Parasakthi Day 9 Collection: பராசக்தி 9வது நாளிலும் இத்தனை கோடி வசூல்.. சிவகார்த்திகேயனின் பாக்ஸ் ஆபீஸ் ‘தீ’
சென்னை: "பராசக்தி" படத்தைப் பற்றி ஆரம்பத்தில் அதிகம் பேசப்பட்டது விமர்சனம்தான். 'சுதா கொங்கரா இந்த கதையை இன்னும் வலுவாக சொல்லியிருக்கலாமே', 'திரைக்கதையில் சறுக்கல்'ன்னு பல கருத்துகள் வந்தன. ஆனாலும் படம் வெளியான சில நாட்களுக்குப் பிறகு பேசப்படும் மைய விஷயம் மெல்ல மாற ஆரம்பிச்சது. அது வேற எதுவும் இல்ல... வசூல் நிலவரம் தான்.
இந்த படம் ரிலீஸுக்கு முன்னாடியே ஒரு பெரிய அட்வான்டேஜ் இருந்தது. சுதா கொங்கரா - சிவகார்த்திகேயன் காம்போ. அதுவும் 60களில் நடந்த ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் மாதிரியான சென்சிடிவ் ஆன, அதே நேரம் உணர்ச்சிப்பூர்வமான ஒரு விஷயம். இதனால் முதல் நாளிலேயே தியேட்டர்களில் நல்ல கூட்டம். "விமர்சனம் எப்படி இருந்தாலும் முதலில் படம் பார்க்கணும்"ன்னு வந்த ரசிகர்களால ஓப்பனிங் ஸ்ட்ராங் ஆக அமைந்தது.

அதுக்கு சரியான உதாரணம்தான் முதல் இரண்டு நாட்களிலேயே வெளியான வசூல் அப்டேட். இரண்டு நாளில் 50 கோடியை தாண்டியதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அந்த அறிவிப்பு வந்த உடனே படம் பற்றிய பேச்சு வேற திசைக்கு திரும்பியது. 'கலவையான விமர்சனம் பெற்ற படம் இப்படி வசூல் பண்ணுதா?'ன்னு பலரும் ஆச்சரியப்பட்டாங்க.
அதுக்குப் பிறகு தான் உண்மையான சோதனை ஆரம்பிச்சது. மூன்றாம் நாள், நான்காம் நாள்... வேர்டு ஆஃப் மவுத் தான் ஒரு படத்தை காப்பாத்துமா, இல்ல மூழ்கடிக்குமா என்பதை முடிவு செய்யும். "பராசக்தி"யின் விஷயத்தில் அந்த வேர்டு ஆஃப் மவுத் முழுக்க நெகட்டிவ் ஆக மாறல. சில குறைகள் இருந்தாலும், சிவகார்த்திகேயன் - ரவி மோகன் நடிப்பு, குறிப்பாக அவர்களுக்குள்ள மோதல் காட்சிகள், ரசிகர்களை தியேட்டருக்குள் தக்க வைத்துக்கொண்டே இருந்தது.
இதனால்தான் படம் திடீர்னு ட்ராப் ஆகல. ஒவ்வொரு நாளும் வசூல் குறைந்தாலும், அது அபாய நிலைக்கு போகவில்லை. குறிப்பாக ஒன்பதாவது நாளிலும் சுமார் 2.9 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியானது. இது ஒரு முக்கியமான பாயிண்ட். ஏனெனில் கலவையான விமர்சனம் பெற்ற பல படங்கள் ஒரு வாரத்துக்குள்ளேயே தினசரி வசூலில் பெரிய சரிவை சந்தித்திருக்கும். ஆனால் "பராசக்தி" அந்த கட்டத்தை கடந்து நிற்கிறது.
மொத்தமாக பார்த்தால், ஒன்பது நாட்களில் இந்திய அளவில் படம் சுமார் 49 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது என சொல்லப்படுகிறது. முழுக்க முழுக்க பாசிட்டிவ் விமர்சனம் பெற்ற சூப்பர் ஹிட் படம் மாதிரி இது இல்லை. அதே நேரத்தில் தோல்வி படம் என ஒதுக்கிவிடக்கூடிய வசூலும் இல்லை. இது தான் இந்த படத்தின் சுவாரஸ்யமான விஷயம்.
அதனால்தான் இப்போ சினிமா வட்டாரத்தில் "பராசக்தி"யை ஒரு 'வசூல் சர்ப்ரைஸ்' படமா தான் பார்க்குறாங்க. விமர்சனம் கலவையாக இருந்தாலும், ஆரம்ப ஓப்பனிங், நடிகர் பலம், அரசியல் பின்னணி கொண்ட கதை என்ற க்யூரியாசிட்டி... இந்த மூன்றும் சேர்ந்து படத்தை பாக்ஸ் ஆபிஸில் ஓட வைக்குது.
இனி வரும் நாட்களில் வசூல் எந்த அளவுக்கு தன்னை நீட்டிக்கப்போகுது என்பதுதான் அடுத்த பெரிய கேள்வி. ஆனால் இதுவரை பார்த்த வரைக்கும், "பராசக்தி" விமர்சனங்களை விட வசூலில் அதிகம் பேசப்படுற படமாக மாறியிருப்பது தான் நிஜம்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications