றியுள்ளன என்பதை மீண்டும் நினைவூட்டுகிறது. இந்த சம்பவம், வெறும் ஒரு வீடியோவாக மறைந்து போகாமல், நிரந்தர தீர்வுகளுக்கு வழிவகுக்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications