Parasakthi: ரவி மோகனா அப்படி சொன்னாரு? ரஜினியை பாலோ செய்த சிவகார்த்திகேயன்! ரசிகர்கள் ஆரவாரம்
சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. மல்டி ஸ்டார் படமாக உருவாகியுள்ள இந்த விழாவில் பல விஷயங்கள் பேசப்பட்டாலும், மொத்த நிகழ்ச்சியையும் ஹைஜாக் செய்தது சிவகார்த்திகேயனின் பேச்சு தான்.
வழக்கமான கலகலப்பு மட்டுமல்லாமல், இந்த முறை அவர் பேசிய விதம் ரசிகர்களை "இது நம்ம எஸ்கே இல்ல... தலைவர் மோட் தான்" என்று சொல்ல வைத்தது.

கூலியை நினைவுபடுத்திய தருணம்
சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள பராசக்தி படத்தில் ரவி மோகன் நெகட்டிவ் ரோலில் நடித்திருப்பது குறித்துப் பேசும்போது, சிவகார்த்திகேயன் ஒரு சுவாரஸ்யமான தருணத்தை உருவாக்கினார்.
ரவி மோகன் நெகட்டிவ் ரோல் ஓகே சொன்னாருன்னு கேட்டதும்... எது ரவி மோகனா? அப்படின்னு நான் தலைவர் மோடுக்கு போய்ட்டேன் என்று அவர் பேசியதும், அரங்கமே ஆர்ப்பரிப்பில் மூழ்கியது.
இந்த தருணம், கூலி இசை வெளியீட்டு விழாவில் நாகர்ஜுனா நெகட்டிவ் ரோலில் நடிக்க ஒப்புக்கொண்டதாக கேட்டு, "எது நாகர்ஜுனாவா?" என்று ரஜினிகாந்த் வியந்த அந்த வைரல் ஸ்பீச்சை ரசிகர்களுக்கு நினைவுபடுத்தியது. அதனால் தான், "ரஜினி போலவே பேசிக் காட்டிட்டாரே சிவா" என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாட ஆரம்பித்தனர்.
ஈகோ இல்லாத மேடை
பராசக்தி சிவகார்த்திகேயனின் 25-வது படம். அந்த முக்கியமான படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா போன்ற நடிகர்கள் இணைந்திருப்பது குறித்து அவர் வெளிப்படையாக நன்றியுடன் பேசினார். பேசில் ஜோசப், ராணா ஆகியோரின் சிறப்பு தோற்றம் பற்றியும் குறிப்பிட்டு, "இந்த படம் என் பயணத்தில் முக்கியமான மைல் ஸ்டோன்" என்றார்.
ஒரு மல்டி ஸ்டாரர் படமாக இருந்தாலும், மேடையில் எங்கும் போட்டி மனப்பான்மை இல்லை. மாறாக, "இவர்கள் எல்லாரும் சேர்ந்து தான் பராசக்தி" என்ற எண்ணமே சிவகார்த்திகேயனின் பேச்சில் வெளிப்பட்டது.
பொங்கல் மோதலுக்கு முற்றுப்புள்ளி
இந்த விழாவின் இன்னொரு முக்கிய அம்சம், பராசக்தி - ஜனநாயகன் பொங்கல் மோதல் குறித்த சிவகார்த்திகேயனின் விளக்கம். விஜய்யின் கடைசி படத்துடன் தன் படம் மோதுவதாக சிலர் விமர்சித்த நிலையில், "விஜய் சார் கிட்ட பேசிட்டேன்... இது அண்ணன்-தம்பி பொங்கல் தான்" என்று அவர் சொன்னது, பல சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இதன் பிறகு, இந்த விவகாரத்தில் தேவையற்ற வதந்திகளும், ரசிகர் மோதல்களும் குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்ப்பு உச்சத்தில்
பராசக்தி ஜனவரி 10ஆம் தேதி திரைக்கு வர, அதற்கு முந்தைய நாள் ஜனநாயகன் வெளியாகிறது. பொங்கல் ரேஸ் உறுதி என்றாலும், இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் எடுத்த அணுகுமுறை, போட்டியை விட மரியாதை மற்றும் நம்பிக்கையை முன்னிலைப்படுத்தியது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications